சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வெள்ளம், டிராஃபிக்.. ஸ்தம்பித்த சென்னை.. தலைநகர் இப்போது எப்படி இருக்கிறது? களநிலவரம் இதுதான்!

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் நேற்று மழையின் போது பெரும்பாலான பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டது. தற்போது பல்வேறு இடங்களில் இயல்பு நிலை திரும்பி வருகிறது.

Recommended Video

    சென்னையை அதிர வைத்த மழை: தி நகர், மேற்கு மாம்பலத்தில் மின்நிறுத்தம்.. மக்கள் அவதி!

    சென்னையில் நேற்று மழையின் போது பெரும்பாலான பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டது. நேற்று மைலாப்பூர், எம்ஆர்சி நகர், மெரினா சாலை, நுங்கம்பாக்கம் ஆகிய இடங்களில் எல்லாம் 200 மிமீ மழையை தாண்டிவிட்டது.

    அதேபோல் ஆழ்வார்பேட்டை, மீனம்பாக்கம், வளசரவாக்கம், ஈசிஆர் சாலை முழுக்க மழை அளவு 100 மிமீ அளவை தாண்டிவிட்டது. நேற்று வெள்ளத்தோடு சேர்ந்து கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

    எதிர்பாராத மழை.. முடங்கிய சாலைகள்.. கடும் டிராபிக்.. தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களுக்கு விடுமுறை எதிர்பாராத மழை.. முடங்கிய சாலைகள்.. கடும் டிராபிக்.. தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களுக்கு விடுமுறை

    டிராபிக்

    டிராபிக்

    பல இடங்களில் வாகனங்கள் 2-3 மணி நேரமாக ஒரே இடத்தில் முடங்கி நின்றது. பல முக்கிய இடங்களில் இரவு 1 மணி வரை கூட கடும் போக்குவரத்து நெரிசல் நிலவி வந்தது. கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், சோழவரம், தாம்பரம், குரோம்பேட்டை, வேளச்சேரி, எழும்பூர், அண்ணா சாலை, வடபழனி, சைதாப்பேட்டை, நந்தம்பாக்கம், சிந்தாதிரிப்பேட்டை, எழும்பூர், கோயம்பேடு, வடபழனி ஆகிய பகுதிகளில் கார்கள், பைக்குகள் 2-3 மணி நேரம் ஒரே இடத்தில் முடங்கி இருந்தது.

    மக்கள் அவதி

    மக்கள் அவதி

    இதனால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளானார்கள். இந்த நிலையில் நேற்று இரவோடு இரவாக மாநகராட்சி அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு பல இடங்களில் மோட்டார்களை இறக்கி தண்ணீரை வெளியேற்றினார்கள். வெள்ளம் அதிக அளவில் தேங்காமல் பல இடங்களில் தண்ணீர் வெளியேற்றப்பட்டது.

    தற்போது நிலவரம்

    தற்போது நிலவரம்

    தற்போது நிலவரப்படி போரூர், மதுரவாயல், பூந்தமல்லி, மதுரவாயல், குன்றத்தூர், வளசரவாக்கம், ஆவடி பகுதிகளில் தண்ணீர் வெளியேற்றப்பட்டுவிட்டது.கோடம்பாக்கம், தி.நகர், நசரத்பேட்டை,மாங்காடு, மீனம்பாக்கம், கிண்டி பகுதிகளில் பல சுரங்க பாதைகளில் இன்னும் பல இடங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது. இதனால் அங்கு நீரை வெளியேற்றும் பணிகள் நடந்து வருகின்றன.

    மின்சாரம்

    மின்சாரம்

    சில இடங்களில் இன்னும் மின்சாரம் வரவில்லை. தற்போது,பெரும்பாலான முக்கிய சாலைகளில் தண்ணீர் வடிந்து போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளது.அண்ணாசாலை உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து இயல்புநிலைக்கு திரும்பிவிட்டது. இதில் வேடிக்கையான விஷயம் நேற்று மழை காரணமாக கடும் டிராபிக் ஏற்பட்டது. இதனால் பல இடங்களில் மக்கள் ஆங்காங்கே கார்களை நிறுத்திவிட்டு நடந்தே வீட்டிற்கு சென்றுள்ளனர்.

    கார்கள்

    கார்கள்

    இதனால் சென்னையில் சாலைகளில் பல இடங்களில் கார்கள் நிறுத்தப்பட்டுள்ளன. அதேபோல் சென்னையில் பல இடங்களில் அரசு பேருந்துகளும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளது. 2-3 மணி நேரமாக வாகனங்கள் எங்கும் நகரவில்லை. இதனால் பல இடங்களில் அப்படியே வாகனங்களை நிறுத்திவிட்டு மக்கள் நடந்தும், மெட்ரோ மூலமும் வீடுகளுக்கு சென்றுள்ளனர்.

    English summary
    Weather News: How is Chennai right now after such a heavy spell yesterday for 12 hours?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X