சிறுபான்மையினர் என்னை ஏரியாக்குள்ளயே விடல.. எல்லாத்துக்கும் பாஜக தான் காரணம்! சொல்வது டாக்டர் சரவணன்

Subscribe to Oneindia Tamil

சென்னை : மதுரைக்கு பல இடங்களில் தான் இலவச மருத்துவ முகாம்கள் மூலம் சேவை செய்திருந்தாலும் பாஜகவில் இருந்ததன் காரணமாக தேர்தலின் போது சிறுபான்மை மக்கள் என்னை அவர்களது பகுதிகளில் நுழைய கூட அனுமதிக்கவில்லை என பாஜகவில் இருந்து விலகி உள்ள டாக்டர் சரவணன் அதிரடியாக கூறியுள்ளார்.

மதுரை மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் தற்போது பேசு பொருளாக மாறி இருப்பது அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கார் மீதான அவமதிப்பும் அதனைத் தொடர்ந்து பாஜகவில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களும் தான்.

மதுரை விமான நிலையத்தில் நடந்த சம்பவத்திற்கு பிறகு நண்பகலில் அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜனை மிகக் கடுமையாக விமர்சித்த டாக்டர் சரவணன் திடீரென அன்று நள்ளிரவில் அவரை சந்தித்து மன்னிப்பு கூறினார்.

டாக்டர் சரவணன்

டாக்டர் சரவணன்

மேலும் பாஜகவில் மதவெறுப்பு அரசியல் இருப்பதாகவும் தனக்கு அது ஒத்து வராது என்பதால் கட்சியில் இருந்து விலகுவதாக அதிரடியாக கூறினார். அதே நேரத்தில் திமுக எனது தாய் வீடு எனது உடம்பில் திராவிட ரத்தம் ஓடுகிறது எனவும் கூறியிருந்தார். இதையடுத்து அவர் மீண்டும் திமுகவிலேயே இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகி, அதை உறுதிப்படுத்துவது போலவே ஊடகங்களிலும் பேட்டி கொடுத்து வருகிறார்.

பாஜக பயணம்

பாஜக பயணம்

சரவணன் கடந்த தேர்தலில் திமுகவில் இருந்த அவருக்கு சீட்டு மறுக்கப்பட்டதால் பாஜகவில் சேர்ந்த அன்றே தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. அதற்கு முன்னதாக முதன்முதலில் சினிமாவில் நடித்துக் கொண்டிருந்தவரான டாக்டர் சரவணன் மதிமுகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பாஜகவில் இருந்து தான் விலகுவதற்கு என்ன காரணம் என்பன குறித்த பல்வேறு தகவல்களை வெளியிட்டுள்ளார்.

சாதி மத அரசியல்

சாதி மத அரசியல்

பாஜக மத சாதி ரீதியான அரசியல் செய்யும் கட்சிதான் என்பது தனக்கு முன்பே தெரிந்திருந்தாலும் கட்சியில் இணைந்த இந்த ஒன்றரை ஆண்டுகளில் தான் அது எவ்வளவு மோசமாக செயல்படுகிறது என்பது தனக்கு தெரிய வந்துள்ளதாக கூறியிருக்கிறார். இது தொடர்பாக ஒன் இந்தியா தமிழிடம் பேசிய அவர் மதுரை மக்களுக்கு பல்வேறு வகைகளில் நான் உதவி செய்து இருக்கிறேன் குறிப்பாக கடந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்டபோது சிறுபான்மையினர் வசிக்கும் பகுதிகளை தன்னை வாக்கு சேகரிக்க கூட அனுமதிக்கவில்லை.

சிறுபான்மை மக்கள்

சிறுபான்மை மக்கள்


மேலும் தன்னிடம் சிகிச்சை பெற்ற பல இஸ்லாமிய மக்கள் 'டாக்டர் நீங்கள் ஏன் பாஜகவில் சேர்ந்தீர்கள் நீங்கள் நிறைய நல்லது செய்து இருக்கிறீர்கள் ஆனால் மதவாத கட்சியில் இருக்கும் உங்களுக்கு எங்களால் வாக்களிக்க முடியாது' என கூறினர். 'அதனையும் கடந்து கட்சிக்காக பல ஆண்டுகளில் செய்ய வேண்டியதை ஒரு வருடத்தில் செய்திருக்கிறேன். ஆனாலும் பாஜக மீதான வெறுப்பு என்னை பாதித்தது இதன் காரணமாகவே நான் பாஜகவில் இருந்து விலகி இருக்கிறேன்' என்றார் மேலும். அடுத்ததாக திமுகவில் டாக்டர் சரவணன் இணை இருக்கிறார் என்றும் தகவல்கள் வெளியாகின்றன. விரைவில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் இந்த சந்திப்பு நடக்கும் என்கின்றனர் மதுரை உடன்பிறப்புகள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+