சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அதிகாலையிலேயே ரெய்டு.. முதல் ஆளாக"எம்.ஆர்.வியை" வளைத்த விஜிலென்ஸ்.. பின்னணியில் வேறு காரணம்!?

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுகவின் முன்னாள் அமைச்சர் எம். ஆர் விஜயபாஸ்கரின் வீடு மட்டும் அலுவலகங்களில் தற்போது தீவிரமான ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது. முன்னாள் அமைச்சர்கள் பலருக்கு எதிராக தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு துறை விசாரணை நடத்த உள்ள நிலையில், முதல் ஆளாக எம். ஆர் விஜயபாஸ்கர் தேர்வு செய்யப்பட்டது ஏன் என்று விவரம் வெளியாகி உள்ளது.

Recommended Video

    Operation AAA ஆரம்பம் | MR Vijayabasakar | IT Raid | Oneindia Tamil

    அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், அவர்களுக்கு ஆதரவாக இருந்த அதிகாரிகளுக்கு எதிராக தமிழ்நாடு அரசு சாட்டையை சுழற்ற தொடங்கி உள்ளது. கடந்த ஆட்சியில் செய்யப்பட்ட பல்வேறு முறைகேடுகளுக்கு, ஒப்பந்தங்களுக்கு எதிரான விசாரணை தொடங்கப்பட்டு உள்ளது.

    அதில் முதல் நபராகமுன்னாள் எம். ஆர் விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது. மொத்தம் 33 இடங்களில் இந்த ரெய்டு நடக்கிறது.

    3வது அலை சாத்தியம்.. 40 கோடி இந்தியர்கள் பாதிக்கப்படும் அபாயம்.. ஐசிஎம்ஆர் தகவல் 3வது அலை சாத்தியம்.. 40 கோடி இந்தியர்கள் பாதிக்கப்படும் அபாயம்.. ஐசிஎம்ஆர் தகவல்

     கரூர்

    கரூர்

    கரூரில் உள்ள இவரின் வீடு, அலுவலகம், இவருக்கு சொந்தமான இடங்கள், சென்னையில் இருக்கும் இன்னொரு வீடு, அலுவலகம் என்று பல இடங்களில் சோதனை நடந்து வருகிறது. சென்னையில் எம். ஆர் விஜயபாஸ்கர் நிறுத்தி வைத்து இருந்த பல்வேறு கார்களிலும் அதிகாரிகள் ரெய்டு நடத்தி வருகிறார்கள். அதோடு எம். ஆர் விஜயபாஸ்கர் அதிக சொத்து குவித்ததாக முதல் கட்ட விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    வழக்கு

    வழக்கு

    இதில் விசாரணைக்கு முகாந்திரம் இருப்பதால் தற்போது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. பல்வேறு முன்னாள் அமைச்சர்களுக்கு மத்தியில் முதல் ஆளாக எம். ஆர் விஜயபாஸ்கரை விஜிலென்ஸ் வளைக்க 3 காரணங்கள் இருப்பதாக தகவல்கள் வருகின்றன. முதல் விஷயம், இவருக்கு எதிராக அதிக அளவிலான ஆதாரங்களை விஜிலென்ஸ் ஏற்கனவே திரட்டி விட்டதாக கூறப்படுகிறது.

    ஆதாரம்

    ஆதாரம்

    இவர் சொத்து குவித்ததற்கான ஆதாரங்கள் ஏற்கனவே விஜிலென்ஸ் அமைப்பிடம் சிக்கி உள்ளதால், அதன் அடிப்படையிலேயே அதிகாலை சர்ப்ரைஸாக அதிகாரிகள் ரெய்டு நடத்தி இருக்கிறார்கள். முக்கியமாக இவருக்கு நெருக்கமாக இருந்த அதிகாரிகள் சிலர் கொடுத்த தகவலின் அடிப்படையில் பல ஆதாரங்கள் திரட்டப்பட்டு, அதன் மூலம் ரெய்டும் நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    கரூர்

    கரூர்

    இதெல்லாம் போக இன்னொரு மேற்கு மண்டல அதிமுக புள்ளிக்கு செக் வைக்கும் விதமாகவே இவரிடம் முதலில் ரெய்டு நடத்தி உள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேற்கு மண்டலத்தில் இருக்கும் வேறு ஒரு புள்ளிக்கும் எம். ஆர். விக்கும் இடையில் நிறைய தொடர்புகள் உள்ளன. இவரை தூக்கினால் அவரையும் தூக்கலாம், அந்த புள்ளிக்கு எதிராகவும் முக்கிய ஆதாரங்கள் கிடைக்கும்.

    எம். ஆர். வி

    எம். ஆர். வி

    எம். ஆர். விஜயபாஸ்கர் மூலம் அந்த அதிமுக புள்ளியை வளைக்கலாம் என்பதால் முதலில் இவரிடம் இருந்து விஜிலென்ஸ் விசாரணையை தொடங்கி இருப்பதாக தகவல்கள் வருகின்றன. இதெல்லாம் போக மேற்கு மண்டல அரசியலை மையப்படுத்தியே இந்த ரெய்டு தொடங்கி உள்ளதாக தெரிகிறது. அதிமுகவின் மேற்கு மண்டல புள்ளிகளை மொத்தமாக அடக்கும் விதமாக ரெய்டு நடத்தப்பட்டு இருப்பதாக திமுக வட்டாரங்கள் தெரிவிகின்றன.

    மேற்கு மண்டலம்

    மேற்கு மண்டலம்

    மேற்கு மண்டலத்தில் அதிமுகவிற்கும் அதிகாரத்தை கட்டுப்படுத்தவும் விதமாகவே இந்த ஆக்சன் மேற்கு மண்டலத்தில் இருந்து தொடங்கப்பட்டுள்ளது என்றும் கூறுகிறார்கள்.எம். ஆர். வி வெறும் தொடக்கம்தான், இன்னும் 10க்கும் அதிகமான மேற்கு மண்டல அதிமுக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் விசாரணை வளையத்தில் விரைவில் சிக்குவார்கள் என்று அரசு தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

    English summary
    What is the reason behind the raid at M R Vijayabhaskar homes and premises by Tamilnadu Anti-corruption and Vigilance force?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X