வெப்பச்சலனத்தால் கடலோர மாவட்டங்களில் 5 நாட்களுக்கு மழை... பலத்த காற்று வீசும்
வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் கடலோர மாவட்டங்கள் அதனை ஒட்டிய உள் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.
சென்னை: தமிழ்நாட்டில் வெப்பச்சலனத்தின் காரணமாக கடலோர மாவட்டங்களிலும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்களிலும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் கணித்துள்ளது. நீலகிரி, கோவை, சென்னை, புதுச்சேரியிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தென்மேற்குப் பருவக்காற்றினால் கடந்த சில வாரங்களாகவே மேற்குத் தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் நீலகிரி, கோவை, மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரியில் 3 செமீ மழை பெய்துள்ளது. கோவை, சின்னக்கல்லார், சோலையாரில் 1 செமீ மழை பெய்துள்ளது. தமிழகத்தில் மேலும் 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.
சென்னை வானிலை மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்றும் நாளையும் கடலோர மாவட்டங்களிலும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நீலகிரி, கோவை, தேனி, சென்னை, புதுச்சேரியில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
21ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரைக்கும் மேற்குத் தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் உள் மாவட்டங்களிலும் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. புதுச்சேரி, காரைக்காலில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னையைப் பொறுத்தவரைக்கும் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் ஆகவும் குறைந்த பட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.
இன்று முதல் 23ஆம் தேதி வரைக்கும் அரபிக்கடல் பகுதிகளில் மணிக்கு 65 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன்












Click it and Unblock the Notifications