சோதனை மேல் சோதனை! போதுமடா சாமி! ஸ்டாலின் கையில் 3 அஸ்திரம்! எடப்பாடிக்கு காத்திருக்கும் ஆசிட் டெஸ்ட்
சென்னை: ஒரு பக்கம் ஓ பன்னீர்செல்வம் தரும் நெருக்கடி.. இன்னொரு பக்கம் சசிகலா காட்டும் பூச்சாண்டி.. இது போக சொந்த அணியிலேயே எப்போது யார் கழன்று கொள்வார்கள் என்று தெரியாத அளவிற்கு பிரச்சனை.. இதெல்லாம் போக உச்ச நீதிமன்றத்தில் நடக்கும் பொதுக்குழு வழக்கு என்று எடப்பாடிக்கு ஏகப்பட்ட பிரச்சனைகள் இருக்கின்றன.
எந்த பக்கம் திரும்பினாலும் நெருக்கடி என்றுதான் எடப்பாடி பழனிச்சாமியின் அரசியல் வாழ்க்கை நகர்ந்து கொண்டு இருக்கிறது. இப்படி பல பிரச்சனைகளுக்கு இடையில்தான் 3 முக்கியமான பிரச்சனைகள் எடப்பாடிக்கு ஏற்பட்டு உள்ளது.
இந்த 3 பிரச்சனைகளிலும் லகான் என்னவோ முதல்வர் ஸ்டாலின் கையில்தான் இருக்கிறது. இதில் ஸ்டாலின் என்ன முடிவு எடுப்பார் என்பதை பொறுத்தே பிரச்சனையின் வீரியம் தெரிய வரும்.

பிரச்சனை 1
தமிழக சட்டமன்றம் 17-ந்தேதி கூடுகிறது. இந்த கூட்டத்தொடரில், தமிழக அரசின் சார்பில் முன் வைத்து விவாதிக்கப்பட வேண்டிய பொருள் பற்றிய எதிர்பார்ப்புகளை விட வேறு ஒரு விஷயம்தான் அதிக கவனம் பெற்றுள்ளது. இந்த சட்டசபை கூட்டத்தொடரில் தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பான அருணா ஜெகதீசன் விசாரணை அறிக்கையும் தாக்கல் செய்யப்பட உள்ளது. ஏற்கனவே இதில் போலீஸ் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டது தொடர்பான விவரங்கள் இணையத்தில் வெளியாகின.

முதல்வர் ஸ்டாலின்
இதில் எடப்பாடி தலைமையிலான முந்தைய அரசில் போலீஸ் நடந்து கொண்ட விதம் தொடர்பான கடுமையான விவரங்கள் இடம்பெற்று இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அறிக்கையை ஸ்டாலின்தான் சட்டசபையில் தாக்கல் செய்வார். அப்போது அவர் ஏதாவது விசாரணை அல்லது நடவடிக்கைக்கு உத்தரவிட்டால் அது மிகப்பெரிய விஷயமாக மாறும். அறிக்கையை தாக்கல் செய்தது போலீஸ் நடவடிக்கை எதற்காவது உத்தரவிட்டால் அது மிகப்பெரிய நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.

பிரச்சனை 2
இது ஒரு பக்கம் எடப்பாடிக்கு சிக்கலை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் சட்டசபையில் இருக்கை விவகாரமும் எடப்பாடிக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. சட்டசபையில் தற்போது எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி எதிர்வரிசையில் முதல் வரிசையில் உள்ளார். அவருக்கு அருகில் இதுவரை எதிர்க்கட்சி துணை தலைவராக இருக்கும் ஓ பன்னீர்செல்வம் அமர்ந்து உள்ளார். இருவரும் அருகருகே அமர்ந்து உள்ளனர். இதை எடப்பாடி பழனிசாமி எதிர்த்து உள்ளார். இருக்கைகளை மாற்றி அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

அப்பாவு
இதில் சபாநாயகர் அப்பாவுதான் முடிவு எடுப்பார். என்றாலும் அவர் முதல்வர் ஸ்டாலினிடம் ஆலோசனை கேட்டுள்ளார் என்று கூறப்படுகிறது. இதில் முதல்வர் ஸ்டாலின் என்ன ஆலோசனை வழங்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. எடப்பாடி - ஓபிஎஸ் இருக்கைகளை மாற்ற வேண்டாம் என்று ஸ்டாலின் மட்டும் கூறினால்.. எடப்பாடி சட்டசபைக்கு வருவதிலேயே பெரிய சிக்கல் ஏற்படும். இந்த இரண்டு விஷயங்கள் ஒரு பக்கம் 3 பிரச்சனை ஒன்றும் உள்ளது. அது கோடநாடு வழக்கு.

கோடநாடு வழக்கு
கோடநாடு வழக்கு முறையாக சிபிசிஐடி வசம் சென்றுள்ளது. இந்த வழக்கு விசாரணை ஆவணங்களை சிபிசிஐடி தரப்பிற்கு தனிப்படை போலீசார் கொடுத்துள்ளனர். 1100 பக்க அறிக்கையை போலீசார் வழங்கி உள்ளனர். வழக்கை முதல்வர் ஸ்டாலின் சிபிசிஐடிக்கு மாற்றியது மிக முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது. இந்த வழக்கில் சயான் நேரடியாக எடப்பாடி பழனிசாமி மீதே குற்றஞ்சாட்டி இருக்கிறார். எடப்பாடி பழனிசாமியை நோக்கி இவர் தனது கையை திருப்பி உள்ளார்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிச்சாமி சொல்லித்தான் கனகராஜ் இந்த திட்டங்களை தீட்டியதாக சயான் போலீசில் வாக்குமூலம் அளித்ததாக கூறப்படுகிறது. இப்படி வழக்கில் போகஸ் எடப்பாடி பக்கம் திரும்பி உள்ளது. இந்த நிலையில்தான் வழக்கு தற்போது சிபிசிஐடி வசம் சென்றுள்ளது. இந்த நிலையில்தான் எடப்பாடி இதை எப்படி எதிர்கொள்வார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அதிமுக உட்கட்சி மோதலை தாண்டி இந்த 3 விஷயங்களும் எடப்பாடிக்கு எதிராக திரும்பி உள்ளது அவருக்கு காத்திருக்கும் அமில சோதனையாக பார்க்கப்படுகிறது!
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
2016 சட்டமன்ற தேர்தலில்.. அதிமுகவின் இன்பதுரை வெற்றி செல்லாது.. உயர்நீதிமன்றம் அதிரடி! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications