பிரேக் ஓவர்.. காலையில் வடசென்னை.. இப்போது தென் சென்னை.. வெளுக்கும் மழை.. வெதர்மேன் போஸ்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் பெரும்பாலான இடங்களில் ஓய்ந்திருந்த மழை தென் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வெளுக்கும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நேற்று இரவ முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழகத்திற்கு பலனை கொடுக்கும் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 26 ஆம் தேதி தொடங்கியது. தமிழகத்தில் நவம்பர் 1ஆம் தேதி முதல் இன்று வரை பெய்த மனையில் 43 சதவீதம் கூடுதல் மழை பொழிவு ஏற்பட்டுள்ளது.

அதிகபட்சமாக கோவை மாவட்டமும், குறைந்தபட்சமாக திருப்பத்தூர் மாவட்டமும் மழை சதவீதத்தை பெற்றுள்ளது. சென்னையில் ஒரே வாரத்தில் வடகிழக்கு பருவமழை கூடுதலாக 26 சதவீதம் பெற்றுள்ளது.

இரு தினங்கள்

இரு தினங்கள்

எனினும் சென்னையில் அடுத்த இரு தினங்களுக்கு மழை தொடரும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. நேற்று இரவும் இன்று காலையும் பெய்து வரும் மழையால் வடசென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கனமழை பெய்ததால் சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் எங்கு திரும்பினாலும் வெள்ளக்காடாகவுள்ளது.

மழை ஓய்ந்தது

மழை ஓய்ந்தது

இந்த நிலையில் சிறிது நேரத்திற்கு மழை ஓய்ந்திருந்தது. இது மீண்டும் தொடங்கும் என வெதர்மேன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் மழை ஓய்வு எடுத்தது முடியும் நேரம் வந்துவிட்டது. தற்போது மழை பெய்யாத இடங்களில் மழை பெய்வதற்கான நேரமாகும்.

புறநகர் பகுதி

புறநகர் பகுதி

தென் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை வெளுக்கும். இன்று காலை சென்னையில் பெய்த மழையின்போது இந்த பகுதிகளில் நல்ல மழை கிடைக்கவில்லை. அதனால் அங்கெல்லாம் நல்ல மழை பெய்யும். மயிலாப்பூர் டிஜிபி அலுவலகத்தில் 227 மி.மீ. மழை பெய்துள்ளது.

தாமரைப்பாக்கம்

தாமரைப்பாக்கம்

நுங்கம்பாக்கத்தில் 215 மி.மீ மழையும் , அம்பத்தூரில் 205 மி.மீ. மழையும், வில்லிவாக்கத்தில் 200 மி.மீ. மழையும், அயனாவரத்தில் 184 மி.மீ. மழையும், எம்ஆர்சி நகரில் 171 மி.மீ மழையும் நந்தனத்தில் 158 மி.மீ. மழையும் பெய்துள்ளது. குறைந்தபட்சமாக திருத்தணி, பூந்தமல்லியில் தலா 45 மி.மீ மழையும் பொன்னேரியில் 46 மி.மீ மழையும் தாமரைப்பாக்கத்தில் 48 மி.மீ மழையும் பெய்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+