இவங்க யாரு புதுசா.. அண்ணாமலை களமிறக்கிய புதிய டீம்.. யாத்திரையில் நடந்த ட்விஸ்ட்.. பரபரத்த பாஜக

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை நடைப்பயணத்தில் புதிய டீம் ஒன்று அண்ணாமலையின் நடைபயணம் தொடர்பான திட்டங்களை கவனித்து வருகிறதாம்.

தமிழ்நாட்டில் பாஜகவை வலுப்படுத்தும் விதமாக அதன் தலைவர் அண்ணாமலை நடைபயணம் மேற்கொண்டு உள்ளார். தமிழ்நாட்டில் பாஜகவிற்கு ஒரு எம்பி கூட இல்லை. அதேபோல் பாஜகவிற்கு 4 எம்எல்ஏக்கள் மட்டுமே உள்ளனர்.

What is happening in Annamalai Tamil Nadu Yatra? Who is the new team working with him?

வாக்கு சதவிகிதம்படி பார்த்தால் தமிழ்நாட்டில் 4வது பெரிய கட்சியாக பாஜக உள்ளது. இதனால் தமிழ்நாட்டில் பாஜக அவ்வளவு பெரிய கட்சியாக இல்லை. இந்த நிலையில்தான் பாஜகவை வலுப்படுத்தும் விதமாக தமிழ்நாட்டில் அண்ணாமலை பயணம் மேற்கொண்டு உள்ளார்.

அண்ணாமலை நடைபயணம்: ராமேஸ்வரம் முதல் சென்னை வரை பாதயாத்திரை செல்கிறார் அண்ணாமலை. மிக நீண்ட அரசியல் யாத்திரையாக இது இருக்க போகிறது. பாரத் ஜோடோ யாத்திரை காங்கிரஸ் கட்சியை வலிமைபடுத்தியது போல இந்த யாத்திரை பாஜகவை தமிழ்நாட்டில் வலிமைப்படுத்தும் என்று அண்ணாமலை நம்பிக்கை கொண்டுள்ளார்.

பொதுவாக அரசியல்வாதிகளின் நடைப்பயணம் என்றாலே, காலை 6 மணிக்கெல்லாம் பயணத்தை துவக்குவார்கள். திருச்செந்தூரை நோக்கி ஒரு காலத்தில் கலைஞர் நடந்த நடைப்பயணமும் சரி, வைகோ நடந்த நடைப்பயணமும் சரி, கடந்த ஆண்டு ராகுல் நடந்த நடைப்பயணம் சரி... காலை 6 மணிக்கெல்லாம் நடக்கத் துவங்கினர். இடையில் காலை உணவினை போகும் இடத்திலேயே முடித்துக் கொள்வர்.

பிறகு மீண்டும் நடைப்பயணம் தொடங்கும். ஆனால் அண்ணாமலை பெரும்பாலும் கேரவனிலேயே பயணம் செய்கிறார். தினமும் காலையில் 9:30-க்குத்தான் பயணத்துக்கே ரெடியாகிறாராம். 2 கிலோமீட்டர் நடக்கிறார். பிறகு சட்டென்று கேரவனில் ஏறிக்கொள்கிறார். மாலை மீண்டும் கொஞ்ச நேரம் நடக்கிறார் என்று கூறப்படுகிறது. இதனால் அவர் பெரிதாக நடக்கவில்லை என்று புகார்கள் வைக்கப்படுகின்றன.

கேரவன்: அண்ணாமலை இந்த பயணத்தில் பெரும்பாலும் கேரவன் ஒன்றில் செல்கிறார். அண்ணாமலை செல்லும் வழியில் அவர் ஓய்வு எடுக்க இந்த கேரவன் அமைக்கப்பட்டு உள்ளது. அதேபோல் இடை இடையே அவர் உறங்க, சாப்பிட இந்த கேரவன் அமைக்கப்பட்டு உள்ளது. காவி நிறத்தில் பாஜகவின் சாதனைகளை பட்டியலிட்டு கேரவன் அமைக்கப்பட்டு உள்ளது.

பிரதமர் மோடி வேட்டியுடன் இருக்கும் புகைப்படம் இந்த கேரவன் கதவில் அமைக்கப்பட்டு உள்ளது. பல நவீன வசதிகளுடன் இந்த கேரவன் உட்பகுதி வடிவமைக்கப்பட்டு உள்ளது. மெத்தை படுக்கை , ஏசி, மைக்ரோவேவ் உள்ளிட்ட வசதிகள் உள்ளன. இதன் உள்ளேயே சமைத்துக்கொள்ள வேண்டும்.

புதிய டீம்: இந்த நிலையில்தான் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை நடைப்பயணத்தில் புதிய டீம் ஒன்று அண்ணாமலையின் நடைபயணம் தொடர்பான திட்டங்களை கவனித்து வருகிறதாம். அதன்படி தற்போது அண்ணாமலையின் நடைபயணம் தமிழ்நாட்டில் இதுவரை பெரிதாக கவனிக்கப்படவில்லை.

நடைபயணம் பெரிதாக மக்கள் இடையே வரவேற்பை பெறவில்லை. தொடக்கத்தில் கவனிக்கப்பட்ட நடைபயணம் அதன்பின் பெரிதாக கண்டுகொள்ளப்படவில்லை. இந்த நிலையில்தான் நடைப்பயணத்தில் புதிய திட்டங்களை, வியூகங்களை வகுக்கும் விதமாக கேரளாவை சேர்ந்த டீம் ஒன்று அண்ணாமலையுடன் இணைந்து பணியாற்றி வருகிறதாம்.

தேர்தல் ரீதியாக ஆலோசனை செய்யும் டீமான இது அண்ணாமலையுடன் சேர்ந்து நடைபயண வியூகங்களை வகுத்து வருகிறதாம். இவர்கள் திட்டப்படிதான் கடந்த சில நாட்களாக அண்ணாமலையின் பயணம் நடந்து கொண்டு இருப்பதாக கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+