தேய்பிறை செவ்வாய்...நவமி நாளில் மேட்டூர் அணை திறக்கப்பட்டதால் பாதிப்பா? ஜோதிடர்கள் சொல்வதென்ன
குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை நேற்று திறக்கப்பட்டுள்ளது. தேய்பிறை செவ்வாய்க்கிழமையன்று நவமி நாளில் அணை திறக்கப்பட்டது சரியல்ல என்று ஜோதிடர்கள் தெரிவித்துள்ளனர்.
சென்னை: கோடை காலத்தில் பெய்த கனமழையால் காவிரியில் பெருவெள்ளம் வரவே மேட்டூர் அணை மளமளவென நிரம்பியது. அணை நீர்மட்டம் 118 அடியை எட்டவே பாதுகாப்பு கருதி காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது. அணை திறக்கப்பட்ட நாள் நல்ல நாள் இல்லை என்றும் அதனால் பாதிப்புகள் வர வாய்ப்பு உள்ளதாகவும் ஜோதிடர்கள் கருத்து கூறியுள்ளனர்.
தற்போது காவிரி நீர்பிடிப்பு பகுதியில் நல்ல மழை பெய்து வருவதால், மேட்டூர் அணைக்கு அதிக நீர்வரத்து உள்ளது. 24.05.2022 நிலவரப்படி, மேட்டூர் அணையின் நீர்மட்ட அளவு 117.760 அடியாகவும் நீர் இருப்பு 89.942 டிஎம்சி அடியாகவும் உள்ளது.
நீர்வரத்து தொடர்வதால் மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவை விரைவில் எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே. காவிரி டெல்டா விவசாயிகளின் நலன் கருதி, குறுவை சாகுப்படிக்காக மேட்டூர் அணையை முதல்வர் மு.க ஸ்டாலின் தண்ணீர் திறந்து விட்டார்.

நவமி திதி நல்ல நாளா?
மேட்டூர் அணை திறக்கப்பட்ட நாள் தேய்பிறை செவ்வாய்க்கிழமை நவமி திதியாகும். பொதுவாகவே எந்த ஒரு நல்ல காரியத்தையும் அஷ்டமி நவமி திதியில் தொடங்க மாட்டார்கள். அதுவும் மூன்று போகம் விளையக்கூடிய காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்பட்ட அணையை செவ்வாய்க்கிழமை நாளில் நவமி திதியில் திறந்திருக்கக் கூடாது என்றும் அதனால் விவசாயம் பாதிக்க வாய்ப்பு உள்ளதாகவும் ஜோதிடர்கள் கூறியுள்ளனர்.
Recommended Video

ஜோதிட ஆலோசனை
முதல்வர் மு.க ஸ்டாலின் தேர்தலின் போது வேட்பாளர்களை அறிவித்தது முதல் வேட்பு மனு தாக்கல் செய்தது, பதவி ஏற்றுக்கொண்டது என எல்லாமே நல்ல நாள் பார்த்து ஜோதிட ஆலோசனை பெற்றே செய்ததாக தகவல் வெளியானது. இந்த நிலையில் அணை திறப்பு குறித்து திடீரென நாள் கிழமை பார்க்காமல் முடிவெடுத்தது ஏன் என்றும் ஜோதிடர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

சிம்ம ராசிக்கு அஷ்டம குரு
சிம்ம ராசிக்காரர் ஸ்டாலின் பதவியேற்ற போது குருவின் ஆசியும், சனிபகவானின் ஆசியும் கிடைத்தது. அதுவே வெற்றிகளை குவிக்க காரணமாக இருந்தது. இப்போது குரு பகவான் மீன ராசியில் பயணம் செய்கிறார். இது அஷ்டம குரு என்பதால் சில பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றும் ஜோதிடர்கள் தெரிவித்துள்ளனர். சனிபகவானின் சஞ்சாரமும் சாதகமில்லை என்பதால் எந்த ஒரு காரியத்தையும் அவசர கதியில் செய்யக்கூடாது என்பதும் ஜோதிடர்கள் கருத்தாகும்.

விவசாயம் பாதிக்குமா?
நாட்டின் மன்னர்களோ, தலைவர்களோ நல்ல காரியங்களை தொடங்கும் போது நல்ல நாள், திதி, ஹோரை பார்த்துதான் தொடங்குவார்கள். ஆள் செய்யாததை நாள் செய்யும் என்று சொல்வார்கள். தமிழக முதல்வரோ மாநிலத்திற்கு சுபிட்சத்தை தரக்கூடிய விவசாய பணிக்கு தண்ணீர் திறந்து விடும் போது நல்ல நாள் பார்க்காமல் திறந்து விட்டு விட்டதாகவும் ஜோதிடர்கள் தெரிவித்துள்ளனர்.

இயற்கையின் ஆசி
திமுக அரசுக்கு இயற்கையின் ஆசி உள்ளதால்தான் முன்கூட்டியே மேட்டூர் அணை நிரம்பியது என்று பெருமையுடன் கூறியுள்ளார் முதல்வர் ஸ்டாலின். தேர்தல் அறிக்கையில் கொடுக்காத வாக்குறுதியும் நிறைவேற்றப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு நெல் சாகுபடியில் சாதனை படைக்கப்பட்டதாகவும் இந்த ஆண்டும் விவசாயிகள் நலனுக்காக முன்கூட்டியே அணை திறக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். அணை திறக்கப்பட்ட நாள் சரியில்லை என்று ஜோதிடர்கள் கூறியிருந்தாலும் இறைவனின் ஆசியும் இயற்கையின் ஆசியும் இருந்தால் மழை வளம் சிறக்கும் என்பது நம்பிக்கையாகும்.
-
தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் ஏன்? பின்னணியில் 2 ஜாதிகளின் ஓட்டுகளுக்கு குறி.. ஸ்டாலின் போடும் கணக்கு -
கமல்ஹாசனின் மநீம தேர்தலில் போட்டியிட வேண்டும்.. ஸ்டாலினுக்கு வேண்டுகோள் வைத்த திருமாவளவன்! -
ஸ்டாலின் சொல்லியும் சீட் தரல.. மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தளர்ந்து விட்டது.. கம்யூனிஸ்ட் ஆதங்கம் -
காங்கிரஸ் மீது கடும் அப்செட்டில் ஸ்டாலின்.. வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்துக்கு கிளம்ப திட்டம்! -
நம்பர் 1 முதல்வர் யார்? டாப் 5 லிஸ்ட்டில் யார் யார்? 1952 ராஜாஜி முதல் 2021 ஸ்டாலின் வரை! -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
ஸ்டாலின் வீட்டில் 3 மணி நேரம் காத்திருந்து! கண்ணீருடன் வெளியேறினார் துரைமுருகன்! வேல்முருகன் பகீர் -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications