"சென்ட்டிமென்ட்".. சசிகலாவை பயமுறுத்தினாங்களாமே.. வேண்டாம்மா, ஆசைப்படாதீங்க.. நொறுங்கிய கணக்கு.. ஏன்
சசிகலாவுக்கு ஜோதிடர்களும், நம்பூதிரிகளும் முக்கிய அறிவுரையை கூறியுள்ளனராம்
சென்னை: ஆசை ஆசையாய் பலவித கனவுடன், 2 வருடங்களாக சசிகலா எடுத்துக் கொண்ட முயற்சிகளில், மண்ணை வாரிப்போட்டுள்ளனர் அவரது நலன்விரும்பிகள். யார் அவர்கள்? என்ன நடந்தது?
Recommended Video
பகுத்தறிவு, மதிநுட்பம், சிந்தனை வளம் என எத்துணை பலம் இருந்தாலும், பெரும்பாலான அரசியல்வாதிகளுக்கு ஜோதிடம் மீது நம்பிக்கை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது..
தங்களின் பதவிகளுக்கு எந்தவிதமான இடையூறும் வந்துவிடக்கூடாது என்ற பதட்டத்தில் ஜாதகம், ஜோதிடம் போன்றவற்றை நாடுவது வழக்கமாகி கொண்டே இருக்கிறது..

மாந்திரீகம்
அந்தவகையில், ஜெயலலிதா-சசிகலா இருவருமே, ஜோதிடம், ஜாதகம், மாயம், மாந்தீரிகம், யாகம், பூஜை, புனஸ்காரங்கள் என எதையும் விட்டுவைத்ததில்லை.. அதிலும் சசிகலாவுக்கு இதுபோன்ற விஷயங்களில் நிறைய நம்பிக்கை உண்டு.. ஒவ்வொரு அசைவையும் குறிபார்த்து, ஜோதிடம் கேட்டு, மாந்திரீகம் செய்து, எதையும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளவர் என்கிறார்கள்.. இந்த விஷயத்தில், அவருடைய கணவர் நடராஜனின் பகுத்தறிவு வாதங்கள் எதுவும் சசிகலாவிடம் எடுபடவில்லை என்று அன்றைய காலகட்டத்திலேயே சொல்லப்பட்டது..

கன்றுக்குட்டி
அவ்வளவு ஏன், 2 வருடங்களுக்கு முன்பு சிறையில் இருந்து ரிலீஸ் ஆகி வந்தபோதுகூட, வீட்டு வாசலில் ஒரு பசுவும் கன்றுக்குட்டியும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.. வீட்டிற்கு வந்ததே விடிகாலையில்தான்.. அந்த அதிகாலையிலும், அகஸ்தியர் கோயில் அர்ச்சகர், சசிகலா வீட்டிற்குள், பூஜை, யாகங்களை செய்ததாக தகவல்கள் வெளிவந்தன.. இப்போது, ஜெயிலில் இருந்து வெளியே வந்தும், சசிகலாவின் அரசியல் மந்த நிலையிலேயே உள்ளது..

மிஸ்ஸிங்
அவரது வழக்கமான அதிரடி இப்போதெல்லாம் மிஸ்ஸிங்.. கட்சியை பலப்படுத்தவும், ஒன்றிணைக்கவும், அவர் எடுத்த கொண்ட ஆடியோ ரிலீஸ் முதல், ஆன்மீக பயணங்கள் வரை அத்தனையும் சறுக்கலை சந்தித்துவிட்டன.. இப்போது கட்சியின் தலைமை போட்டிக்கு மேலும் 2 பேர் கூடுதலாக வந்துவிட்டதால், விழிபிதுங்கி நிற்கிறார்.. அதிமுகவில் ஒற்றை தலைமை, பொதுச்செயலாளர் விவகாரங்கள் குறித்து வெடித்த மோதல்கள் இன்னும் முற்றுப்பெறவில்லை. முற்றுப்புள்ளி விழுமா என்பதும் அவ்வளவு எளிதாக இருக்கவில்லை..

ஜெயம் + சக்ஸஸ்
இவ்வளவு களேபரங்கள் நடந்தும், அதிமுகவின் பொதுச்செயலாளர் என்றே தொடர்ந்து தன்னை அழைத்துக் கொண்டு வருகிறார் சசிகலா.. அவரது ஆதரவாளர்களும் பொதுச்செயலாளர் என்றே போஸ்டர்கள், பேனர்களை அடித்து ஒட்டிக் கொண்டிருக்கிறார்கள்.. இந்த நிலையில், சமீபத்தில் சசிகலாவை சில ஜோதிடர்கள் சந்தித்துள்ளனர். சசிகலாவிடம் அவர்கள், "ஜாதக ரீதியாக உங்களுக்கு அரசியல் யோகம் அமோகமாக இருக்கிறது. யார் போராடினாலும் போட்டிக்கு வந்தாலும் இறுதியில் உங்களுக்குத்தான் ஜெயம். அதனால் அரசியலை பற்றி கவலைப்படாதீர்கள்.

ஆஸ்தான ஜோசியர்
நடந்து கொண்டிருக்கிற பிரச்சனைகள் எல்லாம் பனி போல கரையத்துவங்கும். ஆனால், கட்சிக்குள் பொதுச்செயலாளர் பதவிக்கு மட்டுமே ஆசைப்படாதீங்க.. கட்சியில் தலைவர், பொருளாளர் என எந்த பதவிக்கும் ஆசைப்படுங்கள்.. அந்த பதவியையும் கைப்பற்றுங்கள்.. உங்களின் சாதுர்யத்தால் அதை அதிகாரமிக்கதாக மாற்றிக் கொள்ளுங்கள்... ஆனால், பொதுச்செயலாளர் பதவி மட்டும் வேண்டாம்மா.. அது உங்களுக்கு எதிராகத்தான் செயல்படும். எம்ஜிஆருக்கும் ஜெயலலிதாவுக்கும் அந்த பதவிதான் குழிபறித்தது. அந்தளவுக்கு ராசி இல்லாத பதவி அது...

நம்பூதிரி
பொதுச்செயலாளர் பதவியில் மட்டும் எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் உட்காராமல் வேறு எந்த பதவியில் இருந்திருந்தாலும் அவர்கள் இன்னும் கொஞ்ச காலம் நம்மோடு இருந்திருப்பார்கள்.. அதனால், பொதுச்செயலாளர் பதவிக்கு ஆசைப்படாதீர்கள்" என்று கட்டங்களை போட்டுக் காட்டி பயமுறுத்தியுள்ளனர். சசிகலாவும், ஜோதிடர்கள் சொன்னதை புறக்கணித்து விடாமல், யோசிக்க ஆரம்பித்திருக்கிறாராம்... இதற்கிடையே, தமிழக ஜோதிடர்கள் சொன்னதை , தன்னுடைய ஆஸ்தான கேரள நம்பூதிரி ஒருவரின் கவனத்துக்கு சசிகலா கொண்டு போக, "பைத்தியக்காரர்கள்" என்று ஒற்றை வரியில் சசிகலாவுக்கு பதில் தந்தாராம் அந்த நம்பூதிரி.. அப்படின்னா, "பொதுச்செயலாளர்" படலம் இனியும் தொடரும் போலும்..!
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன












Click it and Unblock the Notifications