Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நம்ம ஸ்கூல் திட்டம் என்றால் என்ன? கல்வியாளர்கள் கண்ணோட்டத்தில் சாதகம் பாதகம் பற்றி ஓர் அலசல்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகம் முழுவதும் அரசுப்பள்ளிகள் மேம்பாட்டுக்காக நம்ம ஸ்கூல் என்ற புதிய திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ள நிலையில் அது சர்ச்சையில் சிக்கியுள்ளது.

பொதுமக்கள், முன்னாள் மாணவர்கள், தொழிலதிபர்கள், தன்னார்வ அமைப்புக்களிடம் நிதி உதவி பெற்று அரசுப்பள்ளிகளை மேம்படுத்தும் திட்டம் தான் நம்ம ஸ்கூல் திட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே இந்த திட்டத்திற்கு கல்வியாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியிருப்பதோடு தொழிலதிபர் வேணு சீனிவாசன் நியமனத்துக்கும் ஆட்சேபனை எழுந்திருக்கிறது.

நம்ம ஸ்கூல்

நம்ம ஸ்கூல்

தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளை தரம் உயர்த்தும் நோக்கில் நம்ம ஸ்கூல் ஃபவுண்டேஷன் என்ற புதிய திட்டதை கடந்த 19ஆம் தேதியன்று தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின். அனைத்தையும் அரசாங்கமே செய்துவிட முடியாது என்றும் அரசுப் பள்ளிகள் என்பவை அரசின் சொத்துகள் மட்டுமல்ல, அது மக்களுடைய சொத்துக்களும் கூட எனவும் கூறி இந்த திட்டத்தின் தொடக்க விழாவில் பேசினார் முதல்வர் ஸ்டாலின். மேலும், அரசுடன் மக்களும் கைகோர்க்க வேண்டும்; அரசுப் பள்ளிகளால் பயன்பெற்றவர்கள் தங்களது நன்றியின் அடையாளத்தைத் தெரிவிப்பதற்கான வாசற்படிதான் இந்த நம்ம ஊர் பள்ளி திட்டம் என முதல்வர் விளக்கம் அளித்தார்.

வெளிப்படைத் தன்மை

வெளிப்படைத் தன்மை

நீங்கள் செலுத்தக்கூடிய ஒரு ரூபாய் நன்கொடையும் கூட கூடுதல் வெளிப்படைத்தன்மையுடனும், கடமையுணர்வுடனும், நம் பள்ளிகள், நம் ஆசிரியர்கள், நம் குழந்தைகளின் வளர்ச்சிக்கென அது செலவிடப்படும் என்ற உறுதியை கொடுத்த முதலமைச்சர் ஸ்டாலின், நம்ம ஸ்கூல் பவுண்டேஷனின் தலைவராக வேணு சீனிவாசனையும், அந்த திட்டத்தின் தூதுவராக கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த்தையும் நியமித்தார். இங்கு தான் சர்ச்சையே வெடிக்க ஆரம்பித்துள்ளது. விஸ்வநாதன் ஆனந்த் நியமனத்தை யாரும் பெரிதாக எதிர்க்கவில்லை. ஆனால் தொழிலதிபரும், டிவிஎஸ் குழுமத் தலைவருமான வேணு சீனிவாசன் நியமனத்தை தான் பலரும் எதிர்க்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

கடும் எதிர்ப்பு

கடும் எதிர்ப்பு

'நம்ம ஸ்கூல் பவுண்டேஷன்' அமைப்பின் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் டிவிஎஸ் குழுமத்தைச் சேர்ந்த வேணு. சீனிவாசன் மீது ஏராளமான புகார்கள் உள்ளதாகவும் கல்விக்கு அந்த நிறுவனத்தின் சார்பில் எந்த ஒருபங்களிப்பையும் செய்த வரலாறு இல்லை எனவும் கூறி பரபரப்பை கிளப்பியிருக்கிறார் விசிக தலைவர் திருமாவளவன். மேலும், நம்ம ஸ்கூல் ஃபவுண்டேஷன் நிர்வாக கட்டமைப்பை மாற்றியமைக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தி வருகிறார். இவரைத் தொடர்ந்து நம்ம ஸ்கூல் ஃபவுண்டேஷன் தலைவர் பொறுப்பிலிருந்து வேணு சீனிவாசனை நீக்க வேண்டும் என எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தியுள்ளது. இதேபோல் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் நம்ம ஸ்கூல் திட்டத்தை ஸ்டிக்கர் திட்டம் என விமர்சித்திருக்கிறார்.

கல்வியாளர்கள்

கல்வியாளர்கள்

அரசியல் கட்சியினர் தான் இப்படி கூறுகிறார்கள், கல்வியாளர்களாவது என்ன சொல்கிறார்கள் என்பதை அறிந்துக் கொள்ளும் வகையில் பிரின்ஸ் கஜேந்திர பாபுவிடம் பேசினோம். அவரோ எடுத்த எடுப்பிலேயே நம்ம ஸ்கூல் திட்டம் மீதான தனது கோபத்தை வெளிப்படுத்தினார். மேலும், அவர் கூறியதாவது, ''அரசு பள்ளிகளின் கட்டமைப்பை மேம்படுத்தும் கடமையிலிருந்து அரசு விலகிச் செல்லுவதை தான் இது போன்ற திட்டங்கள் காட்டுகிறது. பிறகு எதற்கு வரி வசூலிக்க வேண்டும். ஒரு நாட்டின் முன்னேற்ற அளவுகோலாக இருப்பது கல்வியும், சுகாதாரமும் தான்.''

 ஒரு உதாரணம்

ஒரு உதாரணம்

''இப்ப உங்களுக்கு ஒரு உதாரணம் சொல்கிறேன், உங்கள் பிள்ளை அரசுப்பள்ளியில் படிக்குதுன்னு வைங்க, அங்க அந்த ஸ்கூலுக்கு டொனேஷன் கொடுத்தவர் வருகிறார் என்றால், அவருக்கு உங்கள் பிள்ளை எழுந்து நின்று வணக்கம் வைக்க வேண்டும். இது கண்ணியமிக்க குழந்தை பருவமாக இருக்குமா என கேட்கிறேன். சரி இதை விடுங்க, ஒவ்வொரு தொழிலதிபரிடமும் டொனேஷன் கேட்டுச் செல்வது தான் தலைமை ஆசிரியர்கள், பள்ளி ஆசிரியர்களின் வேலையா. இவர் தாம்பா கொடையாளி அவர் வாங்கி கொடுத்த பெஞ்சில் தான் நீ அமர்ந்து படிக்கிறாய், அவர் வாங்கிக் கொடுத்த புக்கில் தான் நீ படிக்கிறாய் என்ற பெயர் உங்கள் குழந்தைக்கு வேண்டுமா எனக் கேட்கிறேன்.''

பொறுப்பு தட்டிக்கழிப்பு

பொறுப்பு தட்டிக்கழிப்பு

''அரசு தனது பொறுப்பை தட்டிக்கழிக்கும் செயலாக இதை நான் பார்க்கிறேன்'' என்கிறார் கல்வியாளர் ப்ரின்ஸ் கஜேந்திர பாபு. இதனிடையே அரசு பள்ளி ஆசிரியை உமா மகேஸ்வரியிடம் நம்ம ஸ்கூல் திட்டம் பற்றி பேசிய போது, ''அரசுப் பள்ளிகளை மேம்படுத்த வேண்டும் என்ற நல்ல நோக்கத்துடன் இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. இது வரவேற்க கூடியது தான். ஆனால் இதில் தொழிலதிபரை தலைவராக கொண்டு வந்திருப்பது தான் ஏற்புடையதாக் தெரியவில்லை. தனியார் நிறுவனங்கள் உள்ளே வருவது தான் இந்த திட்டத்தில் உள்ள சிக்கலாக பார்க்கப்படுகிறது. இதை மட்டும் முறைப்படுத்தி மாவட்ட வாரியாக கட்டமைப்பை மாற்றி அமைக்க வேண்டும் என்பது எனது கருத்து''.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+