மோடி மீண்டும் அரியணை ஏறுவதில் சிக்கல்! கருத்து கணிப்பில் பகீர் ரிசல்ட்! பாஜகவிற்கு இப்படி ஒரு ஷாக்கா
சென்னை: லோக்சபா தேர்தல் தொடர்பாக சமீபத்தில் வந்த பல்வேறு கருத்து கணிப்புகளில் பாஜகவிற்கு பெரும்பான்மை கிடைக்க வாய்ப்பு இல்லை என்று பெரும்பாலான கருத்து கணிப்புகள் தெரிவித்துள்ளன.
2024 லோக்சபா தேர்தல் குறித்து பல்வேறு கருத்து கணிப்புகள் வெளியாகி உள்ளன. இதுவரை வெளியான 3 முக்கியமான கருத்து கணிப்புகளும் வேறு வேறு விதமான முடிவுகளை கொடுத்துள்ளன. அந்த கருத்து கணிப்புகள் முடிவுகளை இங்கே ஒவ்வொன்றாக பார்க்கலாம்.

கருத்து கணிப்பு 1: டைம்ஸ் நவ் இடிஜி சார்பில் தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பு நடத்தப்பட்டு நேற்று ரிசல்ட் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் மத்தியில் ஆட்சியை பிடிக்கும் எனவும், 26 கட்சிகளின் ‛‛இந்தியா'' கூட்டணி பின்னடைவை சந்திக்கும் எனவும் கணிப்பில் கூறப்பட்டு உள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான பாஜகவின் என்டிஏ எனும் தேசிய ஜனநாயக கூட்டணி 296 முதல் 326 தொகுதிகளில் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
26 கட்சிகள் இணைந்த எதிர்க்கட்சிகளின் ‛இந்தியா' கூட்டணி 160 முதல் 190 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிலும் தமிழ்நாட்டில் 4-8 இடங்களை பாஜக - அதிமுக கூட்டணி லோக்சபா தேர்தலில் பிடிக்கும் என்று இந்த கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஆனால் இதில் ஒன்றில் மட்டுமே பாஜகவிற்கு பெரும்பான்மை காட்டப்பட்டு உள்ளது. இதற்கு அடுத்து வந்த இரண்டு கருத்து கணிப்புகளில் ரிசல்ட் வேறு மாதிரி வந்துள்ளது.

கருத்து கணிப்பு 2: PCSurveysIndia அதாவது Political Critic என்ற அமைப்பு இன்னொரு கருத்து கணிப்பை வெளியிட்டு உள்ளது. அதில், பாஜகவின் என்டிஏ கூட்டணி : 230 - 255 இடங்கள் எதிர்க்கட்சிகளின் "இந்தியா" கூட்டணி: 215 - 225 இடங்கள் மற்ற கட்சிகள் : 50- 63 இடங்கள் வெல்லும் என்று இந்த அமைப்பு கணிப்பு வெளியிட்டு உள்ளது
மாநில வாரியாக லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டில் 38 இடங்களை திமுக காங்கிரசின் இந்திய கூட்டணி வெல்லும் என்றும், அதிமுக - பாஜக கூட்டணி ஒரே ஒரு இடத்தில் வெல்லும் என்றும் இந்த கருத்து கணிப்பு தெரிவித்துள்ளது.
கருத்து கணிப்பு 3: ஸ்மால் பாக்ஸ் இந்தியா சர்வே என்ற அமைப்பு இந்த புதிய கருத்து கணிப்பை வெளியிட்டுள்ளது. அதில்,
தமிழ்நாட்டில் திமுகவின் இந்தியா கூட்டணி - 36 இடங்களை வெல்லும்
பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி - 03 இடங்களை வெல்லும்
தமிழ்நாட்டில் கடந்த லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணி 38 இடங்களில்வென்றது. அதிமுக 1 இடத்தில் வென்றது. இந்த முறை திமுக கூட்டணி 2 இடங்களை இழக்கும். பாஜக கூட்டணி கூடுதலாக இரண்டு இடங்களை பெறும். அதாவது தமிழ்நாட்டில் இருந்து பாஜக கூட்டணிக்கு 3 எம்பிக்கள் வருவார்கள் என்று கூறப்பட்டு உள்ளது. இவர்கள் பாஜக கட்சியா, அதிமுக கட்சியா என்பது தெரிவிக்கப்படவில்லை.
மொத்தமாக எத்தனை: லோக்சபா கருத்துக்கணிப்பு மொத்த இடங்கள் : 543, மெஜாரிட்டி பெற 272

இந்தியா கூட்டணி - 243
பாஜகவின் என்டிஏ கூட்டணி - 255
மற்றவை - 45
ஆனால் இந்த கருத்து கணிப்புகள் எல்லாமே அப்படியே நடக்கும் என்றும் சொல்ல முடியாது. காரணம் தேர்தலுக்கு இன்னும் பல காலம் உள்ளது. கிட்டத்தட்ட 8 மாதங்கள் உள்ளன. அப்படி இருக்க என்ன வேண்டுமென்றாலும் அரசியல் களத்தில் நடக்கலாம்.
8 மாதங்கள் என்பது தேர்தல் அரசியல் களத்தில் மிக நீண்ட காலம் ஆகும். அதனால் கருத்து கணிப்புகள் அப்படியே நடக்கும் என்று சொல்ல முடியாது. ஆனால் அரசியல் ரீதியாக கருத்து கணிப்புகள் ஒரு பிம்பத்தை உருவாகும். முக்கியமாக அரசியல் ரீதியாக தேர்தல் இப்படி செல்ல வாய்ப்பு உள்ளது என்று கணிப்பை உருவாக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications