Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நீங்க போங்க பாத்துக்கலாம்! ஆதரவாளரை ‘தாமரைக்கு’ அனுப்பி வைத்த ‘சூப்பர்’ நட்சத்திரம்! ப்ளான் என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை : தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான நடிகர் ரஜினிகாந்த்தின் ஆரம்பிக்காத கட்சிக்கும் தலைமை ஒருங்கிணைப்பாளராக இருந்த அர்ஜுன மூர்த்தி மீண்டும் தனது தாய் கட்சியான பாஜகவுக்கே திரும்பியுள்ள நிலையில், அதற்கு என்ன காரணம்? ரஜினிகாந்தின் ஆசியுடனே வந்திருக்கிறேன் என அவர் கூறியது எதற்காக? உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.

தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரம் என்றால் அப்போதும் இப்போதும் சிறு குழந்தையாக இருந்தால் கூட கண்ணை மூடிக்கொண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்று சொல்வார்கள். அந்த அளவுக்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தனது வசீகரத்தால் கட்டி போட்டவர் ரஜினிகாந்த்.

அதே நேரத்தில் நான் எப்ப வருவேன் எப்படி வருவேன் என யாருக்கும் தெரியாது என பஞ்ச் பேசி கடைசி வரை அரசியலுக்கே வராமல் போனாலும், அவ்வப்போது தமிழக அரசியலில் ரஜினிகாந்தின் பெயர் அடிபட்டு வருகிறது.

நடிகர் ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்த்

குறிப்பாக மறைந்த முதல்வர்கள் ஜெயலலிதா கருணாநிதிக்கு பிறகு தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாகவும் அதனை நிரப்பவே தான் அரசியலுக்கு வந்திருக்கிறேன் எனக் கூறி ரசிகர்கள் சந்திப்பில் மீண்டும் அரசியல் வருகை பரபரப்பை பற்ற வைத்தார் ரஜினி. அரசியல் பேசுவது தற்போது மட்டுமல்ல 1996 ஆம் ஆண்டு முதல் முதலாக அரசியல் பேச்சை எடுத்திருக்கிறார். அப்போது ஆட்சியில் இருந்த அதிமுக அரசுக்கு எதிராக பேசிய அவர் திமுக வெற்றிக்கு ஒரு காரணியாக இருந்தார்.

பெரிதாக எடுபடவில்லை

பெரிதாக எடுபடவில்லை


அதன் பிறகு திமுகவுக்காக ரஜினி குரல் கொடுத்தாலும் அது பெரிதாக எடுபடவில்லை. இதைஅடுத்து அரசியல் கருத்துக்களை தவிர்த்து வந்த ரஜினி திடீரென 2017ஆம் ஆண்டு தான் அரசியல் பிரவேசம் குறித்து அறிவித்தார். அதில் நான் அரசியலுக்கு வருவது உறுதி இது காலத்தின் தேவை. ஆன்மீக அரசியலை முன்னெடுப்போம் அடுத்து வரும் சட்டப்பேரவை தேர்தலில் வேட்பாளர்களை களம் இறக்கவும் என்று அறிவித்தார். இதனையடுத்து ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் சுறுசுறுப்பாக செயல்பட்டு வந்த நிலையில் ஆனால் அதற்கடுத்து எவ்வித முக்கிய அறிவிப்புகளும் வரவில்லை.

அரசியல் பிரவேசம்

அரசியல் பிரவேசம்

தொடர்ந்து அமைதியாக இருந்த ரஜினிகாந்த் திடீரென ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகளை அழைத்து பேசினார். தற்போது கொரோனா காலம் என்பதால் அரசியல் அறிவிப்பு தள்ளிப் போவதாக கூறினார். அடுத்து உடல் நலக் குறைவு, சினிமா ஷூட்டிங் என அரசியல் பிரவேசம் தள்ளிப்போன நிலையில் 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அரசியல் பிரவேசம் தொடர்பான கேள்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் ரஜினிகாந்த். இது தொடர்பாக தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்ட அறிக்கையில் "கட்சி தொடங்கி அரசியலுக்கு வர முடியவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். என்னை நம்பி வருபவர்களை பலிகடா ஆக்க விரும்பவில்லை" எனக் கூறினார்.

முற்றுப்புள்ளி

முற்றுப்புள்ளி

இதன் மூலம் அரசியல் குறித்த ரஜினிகாந்தின் 24 ஆண்டு கால கேள்விக்கு விடை கிடைத்தது. ரஜினி அரசியல் பிரவேசம் குறித்த கேள்விகள் ஒருபுறம் இருக்க அர்ஜுன மூர்த்தி என்ற பெயர் அரசியல் வரலாற்றில் திடீரென முளைத்தது. பாஜகவின் அறிவு சார் பிரிவில் இருந்த அர்ஜுன மூர்த்தி ரஜினிகாந்த் தொடங்க இருக்கும் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டார். ஆனால் கட்சி தொடங்கப்படாமலேயே இருந்த நிலையில் இந்திய மக்கள் முன்னேற்ற கட்சி என்றும் புதிய அமைப்பை அவர் தொடங்கியிருந்தார். இந்த நிலையில் தனது கட்சியை கலைத்துவிட்டு இன்று மீண்டும் அவர் பாஜகவில் சேர்ந்துள்ளார்.

அர்ஜுன மூர்த்தி

அர்ஜுன மூர்த்தி

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் அவர் கட்சியில் சேர்ந்து உள்ள நிலையில் பல்வேறு கேள்விகள் எழுந்திருக்கிறது. பாஜகவில் இருந்து விலகி ரஜினி உடன் இணைந்து பின்னர் தனிக்கட்சி ஆரம்பித்து மீண்டும் பாஜகவில் இணைந்தது ஏன்? ரஜினியின் ஆதரவுடன் தான் பாஜகவில் இணைந்துள்ளேன் என அவர் பேசியது எதற்காக? என பல்வேறு யூகங்கள் எழுந்திருக்கிறது. இந்நிலையில் தென்னகத்தில் பாஜகவை வளர்ப்பதற்காக பாஜக தலைமை பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வரும் நிலையில் தமிழ்நாட்டில் ரஜினிகாந்த் தெலுங்கில் ஜூனியர் என்டிஆர் உள்ளிட்ட நடிகர்களை வளைத்து போட்டு கட்சியை வளர்க்கலாம் என திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

என்ன காரணம்?

என்ன காரணம்?

இதற்காகவே ரஜினியுடன் ஆளுநர் சந்தித்ததாகவும் வதந்திகள் உலாவின .இந்நிலையில் ரஜினிகாந்த் தனது ஆதரவாளரான அர்ஜுன மூர்த்தியை முதலில் பாஜகவுக்கு அனுப்பி வைத்துவிட்டு பின்னர் தான் பாஜகவில் இணைவது குறித்து ஆலோசிக்கலாம் அல்லது தற்போது அர்ஜுன மூர்த்தி பாஜகவில் தனக்கான இடத்தை உறுதி செய்து கொண்ட பின் அவர் அளிக்கும் அறிவுரைகளை பொறுத்து நேரடி அரசியலில் களமிறங்குவதா? இல்லை மீண்டும் அமைதியாகவே இருப்பதா? என ரஜினிகாந்த் யோசித்து இருக்கலாம் என்கின்றனர் பாஜக வட்டாரத்தினர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+