நாள் குறிச்சாச்சு! வானிலையில் நடக்கும் ட்விஸ்ட்.. புயல் வருகிறதா? இன்று தமிழ்நாட்டில் என்ன நடக்கும்?
சென்னை: தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரம் அடைந்து உள்ளது. கடந்த 10 நாட்களாக பெரிதாக மழை பெய்யவில்லை.
கடைசியாக உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக மாறியும் கூட பெரிதாக மழையை கொடுக்கவில்லை. கடைசியாக 2 வாரங்களுக்கு முன் காற்றழுத்த தாழ்வு பகுதி அந்தமான் அருகே வங்கக்கடலில் உருவானது.
5 வயது குட்டி பையன்.. நீச்சல் குளத்தில் இழுத்து சென்ற மலைப்பாம்பு! அடுத்தநொடி சீனுக்குள் வந்த தாத்தா

மழை இல்லை
இது கனமழையை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், பெரிதாக மழையை கொடுக்காமல் மறைந்து உள்ளது. இது பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்திய காற்றழுத்த தாழ்வு பகுதி ஆகும். முதலில் இது வடக்கு சென்னையை நோக்கி செல்லுமா அல்லது டெல்டாவிற்கு செல்லுமா என்ற குழப்பம் இருந்தது. அதன்பின் வறண்ட காற்று காரணமாக இது வலிமை அடைவதில் சிக்கல் இருந்தது. வறண்ட காற்று இந்த தாழ்வு பகுதியை வலிமை அடைய விடாமல் தடுத்தது. பெரும் போராட்டத்திற்கு பின்புதான் இது தாழ்வு மண்டலமாவே மாறியது. ஆனால் மண்டலமாக மாறிய சில மணி நேரங்களில் அது வலிமை இழக்க தொடங்கியது. அதற்கும் கூட வறண்ட காற்றே காரணமாக இருந்தது.

அடுத்து என்ன?
இதன் காரணமாகவே அந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மழையை கொடுக்கவில்லை. தற்போது கிழக்கு காற்று காரணமாக தமிழ்நாட்டில் லேசான மழை பெய்து வருகிறது. ஒரு சில இடங்களில் லேசான மழை ஆங்காங்கே பெய்து வருகிறது. முக்கியமாக வடக்கு மாவட்டங்களிலும், தென் மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது. ஆனால் பெரிதாக ஒரே நாளில் கொட்டித்தீர்க்கும் அளவிற்கும் கனமழை பெய்யவில்லை. இந்த நிலையில்தான் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று ஒருசில இடங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

இன்று
இந்த நிலையில் தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டு உள்ளது. அதன்படி இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் மழை பெய்யும். இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் டிசம்பர் 5-ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது. இல்லையென்றால் 2 நாட்கள் தள்ளிப்போய் 7ம் தேதி தாழ்வு பகுதி உருவாகவும் வாய்ப்பு உள்ளது. காற்றழுத்த பகுதிக்கு முன்னதாக கிழக்கு காற்று காரணமாக தென் மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்து உள்ளது. தென் மாவட்டங்களில் இதனால் சில இடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்புகள் உள்ளன.

மழை
5ம் தேதி உருவாகும் தாழ்வு பகுதி வலிமை அடையவும் வாய்ப்புகள் உள்ளன. புயலாக மாறும் வாய்ப்புகளும் உள்ளன. மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து செல்லும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. டிசம்பர் 8-ம் தேதியை ஒட்டி தமிழக-புதுவை கடலோரப்பகுதிகளில் இது மையம் கொண்டு இருக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டு உள்ளது. நாளை தமிழ்நாட்டில் தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களிலும் மழை பெய்யும். உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும். தென் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையில் 2 நாட்களுக்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். சென்னையில் மழை பெய்ய வாய்ப்பு இல்லை.