பேரறிவாளனுக்கு எப்போ கல்யாணம்... அம்மா முடிவு செய்வார் என்கிறார் அப்பா குயில்தாசன்
பேரறிவாளனுக்கு எப்பேது திருமணம் செய்வது என்று அவரது அம்மா முடிவெடுப்பார் என்று குயில்தாசன் கூறியுள்ளார்.
ஜோலார்பேட்டை: பேரறிவாளனை உச்சநீதிமன்றம் விடுவித்துள்ளதால் குடும்பத்தினர் ஆனந்த கண்ணீரில் திளைக்கின்றனர். மகனின் விடுதலைக்காக போராடிய அனைவருக்கும் நன்றி கூறியுள்ளார் பேரறிவாளன் தந்தை குயில்தாசன். பேரறிவாளனுக்கு எப்போது திருமணம் செய்வது என்று அவரது அம்மா முடிவெடுப்பார் என்று கூறியுள்ளார் குயில்தாசன்.
Recommended Video
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்து வரும் பேரறிவாளனை முழுமையாக விடுதலை செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

உச்சநீதிமன்ற நீதிபதிகள் எல். நாகேஸ்வரராவ், பி.ஆர். கவாய், ஏ.எஸ். போபண்ணா ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் சட்டப்பிரிவு 142ஐ பயன்படுத்தி பேரறிவாளனை விடுவித்தனர்.161வது பிரிவில் முடிவெடுக்க ஆளுநர் தாமதப்படுத்தினால் உச்சநீதிமன்றமே முடிவெடுக்க வழிவகுக்கிறது 142 பிரிவு.
உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பில், 'ஆளுநர் காலதாமதம் செய்ததால் நீதிமன்றமே தனது அதிகாரத்தை பயன்படுத்தி விடுவிக்கிறது. அரசியல் சாசனப் பிரிவு 161ன் படி மாநில அரசு எடுத்த முடிவை ஆளுநர் செயல்படுத்தவில்லை. ஆளுநர் காலதாமதம் செய்தது தவறு.
ஆளுநர் முடிவெடுக்காமல் குடியரசுத் தலைவருக்கு அனுப்பிவைத்தது அரசியல் அமைப்பு சட்டப்படி தவறு. ஆளுநர் செயல்படாத விவகாரம் நீதிமன்ற விசாரணைக்கு உட்பட்டது. பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் ஒன்றிய அரசின் கருத்தை பெறத் தேவையில்லை. முழுமையாக ஆராய்ந்த பிறகே பேரறிவாளனை விடுவிக்க தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றியது.
மாநில அரசின் தீர்மானத்தை தாமதப்படுத்த யாருக்கும் அதிகாரம் இல்லை. பேரறிவாளன் விவகாரத்தை மீண்டும் ஆளுநர் பரிசீலனைக்கு அனுப்ப விரும்பவில்லை. பேரறிவாளனை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். ஆளுநர் காலதாமதம் செய்ததாலேயே உச்சநீதிமன்றம் இந்த முடிவை எடுத்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடுதலை பேரறிவாளன் உறவினர்களுக்கு ஆனந்த கண்ணீரை வரவழைத்துள்ளது. ஜோலார்பேட்டை இல்லத்தில் அனைவரும் குவிந்துள்ளனர். தீர்ப்பு குறித்து கேள்விப்பட்ட உடன் அனைவரும் மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைக்கின்றனர். பேரறிவாளனை கட்டி அணைத்து ஆனந்த கண்ணீரை வெளிப்படுத்தினர்.
அம்மா, சகோதரிகள் அனைவருக்கும் இனிப்புகளை ஊட்டினார் பேரறிவாளன். செய்தியாளர்களிடம் பேசிய பேரறிவாளனின் தந்தை குயில்தாசன், மனிதாபிமானத்தோடு போராடிய அனைவருக்கும் நன்றி என்று கூறினார். அடுத்தகட்டமாக என்ன செய்வது என்று குடும்பத்தோடு பேசி முடிவு செய்வோம் என்று கூறினார் குயில்தாசன்.
பேரறிவாளன் திருமணம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த குயில்தாசன் எல்லாமே குடும்பத்தோடு பேசி முடிவெடுப்போம். அம்மாதான் முடிவு செய்து கூறுவார்கள் என்று தெரிவித்தார் மகிழ்ச்சியாக. பேரறிவாளன் விடுதலையால் மட்டற்ற மகிழ்ச்சியில் திளைக்கின்றனர் குடும்பத்தினர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications