சென்னை ராயப்பேட்டையில் 80 வயது மூதாட்டின்னு கூட பார்க்காத நாகராஜ்.. இறுதியில் மறக்க முடியாத பரிசு
சென்னை: சென்னை ராயப்பேட்டை பகுதியில் 80 வயது மூதாட்டி ஒருவர் வீட்டில் தனியாக வசித்து வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு, அதிகாலையில் வீட்டு கதவு தட்டப்பட்டது. மூதாட்டி வந்து கதவை திறந்தார். அப்போது வெளியே நின்றிருந்த நாகராஜ் என்ற திருடன், மூதாட்டியிடம் பணம் கேட்டார். அவரிடம் பணம் இல்லை.. அப்போது திடீரென 80 வயது மூதாட்டி மீது பாய்ந்த நகராஜ் அத்துமீறினார். இந்த சம்பவம் சென்னை மக்களை ஆடிப்போக வைத்துள்ளது.
சென்னை ராயப்பேட்டை பகுதியில் தனியாக வசித்து வந்த மூதாட்டிக்கு நடந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. சென்னை ராயப்பேட்டை பகுதியில் 80 வயது மூதாட்டி ஒருவர் வீட்டில் தனியாக வசித்து வந்திருக்கிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு, அதிகாலையில் வீட்டு கதவு தட்டப்பட்டிருக்கிறது. மூதாட்டி வந்து கதவை திறந்தார். அப்போது வெளியே நின்றிருந்த மர்ம நபர், மூதாட்டியிடம் பணம் கேட்டாராம்.

அதற்கு மூதாட்டி என்னிடம் பணம் இல்லை என்று தெரிவித்தாராம். வெளியே நின்றிருந்த மர்ம நபர், மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அந்த மர்ம நபர் திடீரென வீட்டிற்குள் நுழைந்து, மூதாட்டியை கட்டிப்பிடித்து தகராறில் ஈடுபட்டார். இந்த நிலையில், மூதாட்டியைக் கட்டிப்பிடித்த மர்ம நபர், திடீரென உணர்ச்சி வசப்பட்டு, மூதாட்டியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக தெரிகிறது. போதை ஆசாமியின் மூர்க்கத்தனமான பாலியல் தாக்குதலை தாங்க முடியாமல் மூதாட்டி மயக்கமடைந்து கீழே சாய்ந்து விழுந்தார்.
இந்த நிலையில் அந்த போதை ஆசாமி தப்பிச் சென்றுவிட்டார். காலையில் மூதாட்டியைப் பார்க்க வந்த அவரது மகள், தாயார் மயங்கி கிடப்பதை பார்த்து அதிர்ந்து போனார். பின்னர் மூதாட்டி ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். சிகிச்சை அளித்த டாக்டர்கள் மூதாட்டி கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு உள்ளார் என்பதை உறுதி செய்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக ராயப்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அவரது மகள் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மூதாட்டியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட போதை ஆசாமியை கண்காணிப்பு கேமரா காட்சி மூலம் அடையாளம் கண்டுபிடித்தனர். அவர் கைது செய்யப்பட்டார். அவரது, பெயர் நாகராஜ் (வயது 39) என்பதாகும். ஜாம்பஜார் பகுதியில் வசித்து வந்த அவர், மூதாட்டி வீட்டில் தனியாக இருப்பதை கண்காணித்து, வீட்டில் கொள்ளையடிக்க முயன்றதும் விசாரணையில் தெரியவந்தது.
இதற்கிடையில், போலீசார் கைது செய்த போது, நாகராஜ் தப்பியோடியதாகவும், அதில் கீழே விழுந்ததில் அவருக்கு கை, காலில் முறிவு ஏற்பட்டது என்றும் போலீசார் தெரிவித்தனர். தற்போது மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு மாவுக் கட்டுபோடப்பட்டுள்ளதாகவும் போலீசார் கூறினார்கள். கைதான நாகராஜ் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications