கடும் வெயில்.. வெப்ப அலை.. வாக்களிக்க போகிறீர்களா? அதிகாரிகள் சொன்ன முக்கிய அறிவுரை!
சென்னை: தமிழ்நாட்டில் வெப்ப அலைக்கு இடையே வாக்களிக்க செல்லும் மக்களுக்கு அரசு சுகாதாரத்துறை அதிகாரிகள் சார்பாக சில அறிவுரைகள் வழங்கப்பட உள்ளன.
தமிழ்நாட்டில் கடுமையான வெப்ப அலை வீசிக்கொண்டு இருப்பதற்கு இடையில் தற்போது லோக்சபா தேர்தல் நடந்து வருகிறது. நாடு முழுக்க லோக்சபா தேர்தல் திருவிழா பிரம்மாண்டமாக தொடங்கி உள்ளது. கடந்த 2019ம் ஆண்டை போலவே இந்த முறையும் நாடு முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.

முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இன்று வாக்குப்பதிவு நடத்தப்படுகிறது. தமிழ்நாட்டில் முதல் கட்ட தேர்தலோடு எல்லா தொகுதிகளுக்கும் தேர்தல் நடக்கும். மொத்தமுள்ள 534 லோக்சபா தொகுதிகளில் 102 தொகுதிகளுக்கு முதல் கட்டத் தேர்தல் நடைபெறுகிறது.
வெப்பம் உயர்ந்தது: தமிழ்நாட்டில் வெப்ப அலைக்கு இடையே வாக்களிக்க செல்லும் மக்களுக்கு அரசு சுகாதாரத்துறை அதிகாரிகள் சார்பாக சில அறிவுரைகள் வழங்கப்பட உள்ளன.
அதில், வெயில் அதிகமாக இருக்கும் பிற்பகல் நேரங்களில் மக்கள் வெளியே செல்வதை குறைத்துக்கொள்ள வேண்டும். அதிகாலையில் வாக்களிக்க விரும்பலாம். மதியம் 12 -3 மணி வரை மக்கள் அதிகமாக வெளியே செல்லாமல் காலை, மாலையில் வாக்களிக்கலாம்.
வாக்களிக்க செல்லும் முன் உடல் சூட்டை குறைக்கும் உணவுகளை உட்கொள்ள வேண்டும். உடல் சூட்டை அதிகரிக்கும் உணவுப்பொருட்களை குறைத்துக்கொண்டு சூட்டை தணிக்கும் பழங்கள் உள்ளிட்ட பொருட்களை உட்கொள்ள வேண்டும்.
வாக்களிக்க வெளியில் செல்லும் போது முழுதாக உடலை மறைக்கும் ஆடைகளை அணிய வேண்டும். பருத்தி ஆடைகளை பயன்படுத்த வேண்டும். தோலில் எரிச்சல், அதிக சூடு, சூடு கட்டிகள், வாந்தி, மயக்கம் ஏற்பட்டால் மருத்துவரை அணுக வேண்டும்.
ஜூஸ் உள்ளிட்ட உடலில் தண்ணீர் அளவை அதிகரிக்கும் பொருட்களை குடிக்க வேண்டும்.
குழந்தைகள், வயதானோர் வெப்ப அலையால் அதிகம் பாதிக்கப்படுவார்கள். இதனால் அவர்கள் முடிந்த அளவிற்கு வீட்டிலேயே இருக்க வேண்டும், என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் வடக்கு மாவட்டங்களில் மிக கடுமையான வெயில் இன்றும் அடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை நிலவரம்: தமிழகத்தின் உள்பகுதிகளில் உள்ள பல பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை பொதுவாக இயல்பை விட 3-5 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருந்தது. வடக்கு உள் தமிழ்நாட்டின் பகுதிகளில் இயல்பை விட (சுமார் +4.5 டிகிரி செல்சியஸ்) அதிகமாக இருந்தன.
கரூர் மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் வெப்பச் சலனம் நிலவுகிறது. அதிகபட்சமாக சேலத்தில் பதிவான வெப்பநிலை: 41.5°C (+3.9°C), அதைத் தொடர்ந்து திருப்பத்தூர்: 41.4°C (+4.2°C), கரூர் பரமத்தி: 41.0°C (+4.5°C), வேலூர்: 40.8°C ( +2.9°C), தருமபுரி: 40.7°C (+4.5°C), ஈரோடு: 40.7°C (+3.3°C) & திருச்சிராப்பள்ளி: 40.5°C (+3.1°C). திருத்தணி, நாமக்கல் பகுதிகளிலும் 40 டிகிரி செல்சியஸ் பதிவானது. மதுரை (நகரம் & விமான நிலையம்), சென்னை (MBK), கோயம்புத்தூர் மற்றும் தஞ்சாவூரில் 39°C முதல் 40°C வரை பதிவானது.
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் கடலோரப் பகுதிகளில் 34°C முதல் 37°C (இயல்புக்கு மேல் 2-3°C) மற்றும் மலைப் பகுதிகளில் 23°C முதல் 28°C வரை பதிவாகியுள்ளது (சில பாக்கெட்டுகளில் சாதாரண அதிகபட்ச வெப்பநிலையை விட குறிப்பிடத்தக்க அளவு குறிப்பிடத்தக்கது. ) சென்னை (MBK) சாதாரண அதிகபட்ச வெப்பநிலையான 39.6°C (+4.3°C)க்கும் அதிகமாகவும், NBK சாதாரண வெப்பநிலை 36.7°C (+2.4°C)க்கும் அதிகமாகவும் பதிவாகியுள்ளது.
அதன்படி விழுப்புரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் கடுமையான வெயில் அடிக்கும். இன்னொரு பக்கம் வடக்கு தமிழகம் போலவே மத்திய தமிழகத்தில் வெயில் அதிகமாக இருக்கும். திருத்தணியில் வெயில் வாட்டி எடுக்கும். ஈரோடு, வேலுார், ராணிப்பேட்டை மதுரை, திருச்சி, கரூர், ஆகிய மாவட்டங்களில் வெயில் அதிகமாக இருக்கும். இதில் வேலூரில் மிக அதிகமாக வெயில் இருக்கும். சென்னையில் கொஞ்சம் வெப்பநிலை குறைவாக இருக்கும். சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக லேசான அனல் காற்று வீசியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications