3500 பைல்.. 100க்கும் அதிக விமான பயணம்.. 2022ல் சாதித்தது இதுதான்.. பிடிஆர் சொன்ன மேஜர் பாயிண்ட்ஸ்!
சென்னை: 2022ம் ஆண்டு இன்றுடன் நிறைவு பெறும் நிலையில் 2023 புத்தாண்டை வரவேற்க அனைவரும் தயாராகி வருகிறோம். இந்நிலையில் தான் 2022ல் சாதித்தது தொடர்பாக மேஜர் பாயிண்டுகளை குறிப்பிட்டு தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் முக்கிய விஷயத்தை கூறியுள்ளார். மேலும் அவர் இந்திய ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜனை நினைவு கூர்ந்துள்ளதோடு, தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
2022ம் ஆண்டின் கடைசி நாளான டிசம்பர் 31ல் நாம் இன்று உள்ளோம். இன்று நள்ளிரவில் 2023 புத்தாண்டு பிறக்க உள்ளது. ஒவ்வொரு ஆண்டை போலவும் 2023ல் பலருக்கும் பல எதிர்பார்ப்புகள் உள்ளன.
இதனால் 2023 புத்தாண்டை வரவேற்க இந்தியா உள்பட உலக நாடுகளில் வசிக்கும் மக்கள் தயாராகி வருகின்றனர். இன்று மாலை முதல் புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்ட தொடங்க உள்ளது.

2023 புத்தாண்டு வரவேற்பு
2023 புத்தாண்டு வரவேற்பு தொடர்பான பிளான்களை பலரும் தொடங்கி உள்ளனர். கொரோனா இல்லாத, போர் இல்லாத சமத்துவ வாழ்க்கையை இந்த ஆண்டு வழங்க வேண்டும் என அனைவரும் பிரார்த்தனை செய்ய தொடங்கி உள்ளனர். மேலும் கடந்த 2 ஆண்டுகளாக புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கொரோனா தொடர்பான கட்டுப்பாடுகள் இருந்த நிலையில் தற்போது பெரிய அளவில் கட்டுப்பாடுகள் இல்லை. இதனால் 2 ஆண்டுகளுக்கு பிறகு புத்தாண்டு கொண்டாட்டத்தை விமரிசையாக கொண்டாட பலரும் முடிவு செய்துள்ளனர்.

நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
மேலும் ஒவ்வொருவரும் 2023ல் எடுக்கப்போகும் ரிசொல்யூஷன் பற்றிய தகவல்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க பலரும் 2022ல் கடந்த வந்த பாதை தொடர்பான பல்வேறு விஷயங்களை நினைவுப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் 2022ல் மேற்கொண்ட பணி, பயணங்கள் பற்றி குறிப்பிட்டுள்ளார். இதுபற்றி பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் 2022ம் ஆண்டின் கடைசி நாளான இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

100க்கும் அதிகமான விமான பயணம்
3,500 கோப்புகள், ஆய்வு, ஆலோசனை என 100 கூட்டங்கள், 6 மாநிலங்களில் பேச்சுகள், 7 நாடுகளில் 100க்கும் அதிகமான விமான பயணங்கள் செய்துள்ளேன். அதிகம் கற்று கொண்டதோடு, அதனை வெளிக்கொணரவும் செய்துள்ளேன். முக்கிய உள்கட்டமைப்பு திட்டங்கள் மற்றும் இடைக்கால நிதி தொடர்பாக இந்த வாரம் சென்னையில் 2 முக்கிய கூட்டங்களில் பங்கேற்ற நிலையில் இந்த ஆண்டை நான் மதுரையில் முடித்து கொள்கிறேன்.

ரகுராம் ராஜன், முதல்வர் ஸ்டாலின்
அதன்பிறகு எப்போதும் போல் ஊக்கம் அளிக்கும் மற்றும் அறிவூட்டும் வகையிலான ரகுராம் ராஜனின்(முன்னாள் ஆர்பிஐ கவர்னர்) அழைப்பு, எனது நண்பரான பர்சனல் பேங்கிங் மற்றும் வெல்த் எம்ஜிஎம்டி சிட்டி வங்கியின் சிஇஓ விகாசா ஜூனியர் ஆனந்த் செல்வா உடனான இரவு விருந்து நினைவுக்கூரத்தக்கது. இதுபோன்றவை நான் செய்த சிறந்த பணிகளாகும். முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி'' என குறிப்பிட்டுள்ளார்.

வெடித்த வார்த்தை மோதல்கள்
மேலும் இந்த 2022ம் ஆண்டில் மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் இடையே சில விஷயங்களில் வார்த்தை போர் நீடித்தது. இந்தி திணிப்பு, பெட்ரோல் டீசல் விலை விவகாரம், தேர்தலில் இலவச அறிவிப்பு உள்ளிட்ட விஷயங்களில் கடுமையான கருத்து மோதல்கள் இருந்தன. இந்த விஷயங்களில் நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பல்வேறு சந்தர்ப்பங்களில் மத்திய அரசை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி












Click it and Unblock the Notifications