3 பாயிண்ட்ஸ்களை அடுக்கிய எடப்பாடி.. ஒரே பதிலில் செக் வைத்த ஓபிஎஸ்.. ஹைகோர்ட்டில் முக்கிய திருப்பம்!
சென்னை: அதிமுக பொதுக்குழு வழக்கில் ஓ பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி இடையே காரசார வாதங்கள் வைக்கப்பட்டு வருகின்றன.
Recommended Video
அதிமுக பொதுக்குழு ஜூலை 11ம் தேதி நடந்தது. இதற்கு எதிராக ஓ பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
நீதிபதி ஜெயசந்திரன் முன் வழக்கு விசாரணை நடந்து வருகிறது. அதிமுக பொதுக்குழு முதலில் சட்டப்படி நடந்ததா? கட்சி விதிகளை பின்பற்றி நடத்தப்பட்டதா? என்பதே இந்த வழக்கில் முக்கிய கேள்வியாக உள்ளது.
நீதிபதி நேற்று இதே கேள்விகளைத்தான் எழுப்பி இருந்தார்.

எடப்பாடி வாதம்
இந்த வழக்கில் அதிமுக பொதுக்குழு குறித்த முக்கியமான வாதங்களை எடப்பாடி பழனிசாமி தரப்பு வைத்தது. எடப்பாடி தரப்பு வைத்த 3 முக்கியமான வாதங்கள்.
பாயிண்ட் 1 - அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டன. ஏனென்றால் இந்த பதவிகளுக்கு ஜூன் 23ம் தேதி பொதுக்குழுவில் ஒப்புதல் தரப்படவில்லை.
பாயிண்ட் 2 - அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதி ஆனாலும்.. பொதுக்குழு உறுப்பினர்களின் பதவிகள் காலாவதி ஆகாது.

முக்கிய 3 விஷயம்
பாயிண்ட் 3 - இதனால் பொதுக்குழுவை மீண்டும் கூட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் கோரிக்கை வைத்தன. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதி ஆகிவிட்டதால் மூத்த உறுப்பினர்கள் பொதுக்குழு பற்றி அறிவித்தனர். இது டிவியில் அறிவிக்கப்பட்டது. அதேபோல் 15 நாட்களுக்கு முன்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டது. எனவே இந்த பொதுக்குழு செல்லும் என்று எடப்பாடி தரப்பு வாதம் வைத்தது.

ஓபிஎஸ் ஒரே பாயிண்ட்
எடப்பாடி வைத்த இந்த 3 பாயிண்ட்களை ஒரே பாயிண்டில் ஓ பன்னீர்செல்வம் தரப்பு மடக்கியது. அதில் அதிமுக பொதுக்குழு ஜூன் 23ம் தேதி நடந்தது. இதில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை அங்கீகரிக்கவில்லை என்று கூறுவது தவறு. ஏனென்றால் அந்த பொதுக்குழுவில் அப்படி ஒரு தீர்மானமே கொண்டு வரப்படவில்லை., உட்கட்சி தேர்தலில் வென்றவர்களை பாராட்டும் தீர்மானம் மட்டுமே இருந்தது. மற்றபடி ஒருங்கிணைப்பாளர் , இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை அங்கீகரிப்பது பற்றிய தீர்மானம் எதுவும் இல்லை.

காலாவதியாகாது
அதோடு பதவிகளை அந்த பொதுக்குழுவில் அங்கீகரிக்கவில்லை என்றால் பதவிகள் காலாவதியாகிவிடும் என்றும் தீர்மானம் எதுவும் இல்லை. அப்படி இருக்கும் போது ஒருங்கிணைப்பாளர் , இணை ஒருங்கிணைப்பாளர் பதவி எப்படி காலாவதியாகும். என்ன விதி எப்படி சொல்கிறது? அதோடு பொதுக்குழுவை டிவி வழியாக அறிவித்தோம் என்று சொல்வது எல்லாம் கணக்கில் சேராது. முறையாக 15 நாட்களுக்கு முன் நிகழ்ச்சி நிரல் அனுப்பப்படவில்லை, என்று ஓ பன்னீர்செல்வம் முக்கியமான வாதத்தை வைத்துள்ளது.
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
2016 சட்டமன்ற தேர்தலில்.. அதிமுகவின் இன்பதுரை வெற்றி செல்லாது.. உயர்நீதிமன்றம் அதிரடி! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications