Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தாம்பரம் படப்பையில் இளம் பெண் 26 வயதில் சந்திக்கக்கூடாத இழப்பு.. யாருக்குமே நடக்கக்கூடாத சம்பவம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தாம்பரம் அருகே படப்பையை அடுத்த மாடம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஷாம்ஷியா.. இவரது கணவர் ஆசிப். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருந்தனர். ஆசீப்பிற்கு தொழிலில் பெரிய அளவில் நஷ்டம் வந்தால் வாழ்க்கையை முடித்துக் கொள்ளும் முட்டாள்தனமான முடிவினை கடந்த ஆண்டு எடுத்தார். இதனிடையே கணவனை இழந்த ஷாம்ஷியா இரண்டு குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார். கடன் தொல்லையில் இருந்து அவரால் மீளமுடியவில்லை.. இதனால் கணவனை போல் அவரும் குழந்தைகளுடன் சேர்ந்து எடுத்த முடிவு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சக்திக்கு மீறி கடன் வாங்கி தொழில் செய்பவர்கள் நம்மூரில் மிக அதிகம்..கடன் வாங்கி தொழில் செய்யும் சிலர், கடனை அடைக்க இன்னொரு கடன், அந்த கடனை அடைக்க இன்னொரு கடன் என வாங்கி கடன் வலையில் சிக்கி கொள்கிறார்கள். இறுதியாக கடனை கட்ட முடியாமல் தவிக்கிறார்கள். அத்துடன் கடன் கொடுத்தவர்கள் தினமும் வீடு தேடி வருவதால், அவமானமாக கருதி வாழ்க்கையே வேண்டாம் என தவறான முடிவு எடுக்கிறார்கள். அப்படித்தான் தாம்பரம் அருகே நடந்துள்ளது.

What happened to a 26-year-old young woman in Padappai Tambaram

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பையை அடுத்த மாடம்பாக்கம் ஊராட்சி வள்ளலார் நகரைச் சேர்ந்தவர் ஆசிப். இவருடைய மனைவி ஷாம்ஷியாவிற்கு 26 வயது ஆகிறது. இவரது இவர்களுடைய மகள் ஆசிபா (10), மகன் அப்சர்(5). கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு ஆசிப் தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் வாழ்க்கையை முடித்துக் கொண்டார். கணவரை இழந்த நிலையில் 2 குழந்தைகளுடன் ஷாம்ஷியா வசித்து வந்துள்ளார்.

ஷாம்ஷியா தனது குழந்தைகளை காப்பாற்றுவதற்காக அதே பகுதியில் உள்ள இருசக்கர வாகன விற்பனை நிலையத்தில் வேலை செய்து வந்தார். கணவன் இறந்த போதும், அவருக்குக் கடன் தொல்லை இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் ஷாம்ஷியா தனது குழந்தைகளுடன் சென்னை கொளத்தூரில் சென்று தங்கி உள்ளார். அங்கு ஆசிபா 5-ம் வகுப்பும், அப்சர் 1-ம் வகுப்பும் படித்து வந்தனர். நேற்று முன்தினம் மாடம்பாக்கம் ஊராட்சியில் உள்ள தாய் வீட்டுக்குச் செல்வதாகக் கூறி குழந்தைகளுடன் சென்ற ஷாம்ஷியா அங்கு போகவில்லை

நேற்று காலை மாடம்பாக்கம் ஊராட்சியில் உள்ள விவசாயக் கிணற்றில் 3 பேரின் உடல்கள் மிதப்பதை அந்த பகுதி மக்கள் பார்த்துள்ளனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் மணிமங்கலம் போலீசார் மற்றும் மறைமலை நகர் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்குச் சென்ற தீயணைப்பு படை வீரர்கள் 3 பேரின் உடல்களையும் மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காகத் தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் அவர்கள் ஷாம்ஷியா, ஆசிபா, அப்சர் என்பது தெரியவந்தது. இந்த நிலையில் ஷாம்ஷியா எழுதி வைத்த கடிதம் போலீசாருக்குக் கிடைத்துள்ளது. அந்தக் கடிதத்தில் கடன் தொல்லையால் விபரீத முடிவு எடுக்க போவதாக எழுதியிருந்ததாகப் போலீசார் தெரிவித்தனர்.

இது குறித்து மணிமங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். ஷாம்ஷியா குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொள்வதற்குக் கடன் தொல்லைதான் காரணமா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்துப் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 2 குழந்தைகளுடன் தாய் தவறான முடிவு எடுத்த சம்பவம் அந்தப் பகுதி மக்களிடம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

குறிப்பு: தற்கொலை எண்ணம் என்பது ஒரு தீவிரமான மனநல பாதிப்பு. உங்களுக்கு அல்லது உங்களுக்குத் தெரிந்த யாருக்காவது தற்கொலை எண்ணங்கள் இருந்தால், தயவுசெய்து கீழ்க்கண்ட உதவி எண்களைத் தொடர்பு கொள்ளவும்:

சினேகா (Sneha): 044-24640050 / 044-24640060 (24/7 உதவி)

மாநில அரசின் உதவி எண்: 104 (தமிழ்நாடு)

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+