தலைமை நீதிபதி முனீஸ்வர நாத் பாண்டாரிக்கு வரவேற்பு - கீழடி புத்தகம் கொடுத்து வாழ்த்திய ஸ்டாலின்
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றுள்ள முனீஸ்வர நாத் பாண்டாரிக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் வரவேற்பு விழா நடத்தப்பட்டது.
சென்னை: உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்ட நீதியரசர் முனீஸ்வர் நாத் பண்டாரிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் மலர்கொத்து வழங்கினார். பின்னர் பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்த மு.க.ஸ்டாலின் தமிழக அரசு வெளியிட்ட கீழடி புத்தகத்தை பரிசாக அளித்தார்.
சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக முனீஸ்வர் நாத் பண்டாரி இன்று பதவி ஏற்றார் . அவருக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். சென்னை ராஜ்பவனில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவி வகித்த இவர், சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக கடந்த நவம்பர் மாதம் நியமிக்கப்பட்டார். உச்ச நீதிமன்றம் கொலிஜியம் பரிந்துரையின்படி இவர், தற்போது குடியரசுத் தலைவரின் உத்தரவின் பேரில் புதிய தலைமை நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றுள்ள முனீஸ்வர நாத் பாண்டாரிக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் வரவேற்பு விழா நடத்தப்பட்டது. அதில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள், மத்திய மாநில அரசு வழக்கறிஞர்கள், இந்திய மற்றும் தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில்கள் மற்றும் வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்க தலைவர் ஜி.மோகனகிருஷ்ணன், மெட்ராஸ் வழக்கறிஞர் சங்கத்தின் தலைவர் கமலநாதன், பெண் வழக்கறிஞர் சங்க தலைவர் லூயிசால் ரமேஷ், லா சங்க தலைவர் செங்குட்டுவன் அகியோர் வரவேற்று பேசினர். வழக்குகளை விசாரிப்பதற்கும், நீதிபரிபாலனம் வழங்குவதிலும் முழு ஒத்துழைப்பு தருவதாக அனைவர் தரப்பிலும் தெரிவித்தனர்.
இதனையடுத்து ஏற்புரை ஆற்றிய தலைமை நீதிபதி முனீஸ்வர நாத் பண்டாரி, பாரம்பரியமிக்க நீதிமன்றத்தில் இரண்டாவது முறையாக பதவியேற்றது மகிழ்ச்சி அளிப்பதாகவும், 51 வது தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றது பெருமைக்குரியது என்றும் தெரிவித்தார். பதவியேற்ற கடந்த 2 மாதங்களில் வழக்கறிஞர்கள், சக நீதிபதிகள் என அனைத்து தரப்பும் முழுமையான ஒத்துழைப்பு கொடுத்துள்ளதாகவும், வழக்குகளை விரைந்து முடிக்க அவை உதவியாக இருந்ததாகவும் குறிப்பிட்டு பேசினார்.வழக்கு தொடர்பான பிரச்சினைகளுக்கும், நீண்ட கால நிலுவை வழக்குகளை முடிப்பதற்கும் எப்போதும் தன்னை அணுகலாம் என்றும் தெரிவித்தார்.

இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்ட நீதியரசர் முனீஸ்வர் நாத் பண்டாரிக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் மலர்கொத்து வழங்கினார். பின்னர் பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்த மு.க.ஸ்டாலின் தமிழக அரசு வெளியிட்ட கீழடி புத்தகத்தை அளித்து வாழ்த்து கூறினார்.
-
ஒரு கிராம் தங்கம் வெறும் ரூ.181 தான்.. முட்டை விலையை விட குறைவு.. எந்த நாட்டில் தெரியுமா? பின்னணி -
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை -
அலர்ட்..! 10000 ரூபாய்க்கு மேல் பணம் அனுப்பினால் 'லாக்'.. ஆர்பிஐ கொண்டு வரும் புது ரூல்ஸ்! -
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
ஐடி ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த TCS.. மாச மாசம் பணம் சொளையா வரப்போகுது! -
சிறகடிக்க ஆசை: மீனாவிடம் முத்து மறைக்கும் உண்மை! விஜயா பற்றி அண்ணாமலைக்கு தெரிந்த பெரிய ரகசியம்! -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
விஜய்யுடன் சேர்ந்து முதல்வராக முயன்ற எடப்பாடி! நான்தான் முறியடித்தேன்.. போட்டு உடைத்த செங்கோட்டையன் -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ஈரான் வேலையை காட்டியது.. ஹார்முஸ்-ல் கப்பல் செல்ல அனுமதி மறுப்பு.. அமெரிக்கா ஷாக்!












Click it and Unblock the Notifications