அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநர்களுக்கு ஊதிய உயர்வு.. யாருக்கு எவ்வளவு தெரியுமா?
சென்னை: அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு 5 சதவிகிதம் வரை ஊதிய உயர்வு வழங்க தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் ஓட்டுநர்கள், நடத்துநர்கள் எவ்வளவு ஊதிய உயர்வு பெறுவார்கள் என்பதை காணலாம்.
தமிழக அரசின் போக்குவரத்து தொழிலாளர்களுக்கான 14வது ஊதிய உயர்வு ஒப்பந்தம் நிறைவெறியுள்ளது. இந்த ஒப்பந்தம் மூலம் அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு 5 சதவிகிதம் வரை ஊதிய உயர்வு வழங்க தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் ஓட்டுநர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.2,012-லிருந்து அதிகபட்சமாக ரூ.7,981 வரை உயர்த்தப்படும். அதேபோல் நடத்துநர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.1,965ல் இருந்து ரூ.6,640 வரை நிர்ணயம் செய்யப்படும்.

பயணச்சீட்டு பரிசோதனை அதிகாரிகளுக்கு ரூ.4,692 முதல் ரூ. 7,916 வரை ஊதிய உயர்வு கிடைக்கும். அதேபோல் தொழிற்நுட்ப பணியாளர்களுக்கு ரூ.9,329 வரையிலும், தொழிற்நுட்ப மேற்பார்வையாளர்களுக்கு ரூ.8,476 வரையிலும் ஊதிய உயர்வு கிடைக்கும் என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் அலுவலக பணியாளர்களுக்கு ரூ.6,640 வரையிலும் ஊதிய உயர்வு கிடைக்கும்.
இதுமட்டுமல்லாமல் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்தவும் தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ஒப்பந்தத்தில், 34க்கும் மேற்பட்ட சங்கங்கள் ஒப்பந்த்த்திற்கு ஆதரவு தெரிவித்து கையெழுத்திட்டுள்ளன. அதே போல இந்த ஒப்பந்தத்தில் அண்ணா தொழிற்சங்க பேரவை, ஏஐடியுசி, பணியாளர் சம்மேளனம் உள்ளிட்டு 20க்கும் மேற்பட்ட சங்கங்கள் கையெழுத்திடவில்லை.
முன்னதாக 8 போக்குவரத்து கழக ஊழியர்களுக்கான 14வது ஊதிய ஒப்பந்தத்திற்கான 7வது கட்ட பேச்சுவார்த்தை குரோம்பேட்டையில் உள்ள மாநகர போக்குவரத்து கழக பயிற்சி மையத்தில் நடைபெற்றது. போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைக் கூட்டத்தில், சிஐடியு, அண்ணா தொழிற்சங்கம், ஏஐடியுசி, டிடிஎஸ்எப் உள்ளிட்ட தொழிற் சங்கங்கள் வெளிநடப்பு செய்தன.
இதனைத்தொடர்ந்து சிஐடியு அ.செளந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், பேச்சுவார்த்தையில் உள்ள ஒவ்வொரு அம்சத்திலும் சிஐடியு உழைப்பு பங்களிப்பு உள்ளது. 90 சதவிகிதம் அரசின் ஒப்பந்தத்தில் உடன்பட்டுள்ளோம்.
ஒப்பந்தக் காலத்தை 3 ஆண்டிலிருந்து 4 ஆண்டுகளாக உயர்த்தவும், கடந்த ஆட்சி காலத்தில் நடைபெற்ற 21 வேலை நிறுத்த நாட்களை பணி நாளாக மாற்றி ஊதியம் வழங்க மறுத்ததை கண்டித்தும் பேச்சுவார்த்தையிலிருந்து வெளிநடப்பு செய்தோம். இதனை கண்டித்து நாளை தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கரிடம் போக்குவரத்து தொழிலாளர்களுக்கான ஊதிய உயர்வு ஒப்பந்தம் 4 ஆண்டாக உயர்த்தப்பட்டது குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், தற்போதைய நிதிநிலை உள்ளிட்ட பல்வேறு கருத்துகளை ஆராய்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் போக்குவரத்து மட்டுமின்றி பல்வேறு துறைகளுக்கு முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications