அறுத்து விடுதலுக்கு சமம்.. என்ன சொல்கிறார்?.. யாரை சொல்கிறார் எஸ் வி சேகர்?
சென்னை: கொஞ்சம் முன்னேற்றம் தெரிந்ததும் ஊரடங்கை கைவிடச் சொல்வது பூமி கண்ணுக்கு தெரிந்ததும் பாராச்சூட்டை அறுத்து விடுதலுக்கு சமம் என பாஜக நிர்வாகி எஸ் வி சேகர் தெரிவித்துள்ளார். இவர் யாரை சொல்கிறார்கள் என்பது புரியவில்லை.
இந்தியா முழுவதும் இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருகிறது. காய்ச்சல், உடல்வலி, சளி, இருமல், மூச்சு விடுவதில் சிரமம் உள்ளிட்டவையே முதல் அலைக்கு கொரோனாவின் அறிகுறிகளாக சொல்லப்பட்டன.
ஆனால் தற்போது இரண்டாவது அலையில் சிக்குவோர் மேற்கண்ட அறிகுறிகளில் ஏதேனும் ஒன்றோடு வயிற்று போக்கும் சேர்ந்து கொண்டது. இதனால் சந்தேகத்தின் பேரில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள சென்றால் 4 பேரில் ஒருவருக்கு கொரோனா உறுதியாகிறது.

ஆக்ஸிஜன்
தற்போதைய நிலையில் கொரோனா அதிகம் பரவுவதால் 4 பேரில் ஒருவருக்கு ஆக்ஸிஜன் தேவைப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணம் முதல் அலையிலேயே மிகவும் ஜாக்கிரதையாக மக்கள் இருந்திருக்க வேண்டும் என்கிறார்கள்.

பாராச்சூட்டை
லாக்டவுன்களில் தளர்வுகளை கொடுத்திருக்கக் கூடாது என்றும் சிலர் கூறுகிறார்கள். அவ்வாறிருக்கையில் பாஜக நிர்வாகி எஸ் வி சேகர் ஒரு ட்வீட் போட்டுள்ளார். அதில் அவர் கொஞ்சம் முன்னேற்றம் தெரிந்ததும் ஊரடங்கை கைவிடச் சொல்வது- பூமி கண்ணுக்கு தெரிந்ததும் பாராச்சூட்டை அறுத்து விடுதலுக்கு சமம்.... என தெரிவித்துள்ளார்.

யார் மீது குறை
இவர் யாரை குறை சொல்கிறார் என தெரியவில்லை. கொஞ்சம் முன்னேற்றம் வந்ததும் இந்தியாவில் ஊரடங்குகள் படிப்படியாக விலக்கி கொள்ளப்பட்டது. அது போல் தமிழகத்திலும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலானது. மக்களும் ஊரடங்கை தளர்த்தியவுடன் சிறிதும் கவலையின்றி ஆங்காங்கே சுற்ற தொடங்கிவிட்டனர்.

நெட்டிசன்
எனவே எஸ் வி சேகர் தனது ட்வீட் மூலம் விமர்சிப்பது மத்திய அரசையா இல்லை மாநில அரசையா இல்லை மக்களையா என்ற கேள்வி எழுந்துள்ளது. அது போல் கொரோனாவின் இரண்டாவது அலை கடுமையாக இருக்கும் என மருத்துவர்கள் எச்சரித்த போதிலும் ஹரீத்வாரில் கும்பமேளாவுக்கு அனுமதி அளிக்கப்பட்டதை நெட்டிசன்கள் குறிப்பிட்டு வருகிறார்கள்.
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு?












Click it and Unblock the Notifications