தமிழ்நாடு ஆளுநர் விரைவில் மாற்றம்? பிரஸ் மீட்டில் பரபரப்பை கிளப்பிய திருமாவளவன்! என்ன சொன்னார்
சென்னை: தமிழ்நாட்டில் ஆளுநருக்கும் மாநில அரசுக்கும் இடையே மோதல் போக்கு இருப்பதாகக் கூறப்படும் நிலையில், விசிக தலைவர் திருமாவளவன் எம்பி ஆளுநர் குறித்துக் கூறியுள்ள கருத்துகள் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. ஆளுநர் விரைவில் மாற்றப்படலாம் என்று அவர் கூறியுள்ளார்.
இந்தியாவில் பாஜக அல்லாத எதிர்க்கட்சிகள் ஆட்சியில் இருக்கும் மாநிலங்களில் மாநில அரசுக்கும் ஆளுநருக்கும் மோதல் போக்கே இருக்கிறது. கேரளா, மேற்கு வங்கம், தெலங்கானா எனப் பல மாநிலங்களை இதில் உதாரணமாகச் சொல்லலாம்.
அதேபோல தமிழ்நாட்டிலும் கூட இதே நிலை தான் தொடர்ந்து வருகிறது. இந்தச் சூழலில் ஆளுநர் குறித்து விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ள கருத்துகள் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

ஆளுநர்
கடந்த சில காலமாகவே தமிழ்நாட்டில் ஆளுநருக்கும் திமுக அரசுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. தமிழ்நாடு- தமிழகம் சர்ச்சையே பெரிய எதிர்வினையை உருவாக்கிய இருந்தது. இந்தச் சூழலில் தமிழ்நாடு சட்டசபை தொடங்கும் போது, ஆளுநர் ரவி அரசு தயாரித்துக் கொடுத்த உரையை முழுமையாக வாசிக்காமல் சில பகுதிகளைத் தவிர்த்து வாசித்தது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இதற்கு எதிராகத் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அப்போதே தீர்மானத்தைக் கொண்டு வந்தார்.

திருமாவளவன்
இந்தச் சூழலில் ஆளுநர் குறித்து விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ள கருத்துகள் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. சென்னை செல்ல மதுரை விமான நிலையம் வந்த விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், "தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இப்போது தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டதாகவே தெரிகிறது. டெல்லி சென்று திரும்பியதில் இருந்தே மாநில அரசுக்கு எதிரான போக்கை அவர் கடைப்பிடிக்காமல் அமைதியாக இருந்து வருகிறார்.

புதிய ஆளுநர்?
தற்போதுள்ள ஆளுநருக்குப் பதிலாக அவரது பொறுப்பிற்கு வேறு ஒருவரை நியமிக்க இருப்பதாகத் தகவல் வருகிறது" என்று கூறி அதிர்ச்சி கொடுத்தார். தொடர்ந்து பேசிய அவர், "வடமாநிலங்களில் சாதி வாரியான கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அங்கு இதற்கு வலுவான குரல் இருக்கவே செய்கிறது. பீகாரில் சாதி வாரியான கணக்கெடுப்பை நடத்த ஆரம்பித்தே விட்டனர்.

அதிமுகவுக்கு நல்லதல்ல
தமிழ்நாட்டிலும் சாதி வாரியான கணக்கெடுப்பை நடத்த வேண்டும். அதற்குத் தேவையான நடவடிக்கைகளை திமுக அரசு செய்ய வேண்டும்" என்றார். மேலும், அதிமுக மற்றும் ஈரோடு இடைத்தேர்தல் குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், "அதிமுகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சி பூசலை அவர்கள் சீக்கிரம் சரி செய்ய வேண்டும். இந்த பூசல் பாஜகவுக்கே சாதகமாக அமையும். அங்குள்ள இரு பிரிவுகளும் இப்போது பாஜகவுக்குப் போட்டி போட்டுக் கொண்டு காவடி தூக்குகிறார்கள். இது தமிழ்நாட்டிற்கும் நல்லதில்லை.. அதிமுகவுக்கும் நல்லதில்லை.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்
ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் போட்டியிடுகிறது. திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றிக்காக விசிக நிச்சயம் பாடுபடும். சட்டசபைத் தேர்தல் சமயத்தில் திமுக கொடுத்த வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றி வருகிறது. நிறைவேற்றப்படாமல் இருக்கும் வாக்குறுதிகளை விரைந்து செயல்படுத்த வலியுறுத்துவோம்" என்றார்.

ஈவிகேஎஸ் இளங்கோவன்
ஈரோடு கிழக்கு தொகுதியில் எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவேரா மறைவைத் தொடர்ந்து அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஈவிகேஎஸ் இளங்கோவன் அங்குக் களமிறங்குகிறார். காங்கிரஸ் கமிட்டி தலைவர், மத்திய அமைச்சர் எனப் பல பதவிகளில் இருந்துள்ள அவர், மறைந்த எம்எல்ஏ திருமகன் ஈவேராவின் தந்தை ஆவர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications