சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஒரு "ஹே" மெசேஜ் அனுப்புனது குத்தமா? பாஸுக்கு வாட்ஸ் ஆப் செய்து மாட்டிய ஊழியர்.. இதை பாருங்களேன்!

Google Oneindia Tamil News

சென்னை: ‛Hey'என அழைத்ததால் ஊழியர் ஒருவரை பாஸ் கடிந்து கொண்ட நிலையில் இதுதொடர்பான உரையாடல் போஸ்ட் வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

தற்போதைய காலக்கட்டத்தில் சமூக வலைதள பயன்பாடு அதிகரித்து உள்ளது. ஒவ்வொருவரும் தங்களின் அனுபவங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

அந்த வகையில் சமீபத்தில் ஸ்ரேயாஸ் என்பவர் ‛ரெட்டிட்' வலைதளத்தில் பகிர்ந்த பதிவு தற்போது பெரும் விவாதப்பொருளாக மாறியுள்ளது. அதுபற்றிய விபரம் வருமாறு:

Hey என அழைத்த ஊழியர்

Hey என அழைத்த ஊழியர்

ஸ்ரேயாசுக்கும், அவரது பாஸ்சுக்கும் இடையே வாட்ஸ்அப்பில் உரையாடல் நடக்கிறது. அப்போது அவரது பாஸ், ‛‛Hi ஸ்ரேயாஸ்; உங்களுக்கு கொடுத்த டெஸ்டை முடித்து சமர்பித்து விட்டீர்களா?'' என கேட்கிறார். அதற்கு ஸ்ரேயாஸ், ‛‛Hey, No, இன்னும் இல்லை'' என பதிலளிக்கிறார். இதை கேட்ட அவரது பாஸ் அவரை கடிந்து கொள்கிளார்.

 அவமானப்படுத்தும் வகையில்...

அவமானப்படுத்தும் வகையில்...

இதை கேட்ட அவரது பாஸ், ‛‛Hi ஸ்ரேயாஸ். என் பெயர் சந்தீப். Hey எனும் வார்த்தையை பயன்படுத்த வேண்டாம். இது என்னை அவமானப்படுத்தும் வகையில் உள்ளது. எனது பெயரை உங்களுக்கு நியாபகம் வைக்க முடியாவிட்டால் மிகவும் எளிமையாக Hi என அழையுங்கள். மேலும் தொழில் முறைக்காக பயன்படுத்தும் dude, man chap, chick வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும். மேலும் Hello என்பது அதிக உறுப்பினர்கள் இருக்கும்போது மட்டுமே பயன்படுத்த வேண்டும். நன்றி என கூறியுள்ளார்.

 விரைவில் புரிந்து கொள்வீர்

விரைவில் புரிந்து கொள்வீர்

இதற்கு ஸ்ரேயாஸ், ‛‛நாம் வாட்ஸ்அப்பில் உரையாடுகிறோம். லிங்க்இன் அல்லது மெயில் மூலம் அல்ல.மேலும் எனது பர்சனல் எண்ணை நீங்கள் தொடர்பு கொண்டதால் நான் சாதாரணமாக அழைத்தேன்'' என கூறியுள்ளார். இதையடுத்து அவரது பாஸ், ‛‛வாட்ஸ்அப் என்பது யாருக்கும் பர்சனல் பிளேஸ் கிடையது. இது வணிகத்திற்காக பயன்படுத்தப்படுகிறது. நான் எனது சித்தாந்தத்தை உங்களிடம் வலியுறுத்தவில்லை. புரிந்து கொண்டால் சரி அல்லது விரைவில் நீங்கள் புரிந்து கொள்வீர்கள்'' என கூறியுள்ளார்.

கமெண்ட்டுகள் என்ன?

கமெண்ட்டுகள் என்ன?

இந்த வாட்ஸ்அப் உரையாடலை தான் ஸ்ரேயாஸ் ஸ்கீரின் ஷாட்டாக பகிர்ந்துள்ளார். இது தற்போது பெரும் விவாதப்பொருளாகி உள்ளது. இதற்கு ஏராளமானவர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். இதற்கு ஒருவர், ‛‛Hey என்பது பொதுவாக தன்னுடன் பணியாற்றும் நபர்கள், டீம் உறுப்பினர்கள் மத்தியில் பயன்படுத்தப்பட்டு வருகிறது'' என்றார். இன்னொருவரோ, ‛‛நான் எப்போதும் Chap என்றே உரையாடலை துவங்குகிறேன்'' என கூறினார். 3வது நபரோ, ‛‛இந்த நபருக்கு வாழ்த்து தெரிவிக்கிறேன். Hey என்பதை எந்த வகையில் தொழில் முறையற்ற வார்த்தை என அவர் கூறுகிறார் என்பதை அறிய விரும்புகிறேன்'' என தெரிவித்துள்ளார். இந்த பதிவானது 53.5 ஆயிரம் அப்வோட்ஸ் பெற்றுள்ளதோடு 6,600 கமெண்ட்டுகள் கிடைத்துள்ளன.

English summary
A Reddit user shared a screenshot of his WhatsApp conversation with his boss and now the post is going viral on the internet. It shows that the Reddit user was pulled up for greeting his boss with a “hey” on WhatsApp messenger.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X