Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஓபிஎஸ்ஸூக்கு செக்.. ‘வேணாம் தலைவரே’.. நேரடியாக இறங்கிய எடப்பாடி - டெல்லி விசிட்டுக்கு பின்னணி என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை : சென்னை வரவிருக்கும் பிரதமர் மோடியை ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பதற்கு திட்டமிட்டு வரும் நிலையில், நாளை டெல்லிக்கு புறப்படுகிறார் எடப்பாடி பழனிசாமி. இந்த டெல்லி பயணத்திற்கு பின்னணியில் பல்வேறு காரணங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

Recommended Video

    EPS டெல்லி பயணம் ஓபிஎஸ்ஸின் கடைசி நம்பிக்கையும் தகர்கிறதா?

    டெல்லி செல்லும் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரைச் சந்திக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

    முக்கியமாக, சென்னை வரும் பிரதமர் மோடி, ஓபிஎஸ்ஸை சந்திக்கக் கூடாது என்பதுதான் எடப்பாடி பழனிசாமியின் திட்டம் என்று கூறப்படுகிறது.

     ஈபிஎஸ் டெல்லி பயணம்

    ஈபிஎஸ் டெல்லி பயணம்

    அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்ற எடப்பாடி பழனிசாமி நாளை டெல்லி செல்கிறார். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பிரியாவிடை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. டெல்லி செல்லும் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரைச் சந்திக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    சென்னையில் மோடி

    சென்னையில் மோடி

    சென்னையில் ஜூலை 28ஆம் தேதி செஸ் ஒலிம்பியாட் போட்டியை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்க உள்ளார். சென்னை வரும் பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசுவதற்கு ஓ.பன்னீர்செல்வம் நேரம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. நீதிமன்றத்தில் தன் முயற்சி பலிக்காததால் மத்திய பாஜக அரசின் ஆதரவை முழுமையாக நம்பியுள்ளார் ஓ.பன்னீர்செல்வம். இதனால் சென்னை வரும் மோடியை எப்படியாவது சந்தித்து தனது சாதகமான முடிவுகளைப் பெற்று விட வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறார்.

    ஏற்கனவே ஓபிஎஸ்

    ஏற்கனவே ஓபிஎஸ்

    கட்ந்த ஜூன் 23ஆம் தேதி அதிமுக பொதுக்குழு முடிந்ததுமே பாஜக தலைமையின் ஆதரவு கேட்டு டெல்லி சென்றார் ஓபிஎஸ். அங்கு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை தனிப்பட்ட முறையில் சந்திக்க முடியாமல், பாஜகவின் மேலிட புள்ளிகளைச் சந்தித்து விட்டுத் திரும்பினார். டெல்லி சென்றாலும், பாஜகவின் ஆதரவுக் காற்று ஓபிஎஸ் பக்கம் வீசவில்லை. தொடர்ந்து டெல்லியின் ஆதரவைப் பெறும் முயற்சிகளில் இறங்கி வருகிறார் ஓபிஎஸ். இந்நிலையில் தான் சென்னை வரும் பிரதமர் மோடியுடன் பேசுவதற்காக ஓபிஎஸ் காய் நகர்த்தி வருகிறார்.

    ஈபிஎஸ் பிளான்

    ஈபிஎஸ் பிளான்

    அதேநேரம், எடப்பாடி பழனிசாமியும் சென்னை வரும் பிரதமர் மோடியைச் சந்திப்பதற்கான திட்டங்களைத் தீட்டி வருகிறார். தான் சந்திப்பது மட்டுமல்லாமல், ஓபிஎஸ்ஸை பிரதமருடன் சந்திக்க விடக்கூடாது என்பதற்கான திட்டங்களையும் தீட்டி வருவதாகக் கூறப்படுகிறது. ஓபிஎஸ்ஸை கட்சியில் இருந்து நீக்கிவிட்டதாலும், அவருக்கு கட்சியில் செல்வாக்கு இல்லை என்பதாலும் ஓபிஎஸ்ஸை சந்திப்பதை பிரதமர் மோடி தவிர்க்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி பாஜகவிற்கு அழுத்தம் கொடுத்து வருவதாகக் கூறப்படுகிறது.

    டெல்லி பயணத்தில்

    டெல்லி பயணத்தில்

    சென்னை வரும் மோடியை சந்திக்க ஓபிஎஸ் தயாராகி வரும் நேரத்தில், டெல்லிக்கே செல்கிறார் எடப்பாடி பழனிசாமி. அதிமுகவில் கடந்த ஒரு மாதகாலத்திற்கும் மேலாக தொடர்ந்து வரும் ஓபிஎஸ்-ஈபிஎஸ் மோதலுக்கு மத்தியில் முதல் முறையாக டெல்லி செல்கிறார் எடப்பாடி பழனிசாமி. கட்சியை தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டு, இடைக்கால பொதுச் செயலாளராக டெல்லி செல்கிறார் ஈபிஎஸ் என்பதால் அவரது பயணம் குறித்து அரசியல் அரங்கில் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

     நேரடியாக களத்தில்

    நேரடியாக களத்தில்

    டெல்லி செல்லும் ஈபிஎஸ், அங்கு பிரதமர் மோடியை தனிப்பட்ட முறையில் சந்தித்து அதிமுகவின் தற்போதைய நிலைமை குறித்துப் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜனாதிபதி வேட்பாளர் திரௌபதி முர்மு வேட்பு மனு தாக்கல் செய்யும்போதும், துணை ஜனாதிபதி வேட்பாளர் ஜெகதீப் தன்கர் வேட்புமனு தாக்கல் செய்யும்போதும் தனது தரப்பு சார்பாக தம்பிதுரையை அனுப்பிய எடப்பாடி பழனிசாமி, முக்கியமான ஒரு விஷயத்திற்காகவே நேரடியாக தானே களத்தில் இறங்கியதாக கூறப்படுகிறது.

    மோடியை சந்தித்து

    மோடியை சந்தித்து

    பிரதமர் மோடியைச் சந்தித்து, கட்சியில் தனக்கு இருக்கும் ஆதரவை விரிவாக எடுத்துச் சொல்லி, ஓ.பன்னீர்செல்வம் தனது செல்வாக்கை முழுவதுமாக இழந்துவிட்டதாக கூறி, அவருக்கு ஆதரவு அளிக்கக்கூடாது, அவர் குழப்பம் ஏற்படுத்துவது கட்சிக்கும், கூட்டணிக்கும் சிக்கலையே ஏற்படுத்தும், 2024 தேர்தலில் நமது கூட்டணி அதிக இடங்களில் வெல்ல ஒற்றைத் தலைமை அவசியம் என்பது உள்ளிட்ட கருத்துகளைப் பேசுவார் என்று கூறப்படுகிறது. சென்னை வரும்போது ஓபிஎஸ் உடனான சந்திப்பைத் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் நேரடியாக வலியுறுத்த இருப்பதாகக் கூறப்படுகிறது.

    இன்னொரு கோரிக்கை

    இன்னொரு கோரிக்கை

    மேலும், தனது ஆதரவாளர்கள் மீதான வருமான வரித்துறை சோதனைகளையும் கட்டுப்படுத்த வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுப்பார் என்று கூறப்படுகிறது. எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமான வடவள்ளி சந்திரசேகர், எடப்பாடி பழனிசாமியின் சம்பந்திக்கு நெருக்கமான செய்யாதுரை ஆகியோர் தொடர்புடைய இடங்களில் மத்திய அரசின் வருமான வரித்துறை தொடர்ந்து சோதனை நடத்தி 500 கோடி ரூபாய் கணக்கில் வராத பணம் கண்டறியப்பட்டதாக கூறப்பட்டது.

     ஐடி சோதனை

    ஐடி சோதனை

    மேலும், நேற்றும் இன்றும், அதிமுக ஆட்சியில் பல்வேறு திட்டங்களை டெண்டர் எடுத்து பணி செய்த 20 அரசு ஒப்பந்ததாரர்கள் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இது ஈபிஎஸ்ஸுக்கு மத்திய அரசு தரும் குடைச்சலாகவே பார்க்கப்படுகிறது. இதையும் தவிர்க்க வேண்டும் என்பதற்காக ஈபிஎஸ், பிரதமர் மோடியிடம் நேரடியாகவே கோரிக்கை வைப்பார் என்று தகவல்கள் வெளியாகின்றன.

    குறிவைப்பதை தவிர்க்க

    குறிவைப்பதை தவிர்க்க

    மேலும், கடந்த ஆட்சியில் வெளிவந்த குட்கா ஊழல் வழக்கையும் மத்திய அரசின் சிபிஐ மீண்டும் கையில் எடுத்துள்ளது. முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது வழக்கு தொடுக்க சிபிஐ அனுமதி கேட்டு தமிழ்நாடு அரசுக்கு கடிதம் அனுப்பி உள்ளது. இதனால் எடப்பாடி பழனிசாமிக்கு சிக்கல் எழும், திமுகவுக்கு சாதகமாக அமையும் என்பதால் இதுகுறித்தும் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் பேசுவார் என்று கூறப்படுகிறது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+