சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"கருப்பு ஆடு".. யாரோ லீக் பண்றாங்க? முக்கிய தலைகளுக்கு கட்டம் கட்டும் "தலைமை".. ஸ்டாலின் பிளான்!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்நாட்டில் இன்னும் சில நாட்களில் பெரிய அளவில் அதிகாரிகள், செயலாளர்கள் மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் ஆகிவிட்டது. ஆட்சிக்கு வந்த புதிதில் எல்லா ஆட்சியையும் போல தலைமை செயலாளர் தொடங்கி டாப் அதிகாரிகள் வரை பலர் மாற்றப்பட்டனர்.

அதேபோல் முதல்வர் ஸ்டாலினுக்கும் தனியாக ஆலோசகர்கள் அறிவிக்கப்பட்டனர். ஆனால் அதன்பின் பெரிதாக அதிகாரிகள் மாற்றம் செய்யப்படவில்லை. ஒரு சில துறைகளில் செயலாளர்கள் மாற்றப்பட்டனர்.

 திமுக அரசுக்கு இயற்கையும் ஒத்துழைப்பு தருகிறது பாருங்க.. முதல்வர் ஸ்டாலின் பூரிப்பு! திமுக அரசுக்கு இயற்கையும் ஒத்துழைப்பு தருகிறது பாருங்க.. முதல்வர் ஸ்டாலின் பூரிப்பு!

 மாற்றம் இல்லை

மாற்றம் இல்லை

ஆனாலும் பெரிய துறைகளில் பெரிதாக செயலாளர்கள் மாற்றம் செய்யப்படவில்லை. கடந்த 1 வருடத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள், செயலாளர்கள் மாற்றம் செய்யப்படவில்லை. ஐஏஎஸ் அதிகாரிகளை மாற்றுவதில் ஜெயலலிதாவைதான் முதல்வர் ஸ்டாலின் பின்பற்றி வருகிறார். ஜெயலலிதா பொதுவாக அமைச்சர்களை கேட்டு அதிகாரிகளை மாற்ற மாட்டார். ஒரு அதிகாரியை மாற்ற வேண்டும் என்று முடிவு செய்துவிட்டால் அதற்காக அமைச்சர்களிடம் அவர் ஆலோசனை கேட்க மாட்டார்.

ஜெயலலிதா

ஜெயலலிதா

அதேபோல்தான் முதல்வர் ஸ்டாலினுடம் கடந்த ஒரு வருடத்தில் அமைச்சர்களிடம் எந்த விதமான ஆலோசனைகளையும் பெரிதாக செய்யாமல் ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்தார். இந்த நிலையில்தான் கடந்த சில நாட்களுக்கு முன் ஒன்இந்தியா சார்பாக வெளியிட்ட செய்தியில் விரைவில் 20 அதிகாரிகள் வரை மாற்றப்படலாம் என்று தெரிவித்து இருந்தோம். அதிலும் அமைச்சர்களிடம் கேட்டு இந்த மாற்றம் நடக்கும் என்றும் குறிப்பிட்டு இருந்தோம்.

 அமைச்சரவை மாற்றம்

அமைச்சரவை மாற்றம்

அமைச்சரவை மாற்றம் நடக்கும் பட்சத்தில், அதன்பின் சில நாட்களில் இந்த அதிகாரிகள் மாற்றம் நடக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் அதிகாரிகள் மாற்றத்திற்கு பின் வேறு சில காரணங்களும் இருப்பதாக கூறப்படுகிறது. அதன்படி முன்னாள் ஆட்சியில் உயர் பொறுப்பில் இருந்த அதிகாரிகள் சிலர் இப்போது வெவ்வேறு துறைகளில் உயர் பொறுப்பில் இருக்கிறார்கள். சிலர் அதே துறைகளில் கூட நீடிக்கிறார்கள்.

 லீக்காவது எப்படி?

லீக்காவது எப்படி?

அதில் சிலர் முன்னாள் அமைச்சர்களுடன் நெருக்கமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் டெண்டர் கூட அதிமுக ஆட்சியில் இருந்த போது யாருக்கு கொடுக்கப்பட்டதோ அவர்களுக்கே கொடுக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. அதோடு சில டாப் லெவல் அதிகாரிகள் மேலிடத்தில் நடக்கும் விவகாரங்களை வெளியே லீக் செய்வதாகவும் புகார்கள் வந்துள்ளதாம். இப்படி லீக் செய்வது யார் என்றும் முதல்வர் தரப்பு விசாரித்து இருக்கிறதாம்.

யார் செய்வது?

யார் செய்வது?

அரசு எடுக்க போகும் முடிவை முன் கூட்டியே வெளியே சிலர் சொல்கிறார்கள்.. முக்கியமாக எதிர்கட்சிகளுக்கு தெரியப்படுத்துகிறார்கள் என்று புகார் தெரிய வந்துள்ளதாம். முக்கியமாக சில ஒப்பந்தங்கள், டெண்டர் பற்றி உடனுக்குடன் வெளியே தெரிகிறதாம். இதனால் இப்படி இருக்கும் கருப்பு ஆடுகள் யார் யார் என்றும் தலைமை விசாரித்து வருகிறதாம். அதற்கு ஏற்றபடி நம்பகமான ஆட்களை மேலிடத்தில் பொறுப்புகளில் வைக்க ஆளும் தரப்பு முடிவு செய்துள்ளதாம்.

செயலாளர்கள்

செயலாளர்கள்

இது போக சில துறைகளில் இருக்கும் செயலாளர்கள் அரசின் கொள்கைக்கு அப்படியே எதிராக முடிவு எடுப்பதாகவும் கூறப்படுகிறது. சமீபத்தில் ஆம்பூர் பீப் பிரியாணி தடையையும் இதற்கு எடுத்துக்காட்டாக சொல்கிறார்கள். இதனால் ஒவ்வொரு அதிகாரிகள் பற்றியும் விசாரித்து அதற்கு ஏற்றபடி பொறுப்புகளை மாற்ற திட்டமிடப்பட்டு இருக்கிறதாம். முதல் கட்டமாக 20 அதிகாரிகள் வரை பல்வேறு துறைகளில் மாற்றப்படலாம் என்று ஆளும் தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

English summary
What is the reason behind IAS, and IPS officers transfer buzz in Tamil Nadu? தமிழ்நாட்டில் இன்னும் சில நாட்களில் பெரிய அளவில் அதிகாரிகள், செயலாளர்கள் மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X