சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

எச்சரிக்கை! சென்னையை புரட்டி எடுத்த மழை.. அதி தீவிர மழை பெய்ய போகிறதாம்! இன்று எப்படி இருக்கும்?

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் கனமழை பெய்தது. தற்போது ஒரு சில இடங்களில் விட்டு இருக்கும் கனமழை மீண்டும் தீவிரம் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாண்டஸ் தமிழ்நாட்டை நோக்கி வேகமாக வந்து கொண்டு இருக்கிறது. சென்னைக்கு தென்கிழக்கே 270 கி.மீ. தொலைவில் மாண்டஸ் புயல் உள்ளது. இன்று இரவு சென்னைக்கு அருகே கடல் பகுதியை இந்த புயல் எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காரைக்காலுக்கு தென்கிழக்கில் 200 கி.மீ. தொலைவில் மாண்டஸ் புயல் உள்ளது. அதேபோல் நாகப்பட்டினம் அருகில் இருப்பதாலும் புயல் காரணமாக காரைக்கால், நாகப்பட்டினம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் பலத்த காற்று வீசிக்கொண்டு இருக்கிறது.

நடுவானில் நடக்கும் உயிர்போராட்டம்.. மாண்டஸ் புயல் எந்த மாவட்டங்களை தாக்க போகிறது? வல்லுனர் வார்னிங் நடுவானில் நடக்கும் உயிர்போராட்டம்.. மாண்டஸ் புயல் எந்த மாவட்டங்களை தாக்க போகிறது? வல்லுனர் வார்னிங்

சென்னை

சென்னை

இந்த புயல் காரணமாக சென்னையில் நேற்று இரவில் இருந்து கனமழை பெய்து வருகிறது. அரும்பாக்கம், கோயம்பேடு, காசிமேடு , ராயப்பேட்டை, கிண்டி, வடபழனி ஆகிய பகுதிகளில் நேற்று இரவு முழுக்க கனமழை பெய்தது. திருவொற்றியூர் , எண்ணூர், தேனாம்பேட்டை, அண்ணா சாலை, மெரினா கடற்கரை, பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்தது. சைதாப்பேட்டை, நுங்கம்பாக்கம், ஆகிய பகுதிகளில் இரவு முழுக்க மழை பெய்தது. அதிகாலை நேரங்களில் மழை தீவிரமாக இருந்தது. மாண்டஸ் புயல் காரணமாக சென்னையில் பலத்த காற்று வீசி வருகிறது.

புயல் சென்னையை நெருங்கி வருவதால் காற்றின் வேகம் நிமிடத்திற்கு நிமிடம் அதிகரித்து உள்ளது. முக்கியமாக கடலோர பகுதிகளில் சூறைக்காற்று வீசிக்கொண்டு இருக்கிறது. ஏற்கனவே இருக்கும் டிசம்பர் குளிர், மழையால் ஏற்பட்ட குளிர்ச்சி, தற்போது வீசும் காற்று ஆகியவற்றால் சென்னை உரைந்துகொண்டு இருக்கிறது. பலத்த காற்று காரணமாக மக்கள் வீட்டிற்கு உள்ளே இருக்கும்படி போலீசார் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மக்கள் வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்கும்படி கூறப்பட்டு உள்ளது.

சென்னை மழை

சென்னை மழை

சென்னையில் உள்ள கடல் பகுதிகள் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. மெரினா, பெசன்ட்நகர், திருவான்மியூர் கடல்கள் கொந்தளிப்புடன் காணப்பட்டு வருகிறது. புயல் நெருங்க நெருங்க கடலும் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. இதனால் மக்கள் கடலோர பகுதிகளுக்கு செல்ல வேண்டாம். கடலை பார்க்க செல்ல வேண்டாம். வீட்டிற்கு உள்ளேயே இருங்கள். தீவிர கடல் பகுதிகளுக்கு சென்று செல்பி எடுக்க முயற்சி செய்ய வேண்டாம் என்றும் போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

புயல்

புயல்

புயல் காரணமாக எழும்பூர், ஆவடி, வேளச்சேரி, தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் அதிகாலையில் மழை பெய்தது. மழை காரணமாக சில இடங்களில் அதிகாலையில் கனமழை பெய்தது. இந்த மழை காரணமாக பெரிதாக சாலைகளில் எங்கும் தண்ணீர் தேங்கவில்லை. ஏற்கனவே கட்டப்பட்ட வெள்ள நீர் வெளியேற்றும் கால்வாய்கள் காரணமாக தண்ணீர் தேங்குவது பெரிய அளவில் கட்டுப்படுத்தப்பட்டது. ஒரு சில இடங்களில் மட்டும் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியது. ஆனால் சென்னைக்கு தீவிர கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

அதிதீவிர மழை

அதிதீவிர மழை

அதி தீவிர மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்து உள்ளதால், சென்னையில் வேகமாக தண்ணீர் வடியுமா? இந்த தீவிர கனமழையை வெள்ள நீர் கால்வாய் சமாளிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. சென்னையில் நேற்று இரவு முழுக்க கனமழை பெய்ததால் பல இடங்களில் ரெக்கார்ட் மழை பதிவாகி உள்ளது. திருவிக நகர் - 82 மி.மீ, அண்ணாநகர் மேற்கு - 79 மி.மீ, கோடம்பாக்கம் - 77 மி.மீ, திருவொற்றியூர் - 75 மி.மீ, தேனாம்பேட்டை - 74 மி.மீ, ஐஸ் ஹவுஸ் - 72 மிமீ, நந்தனம் - 71 மி.மீ, கொளத்தூர் - 70 மி.மீ, தொண்டையார்பேட்டை - 69 மி.மீ, மாதவரம் - 69 மி.மீ, நுங்கம்பாக்கம் - 68 மி.மீ, ராஜா அண்ணாமலைபுரம் - 68 மி.மீ, மீனம்பாக்கம் - 68 மி.மீ மழை பதிவாகி உள்ளது. இந்த மழை காரணமாக வடகிழக்கு பருவமழை கோட்டா இன்றோடு சென்னையில் நிறைவு பெறும் வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
\Weather Report: Many places got heavy rain in Chennai, Extreme rain to fall today .
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X