சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சென்னை வானத்தில் பார்த்தால்.. சட்டென தோன்றிய வெளிச்சம்.. உற்று கவனித்தால்.. என்னங்க இது? குழப்பம்!

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை வானத்தில் நேற்று இரவு தோன்றிய வெளிச்சம் ஒன்று மக்கள் இடையே குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

மனித சமூகம் கடந்த சில நூற்றாண்டுகளாகவே வேற்றுகிரக வாசிகள் குறித்த தீவிர ஆராய்ச்சிகளை செய்து வருகிறது. மனிதன் நிலவில் கால் வைத்தது தொடங்கி தற்போது செவ்வாய் கிரக ஆராய்ச்சிகள், ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி வரை அனைத்துமே வேற்றுகிரக வாசிகளை தேடும் மனித ஆராய்ச்சியின் ஒரு அங்கம்தான்.

உலகம் முழுக்க பல நாடுகளில் மக்கள் பலர் தாங்கள் ஏலியன்களை பார்த்து உள்ளதாக குறிப்பிட்டு உள்ளனர். அதேபோல் பலர் தாங்கள்எப் யுஎப்ஓக்களை பார்த்ததாகவும் குறிப்பிட்டு உள்ளனர்.

தமிழ்நாட்டில் மது விற்பனையை 6 மணி நேரமாக குறைக்கவும்! மதியம் 2 டூ இரவு 8 வரை போதும்! பாமக யோசனை! தமிழ்நாட்டில் மது விற்பனையை 6 மணி நேரமாக குறைக்கவும்! மதியம் 2 டூ இரவு 8 வரை போதும்! பாமக யோசனை!

பறக்கும் தட்டுகள்

பறக்கும் தட்டுகள்

உலகம் முழுக்க யுஎப்ஓ எனப்படும் அடையாளம் தெரியாத பறக்கும் தட்டுகள், பறக்கும் சாதனங்கள் குறித்து மக்கள் பலர் புகார் வைப்பது உண்டு. வித்தியாசமான பறக்கும் தட்டுக்களை பார்த்ததாக மக்கள் பலர் புகார் வைப்பது உண்டு. அமெரிக்காவில் இது குறித்து பலர் புகார் வைத்து இருந்தாலும் கூட, கடந்த வருடம் வரை அமெரிக்கா இந்த யுஎப்ஓ குறித்து அதிகாரபூர்வமாக எதையும் ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த தட்டுகளை மக்கள் பார்த்ததை மறுத்து வந்த அமெரிக்கா கடந்த 2021ம் வருடம் இப்படி தட்டுகள் பறந்தது உண்மைதான் என்றது. இது தொடர்பாக அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பென்டகன் அதிகாரபூர்வமாக வீடியோ வெளியிட்டு, யுஎஃப்ஓ (பறக்கும் தட்டு) குறித்த வீடியோக்களை பகிர்ந்தது.

வீடியோக்கள்

வீடியோக்கள்

இந்த வீடியோவில் பறக்கும் தட்டு போன்ற ஒரு சாதனம் கருப்பு நிறத்தில் சென்று கொண்டு இருக்கிறது. முதலில் மிக மெதுவாக செல்லும் இந்த சாதனம் சில நிமிடத்தில் மிக வேகமாக பறந்து மறைந்துள்ளது. யுஎஃப்ஓ எனப்படும் அடையாளப்படுத்த முடியாத பறக்கும் பொருள் இருப்பதை ஒப்புக்கொண்டாலும் கூட இது வேற்றுகிரக வாசிகளுடையது என்று பென்டகன் தெரிவிக்கவில்லை. இந்த 144 யுஎப்ஓ விமானங்களும் கடந்த இரண்டு வருடமாக கண்டறியப்பட்டது. இந்த யுஎப்ஓ குறித்த போதிய தகவல்கள், டேட்டாக்கள் இல்லை. அதனால் இதை என்ன வகையான வகைப்படுத்த முடியாது. இது ஏலியனின் யுஎப்ஓ என்று சொல்ல முடியாது. அதே சமயம் ஏலியனின் வாகனம் இல்லை என்று மறுப்பதற்கும் போதிய டேட்டா இல்லை. இந்த யுஎப்ஓ எல்லாம் புதிய வகையாக உள்ளன என்று கூறி உள்ளனர்.

டேட்டா

டேட்டா

இந்த நிலையில்தான் சென்னை வானத்தில் நேற்று இரவு தோன்றிய வெளிச்சம் ஒன்று மக்கள் இடையே குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. சென்னையில் நேற்று திடீரென வானத்தில் சில இடங்களில் வெளிச்சமாக ஒரு போல இருந்துள்ளது. சிவப்பு + வெள்ளை கலந்த நிறத்தில் வெளிச்சமாக பறந்து உள்ளது. இந்த வெளிச்சம் அதன்பின் சில நிமிடங்களில் அப்படியே மாயமாக மறைந்து உள்ளது. பெரிய பந்து போல நெருப்பாக இந்த பொருள் பறந்து உள்ளது. @itsVRK என்ற ட்விட்டர் ஐடி இந்த வீடியோவையும் கூட இணையத்தில் பகிர்ந்து உள்ளது.

என்னது?

என்னது?

பலரும் இதை யுஎப்ஓ என்று பதில் அளித்து வருகின்றனர். அதாவது ஏலியன்களின் விமானம் என்று கூறி வருகின்றனர். இன்னும் சிலர் இது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார் லிங்க் என்று கூறி உள்ளனர். எலான் மஸ்க் தனது ஸ்டார் லிங்க் திட்டத்திற்காக கடந்த 2 வருடமாக 2200 செயற்கைகோள்களை விண்ணுக்கு அனுப்பி உள்ளார். உலகிலேயே ஒரு திட்டத்திற்காக அதிகம் அனுப்பப்பட்ட செயற்கைகோள்கள் இதுதான். இந்த ஸ்டார் லிங்க் என்பது நமக்கு இணையம் வழங்க போகும் புதிய திட்டம் ஆகும். ஆனால் உண்மையில் இது ஸ்டார் லிங்கும் கிடையாது. ஸ்டார் லிங்க் வரிசையாக ரயில் போலவே காட்சி அளிக்கும். அது நேர்கோட்டில் பயணிக்கும். பெரும்பாலும் வானில் தெரிந்த இந்த பொருள் சீன விளக்கு எனப்படும் நெருப்பில் பறக்க கூடிய பட்டம் போன்ற விளக்கு ஆகும். பொதுவாக தங்களின் ஆசைகள், கனவுகள் நிறைவேற மக்கள் சிலர் இதை பறக்க விடுவார்கள். பெரும்பாலும் வானத்தில் தெரிந்தது அந்த விளக்காக இருக்கும் என்று கூறப்படுகிறது.

English summary
What did people see in Chennai sky yesterday night? Why there was a bright moving light ball?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X