சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எதிர்ப்பை மீறி எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி தேர்வு செய்யப்பட்டால்.. ஓபிஎஸ் வகுத்த பலே திட்டம்!

Google Oneindia Tamil News

சென்னை: ஒரு வேளை சட்டசபை எதிர்க்கட்சித் தலைவராக கடும் எதிர்ப்பையும் மீறி எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டால் ஓ பன்னீர் செல்வம் தனது ஆதரவாளர்களுடன் இணைந்து சசிகலா ஆதரவுடன் கட்சியை கைப்பற்றுவாரா என்ற கேள்வி எழுகிறது.

தமிழகத்தில் கொரோனாவை தடுக்க வார் ரூம் திறப்பு.. ஐஏஎஸ் அதிகாரிகள் 6 பேர் நியமனம் தமிழகத்தில் கொரோனாவை தடுக்க வார் ரூம் திறப்பு.. ஐஏஎஸ் அதிகாரிகள் 6 பேர் நியமனம்

அதிமுகவில் இரு பெரும் தலைவர்களுக்கிடையே யார் பெரியவர் என்ற மோதல் போக்கு இருந்து வந்த நிலையில் தற்போது முக்கிய பதவிக்கு நேருக்கு நேர் சண்டையிட்டு கொள்ளும் நிலை வந்துள்ளது.

யார் எதிர்க்கட்சித் தலைவர்

யார் எதிர்க்கட்சித் தலைவர்

அதாவது எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பதை தேர்வு செய்வதற்கான அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் காரை நிறுத்துமிடத்திலிருந்தே சண்டைகள் தொடங்கியதாக கூறப்படுகிறது. அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வத்தின் காரை முன் பகுதியில் நிறுத்த முயற்சித்த போது அங்கு முதலில் வந்த எடப்பாடியின் கார் நிறுத்தப்பட்டிருந்தது.

எதிர்க்கட்சித் தலைவர்

எதிர்க்கட்சித் தலைவர்

இதனால் இரு ஆதரவாளர்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் கட்சியின் மூத்த தலைவர்கள் அவர்களை சமாதானம் செய்தனர். பின்னர் பன்னீர்செல்வமும் எடப்பாடியாரும் தனியே ஆலோசனை நடத்தியதில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை இருவருமே விட்டுத் தர தயாராக இல்லை என்றே தெரிகிறது.

16 எம்எல்ஏக்கள்

16 எம்எல்ஏக்கள்

எதிர்க்கட்சித் தலைவராக பன்னீர் செல்வம் தேர்வாக வேண்டும் என 16 எம்எல்ஏக்கள் விரும்புகிறார்களாம். அப்படியென்றால் எடப்பாடிக்கு ஆதரவு அதிகம் என்பது அர்த்தம். முதல்வர் வேட்பாளர் யார் என்ற தேர்விலேயே எடப்பாடிக்கு ஓபிஎஸ் விட்டுக் கொடுத்ததாக கூறப்படும் நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியாவது தனக்கு கிடைக்க வேண்டும் என விரும்புகிறார் ஓபிஎஸ்.

தீவிரம்

தீவிரம்

ஒரு வேளை நாளை நடைபெறும் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி எதிர்க்கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டால் ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் கூட்டத்தை விட்டு வெளியேறுவார் என தெரிகிறது. அவ்வாறு வெளியேறும் அவர் சசிகலாவுடன் இணைந்து கட்சியை கைப்பற்றும் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபடுவார் என்றே தெரிகிறது.

English summary
If Edappadi Palanisamy will be selected as Leader of Opposition then what will OPS do?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X