"மே 26 ரிப்பீட்டு".. பிரதமர் பெயரை சொன்ன போது "சைலன்ட்".. ஸ்டாலின் பெயரை சொன்னதும் அதிர்ந்த அரங்கம்
சென்னை: பிரதமர் மோடியின் பெயரை மத்திய அமைச்சர் எல் முருகன் சொன்னதும் நேரு உள் விளையாட்டரங்கில் குறைந்த அளவு சப்தத்தில் கரகோஷம் ஒலித்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் பெயரை சொன்னதும் அரங்கமே கரவொலியால் அதிர்ந்தது.
Recommended Video
சென்னை மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெறுகின்றன. இந்த போட்டிகள் நாளை தொடங்கி ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்த போட்டியின் தொடக்க விழா இன்றைய தினம் நடை பெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் ஆர் என் ரவி , மத்திய அமைச்சர்கள் அனுராக் தாகூர், எல் முருகன், தமிழக அமைச்சர் மெய்யநாதன் உள்ளிட்டோர்கலந்து கொண்டனர்.

மெய்யநாதன்
இந்த நிகழ்ச்சியில் மாநில அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசுகையில் தமிழகத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெற காரணமாக இருந்தவர் பிரதமர் நரேந்திர மோடி என்றார். இவரை தொடர்ந்து மத்திய அமைச்சர் எல் முருகன் பேசினார்.

பிரதமர் நரேந்திர மோடி
அவர் பிரதமர் நரேந்திர மோடியின் பெயரை கூறிவிட்டு சில வினாடிகள் காத்திருந்தார். பின்னர் தமிழக ஆளுநர் ஆர். என். ரவி என்ற பெயரை சொல்லிவிட்டும் சில வினாடிகள் காத்திருந்தார். அப்போது குறைவாகவே கரகோஷம் ஒலித்தது. இதனால் அவரது முகம் லேசாக மாறியது.

முதல்வர் ஸ்டாலின்
இதையடுத்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் என பெயரை முடிப்பதற்குள் கைதட்டல்களும் விசில்களும் பறந்தன. இதையடுத்து அமைச்சர் மெய்யநாதன் பெயரை சொல்லும் போதும் கைதட்டல்கள் அதிர்ந்தன. இது போன்றதொரு சம்பவம் கடந்த மே 26 ஆம் தேதியும் நடைபெற்றது.

நேரு விளையாட்டரங்கம்
கடந்த மே 26 ஆம் தேதி இதே போல் நேரு விளையாட்டரங்கத்திற்கு உள்கட்டமைப்பு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்திருந்தார். அப்போது பிரதமர் பெயரை சொன்ன போது கைதட்டல்கள் குறைவாகவும் முதல்வர் ஸ்டாலின் பெயரை சொன்னதும் கைதட்டல்களின் ஒலி அதிகமாகவும் இருந்ததால் பாஜக அதிர்ச்சி அடைந்தது. அந்த சம்பவம் இன்று மீண்டும் நடந்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications