எகிறிய எடப்பாடியார்.. டென்ஷனில் ஸ்டாலின்.. ரிப்போர்ட்டை வீசியெறிந்து.. கடைசி நேரத்தில் என்ன நடந்தது?
சென்னை: வாக்குப்பதிவு தினத்தன்று, அதிமுக, திமுக தரப்பில் நடந்தது என்ன என்பது குறித்த பல்வேறு உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே தேர்தல் நடந்து முடிந்துள்ளது.. இந்நிலையில், தேர்தல் நாளன்று, ஒரு செய்தி சோஷியல் மீடியாவை வட்டமடித்தது. அதுகுறித்த விவகாரம்தான் தற்போதும் ஓடி கொண்டிருக்கிறது.
அதாவது, அன்றைய தினம் காலையில் இருந்தே எடப்பாடியார் தெம்பாக இருந்ததாகவும், ஆனால் மதியம் மேல் டென்ஷனாக இருந்ததாகவும், அதற்கு காரணம், அதிமுக வெறும் 20 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறும் என்று ஒரு ரிப்போர்ட் அவரது கையில் கிடைத்ததாகவும், கூறப்படுகிறது..

ரிப்போர்ட்
அந்த ரிப்போர்ட்டை பார்த்து எடப்பாடியார் கோபமடைந்து வீசியெறிந்துவிட்டு, உடனடியாக தன்னுடைய ஆலோசனை குழுவுடன் இதுகுறித்து பேசியதாக அந்த செய்தி பரபரத்தது. இந்த தகவல் உண்மைதானா? தேர்தல் தினத்தன்று கடைசியாக என்னதான் நடந்தது? அதேபோல, அன்றைய தினம் திமுக தலைமையிடம் ஐபேக் டீமும் ரிப்போர்ட்களை தந்திருக்கிறதே? அதுவும் உண்மைதானா? என்பது குறித்தெல்லாம் நாம் ஒருசில அரசியல் நோக்கர்களிடம் பேசினோம். அவர்கள் சொன்னதாவது:

நம்பலாமா?
"வாக்கு எண்ணிக்கை வரும்வரை இப்படித்தான் எதையாவது கிளப்பி கொண்டே இருப்பார்கள்.. முதன்முதலில் வந்த கருத்து கணிப்பில் திமுக, அதிமுகவுக்கும் 10 சதவீத இடைவெளி இருப்பதாக சொல்லப்பட்டது.. அடுத்தடுத்த நாட்களில் வந்த கருத்து கணிப்புகளில் வெறும் 2, 3, சதவீதம்தான் வித்தியாசம்னு சொல்றாங்க.. இதில் எதை நம்புவது?

எடப்பாடியார்
எடப்பாடியாருக்கு அப்படி ஒரு ரிப்போர்ட்டே போகவும் இல்லை, அவர் அந்த ரிப்போட்டை தூக்கி எறியவும் இல்லை.. இப்போதும் அதிமுக தரப்பு நம்பிக்கையுடன் இருக்கிறது..! இதைதான் திமுக தரப்பிலும் சொன்னார்கள்.. தேர்தல் தினத்தன்று வெறும் 120 தொகுதிகளில் மட்டுமே திமுக வெற்றி பெறும் என்று ஒரு ரிப்போர்ட் ஸ்டாலினுக்கு போகவும், அவரும் டென்ஷன் ஆகி உடனே ஐபேக் ஆபீஸ் சென்று ஆலோசனை நடத்தியதாகவும் தகவல் கசிந்தது.. இதுவும் வெறும் யூகமே.

கணிப்பு
ரிசல்ட் வரும் வரை இப்படித்தான் செய்திகள் வந்து கொண்டிருக்கும்.. வாக்கு சதவீதத்தை வைத்து, அந்த சதவீதம் யாருக்கு சாதகமாக இருக்கலாம் என்று யூகிக்கலாமே தவிர, எதுவும் உறுதியாக சொல்ல முடியாது. இப்போது வரை திமுகவுக்கு சாதகமாகவே கணிப்புகள் வருகிறது.

ஓட்டு வங்கி
அதேசமயம், திமுக கூட்டணி எடுத்து கொண்டால் பலமான கூட்டணிதான்.. ஆனாலும் 6 சதவீத ஓட்டு வங்கி இருக்கும் கட்சி எதுவுமே அங்கு இல்லையே.. காங்கிரசுக்கு வேண்டுமானால் 3 சதவீதம் இருக்கலாம்.. மற்றபடி பிற கட்சிகளுக்கு வாக்கு வங்கி குறைவுதானே.. அதனால் திமுக முழுக்க முழுக்க தன்னை நம்பியே இந்தமுறை களம் இறங்கி இருக்கிறது.. அப்படி இருக்கும்போது, எப்படி 170 எல்லாம் சாத்தியம் ஆகும்? எனவே, திமுக, அதிமுக தரப்பில் இதுவரை வந்த கருத்து கணிப்புகளை வைத்து எந்த முடிவுக்கும் வர முடியாது..

அதிருப்தி
அதிமுகவின் அதிருப்திகள் திமுகவுக்கு சாதகமாகி இருப்பதையும் மறுப்பதற்கில்லை.. அதிமுக வேறு வகையில் அதிருப்தியில் உள்ளதாக தெரிகிறது.. கருத்து கணிப்புகளை வெளியிட்ட ஒருசில மீடியா நிறுவனங்கள் மீது அதிமுக தரப்பு வருத்தப்பட்டதாகவும், ஏன் இப்படி கணிப்புகளை வெளியிட்டீர்கள் என்று கேட்டார்களாம்.. அதுவும் தினகரன் கோவில்பட்டியில் அபார வெற்றி பெறுவார் என்று சொன்னதுதான் அதிமுக தலைமையின் இந்த கோபத்துக்கு காரணமாம். எனவே, அதிமுகவுக்கு ஒரு கலக்கம் உள்ளது உண்மைதான்.. மற்றபடி மீதி எல்லாம் வதந்திகள்" என்றனர்.