சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"துணை முதல்வர்!" உதயநிதி இப்போ தான் அமைச்சராவே ஆனாரு.. அதுக்குள் இப்படியா! கேரளாவில் எழுந்த குரல்

Google Oneindia Tamil News

சென்னை: உதயநிதி ஸ்டாலின் முதல்வராகி சில நாட்களே ஆகியுள்ள நிலையில், அவருக்குத் துணை முதல்வர் பதவி தர வேண்டும் என்ற கோரிக்கை கேரளாவில் இருந்து எழுந்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாகவே தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினின் மகன் உதயநிதி தீவிர அரசியலில் இருந்து வருகிறார். முதலில் தயாரிப்பாளராகும் நடிகராகவும் தமிழக மக்களிடம் அறிமுகமான உதயநிதி, சில ஆண்டுகளாகத் தீவிர அரசியலில் இறங்கினார்.

2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் அவர் மாநிலம் முழுக்க பிரசாரம் செய்தார். உதயநிதி தமிழ்நாடு முழுக்க பிரசாரம் செய்த முதல் தேர்தல் அதுதான். அதில் திமுக 39 மக்களவை இடங்களைக் கைப்பற்றியது.

பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழா.. 2வது மனைவிக்கும் முக்கியத்துவம் தாங்க! பேத்தி கோரிக்கை! பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழா.. 2வது மனைவிக்கும் முக்கியத்துவம் தாங்க! பேத்தி கோரிக்கை!

உதயநிதி

உதயநிதி

அதுவரை எந்தவொரு பதவியும் உதயநிதிக்குக் கொடுக்கப்படாமல் இருந்த நிலையில், அவருக்குக் கட்சியில் இளைஞரணியில் பொறுப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. பல்வேறு தரப்பினரும், பல மாவட்டங்களிலும் இதை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து கடந்த 2019ஆம் ஆண்டு ஜூலை மாதம், திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி நியமிக்கப்பட்டார். இதையடுத்து இளைஞரணியில் பல ஆயிரம் பேரை உதயநிதி புதிதாக இணைத்துள்ளார். அதைத் தொடர்ந்து 2021 சட்டசபைத் தேர்தலில் அவருக்கு சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு தரப்பட்டது.

தீவிர அரசியல்

தீவிர அரசியல்

இதில் உதயநிதி மிகப் பெரியளவில் வென்றார். இதையடுத்து அப்போதே அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என்றே பலரும் எதிர்பார்த்தனர். இருந்த போதிலும், அவருக்கு அமைச்சரவையில் இடம் தரப்படவில்லை. அதேநேரம் தமிழகத்தில் அதிகபட்சம் 35 அமைச்சர்கள் இருக்கலாம் என்ற நிலையில், 34 பேர் மட்டுமே அமைச்சர்களாகப் பதவியேற்றனர். அப்போதே உதயநிதி எப்போது வேண்டுமானாலும் அமைச்சராகப் பதவியேற்கலாம் என்றும் அதற்காகவே 34 பேருக்கு மட்டுமே அமைச்சர் பதவி தரப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது.

அமைச்சராகப் பொறுப்பு

அமைச்சராகப் பொறுப்பு

எம்எல்ஏவாக அவர் தொடர்ந்து பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வந்தார். இதற்கிடையே சில மாதங்களுக்கு முன்பு, உதயநிதிக்கு அமைச்சர் பொறுப்பு வழங்க வேண்டும் என்ற குரல் மீண்டும் எழுந்தது. மேலும், அமைச்சரவையில் செயல்படாத அமைச்சர்கள் நீக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியானது. இருப்பினும், அப்போது எதுவும் நடக்கவில்லை. இதற்கிடையே சமீபத்தில் மீண்டும் இது தொடர்பாகப் பேச்சு எழுந்தது.. பல மூத்த அமைச்சர்களும் உதயநிதியை முதல்வராக்க வேண்டும் என வலியுறுத்தினர்.. இந்தச் சூழலில்தான், கடந்த வாரம் புதன்கிழமை உதயநிதி அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார்.

கேரளாவில் இருந்து எழுந்த குரல்

கேரளாவில் இருந்து எழுந்த குரல்

அவருக்கு இளைஞர் நலன், விளையாட்டுத்துறை உள்ளிட்ட முக்கிய துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், அமைச்சராகிவிட்டதால், அவர் சினிமாவுக்கும் முழுக்கு போட்டுவிட்டார். அவர் அமைச்சராகப் பதவியேற்றே இன்னும் ஒரு வாரம் கூட ஆகாத நிலையில், அவரை துணை முதல்வராக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. அதுவும் கேரளாவில் இருந்து இந்த கோரிக்கை எழுந்துள்ளது. திருவனந்தபுரத்தில் கேரள மாநில திமுக அமைப்பாளர் கே ஆர் முருகேசன் தலைமையில் கேரள திமுக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

தீர்மானம் நிறைவேற்றம்

தீர்மானம் நிறைவேற்றம்

இந்தக் கூட்டத்தில் உதயநிதியைத் துணை முதல்வராக நியமிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தக் கூட்டத்தில் மொத்தம் 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதில் முதல் தீர்மானமாக இளம் தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்குத் துணை முதல்வர் பதவி வழங்கி கௌரவிக்க வேண்டும் எனக் கேரள மாநில திமுக சார்பாக வலியுறுத்துகிறோம் எனக் கூறப்பட்டுள்ளது. மேலும், கேரளாவில் உள்ள 14 மாவட்டங்களிலும் அடுத்த ஓராண்டிற்குள் கருணாநிதியின் சிலையை நிறுவ வேண்டும்.. கேரளாவில் உள்ளாட்சி, சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தலில் தலைமை கழகத்தின் அனுமதி பெற்றுப் போட்டியிடப்படும்.

கேரளா திமுக

கேரளா திமுக

கேரள மாநிலத்தில் இந்தியைக் கட்டாயமாக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்... மேலும், நீட் விலக்கை வலியுறுத்தி சட்டசபையில் மசோதா உள்ளிட்ட தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளது. பல்வேறு திமுக மூத்த தலைவர்கள் கோரிக்கைக்குப் பிறகு இப்போது தான் உதயநிதி அமைச்சராக்கப்பட்டார். அவர் அமைச்சராகி இன்னும் ஒரு வாரம் கூட நிறைவடையாத நிலையில், அவருக்குத் துணை முதல்வர் பதவி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

English summary
Minister Udhayanidhi need to be appointed as deputy chief minister says Kerala DMK: Resoultions passed by Kerala DMK.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X