"கசந்த உறவு?".. எடப்பாடி பழனிசாமியின் மாஸ்டர் பிளான்.. சமாளிக்க ரெடியா?.. உற்று கவனிக்கும் "மேலிடம்"

எடப்பாடி பழனிசாமி பாஜகவை எதிர்க்கவும், சமாளிக்கவும் தயாராகிவிட்டாரா

Subscribe to Oneindia Tamil

சென்னை: எடப்பாடி பழனிசாமி கிட்டத்தட்ட ஒரு முடிவுக்கு வந்துவிட்டதாக சொல்கிறார்கள்.. அதிமுகவில் நாளுக்கு நாள் விறுவிறுப்புகளும், சலசலப்புகளும் கூடிவவரும் நிலையில், அது தொடர்பான தகவல்கள் இணையத்தில் எந்நேரேமும் பறந்து கொண்டேயிருக்கின்றன.

செஸ் ஒலிம்பியாட் போட்டிகளைத் துவக்கி வைக்க இன்று மாலை சென்னை வருகிறார் பிரதமர் மோடி.. தமிழகத்துக்கும், நம் இந்தியாவுக்கும் பெருமை சேர்க்கும் வகையில் அமைய போகும் நிகழ்வு இதுவாகும்...

முழுக்க முழுக்க விளையாட்டு போட்டிகளை துவக்கி வைப்பதற்காகவே பிரதமர் மோடி வருகிறார் என்றாலும், இதற்குள் சில மறைமுக அரசியல் செய்திகளும் பரபரத்து கொண்டுதான் இருக்கின்றன.

குறிப்பாக, அதிமுகவின் தொண்டர்கள் மிக மிக ஆர்வத்துடன் உள்ளனர்.. கடந்த 2 மாதமாக நடந்து வரும் சம்பவங்களை பார்த்து நொந்து போய் உள்ளன.

2 தலைவர்களையும் மோடி சமாதானப்படுத்துவாரா? அவர்களை ஒன்றாக கூப்பிட்டு பேசுவாரா? தனித்தனியாக பேசுவாரா? இந்த தலைவர்கள் எப்போது பிரதமர் மோடியை சந்தித்து பேச போகிறார்கள்? என்ன பேச போகிறார்கள்? அப்படியே பிரதமர் அழைத்து பேசினாலும், அவர் சொல்வதை எடப்பாடி ஏற்றுக் கொள்வாரா? இப்படி எத்தனையோவிதமான யூகங்கள் வட்டமடித்து கொண்டிருக்கின்றன.. குறிப்பாக, எடப்பாடி பழனிசாமியின் அரசியல் எப்படி நகர போகிறது என்பதே மிகப்பெரிய எதிர்பார்ப்பாக உருவாகி உள்ளது..

 உச்சக்கட்ட டென்ஷன்

உச்சக்கட்ட டென்ஷன்

5 நாள் பிளானுடன் டெல்லிக்கு சென்ற நிலையில், முக்கிய தலைவர்களை சந்திக்க முடியாமல் போய்விட்டது.. மோடி, அமித்ஷா தரப்பில் நேரம் ஒதுக்காததால் அவசர அவசரமாக 2 நாளில் சென்னை திரும்பினார்... எப்படியும் பிரதமர் ஒலிம்பிக் விழாவுக்காக சென்னை வரும்போது சந்திக்க வாய்ப்பு கிடைக்கலாம் என்றாலும், முன்கூட்டியே சில விஷயங்களை, மேலிடத்தில் சொல்லவே எடப்பாடி டெல்லி சென்றிருந்தார்.. அப்படி மட்டும் தலைவர்களை சந்தித்து பேசியிருந்தால், ஒற்றை தலைமை விவகாரத்தை விளக்கி சொல்லி, மேலிடத்தையே தன்பக்கம் சம்மதிக்க வைக்க முயற்சிகளை எடப்பாடி மேற்கொண்டிருப்பார் என்கிறார்கள்..

அமித்ஷா

அமித்ஷா

ஆனால், ராம்நாத் கோவிந்தின் பிரிவுபச்சார விருந்து விழாவில், பிரதமரை பார்த்தபோது, தனியாக சந்திக்க நேரம் கேட்டாராம் எடப்பாடி.. ஆனால் அவரோ, அமித்ஷாவை பாருங்கன்னு சொல்லிட்டாராம். அமித்ஷாவோ, நேரம் இல்லை, ஸாரி என்று சொல்லி அப்பாயிண்ட்மென்ட்டையும் தரவில்லை என்று செய்திகள் பரபரத்தன.. இப்படி அப்பாயின்ட்மென்ட் தராததுடன், சிபிஐ ரெய்டுக்கான அனுமதி என்ற செய்திதான், எடப்பாடிக்கு கிடைத்த முதல் ஷாக்காக அப்போது இருந்தது..

 ரூட்டில் அதிரடி

ரூட்டில் அதிரடி

மேலும் மாஜிக்களுக்க நெருக்கமான ஒப்பந்ததாரர்களிடம் நடத்திய ரெய்டும், அதன் மூலம் கணக்கில் வராத பல கோடி ரூபாய்கள் கண்டுபிடிக்கப்பட்டதும் எடப்பாடி பழனிசாமி, வெகுவாக தரப்பை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி விட்டது.. கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோதுகூட, டெல்லியை சமாதானப்படுத்தி விடலாம் என்பதே எடப்பாடியின் முழுமூச்சு நம்பிக்கையாக இருந்தது.. மொத்தமாக தன்னை டெல்லி கைவிட்டுவிட்டதை உணர்ந்த பிறகுதான், தன்னுடைய ரூட்டில் அதிரடியை காட்டினார் எடப்பாடி பழனிசாமி..

அப்பாயிண்மென்ட்

அப்பாயிண்மென்ட்

அந்த கோபத்தில்தான் டெல்லியில் இருந்து திரும்பிய உடனேயே, ஓபிஎஸ் டீமில் இருந்தவர்களை அதிரடியாக நீக்கி உத்தரவிட்டாராம்.. தலைவர்கள் தன் மீது கோபமாக இருப்பதை அறிந்தும், எடப்பாடி இந்த சஸ்பெண்ட் நடவடிக்கையை எடுத்தது, டெல்லிக்கே கொஞ்சம் ஷாக்தானாம்.. மேலும், பாஜக எந்த வகையில் செக் வைத்தாலும், அவைகளை எதிர்க்கவும், சமாளிக்கவும், எடப்பாடி பழனிசாமி துணிந்து விட்டதாகவும் சொல்கிறார்கள்..

 மாஸ்டர் பிளான்கள்

மாஸ்டர் பிளான்கள்

அதுமட்டுமல்ல, தனக்கு நெருக்கமானவர்களிடம், பாஜகவை எதிர்க்க வேண்டிய நிலை வந்தாலும் வரலாம்... எதுக்கும் தயாராக இருக்க வேண்டும் என்றும் அலர்ட் செய்துள்ளாராம்.. இதெல்லாம் எந்த அளவுக்கு நடைமுறை சாத்தியம் என்று தெரியவில்லை.. ஆனால், ஊழல் புகார், ரெய்டு உள்ளிட்ட விவகாரங்களில், பலம்பொருந்திய பாஜகவை வீறுகொண்டு எடப்பாடியால் சமாளிக்க முடியுமா? பாஜகவை பகைத்து கொண்டு இனி அரசியல் செய்ய முடியுமா? என்ற சந்தேகம் பரவலாக எழுகிறது..

 ரத்தத்தின் ரத்தங்கள்

ரத்தத்தின் ரத்தங்கள்

மற்றொருபுறம், அதிமுகவில் 90 சதவீத நிர்வாகிகளின் வலிமையை பெற்றுள்ள எடப்பாடி பழனிசாமியை, பாஜகவும், அவ்வளவு சீக்கிரம் பகைத்து கொள்ளுமா? வரப்போகும் எம்பி தேர்தலில் எடப்பாடி இல்லாமல், பாஜகவால் கணக்கு போட முடியுமா? என்ற இன்னொரு சந்தேகமும் எழுகிறது.. ஒருவேளை இந்த 2 தலைவர்களும் இன்றே பிரதமரை சந்தித்து, பிரச்சனையை சுமூகமாக முடித்து கொண்டால் ஆலமரம்போன்ற அதிமுக நிம்மதி பெருமூச்சுவிடும்.. இல்லாவிட்டால், ரத்தத்தின் ரத்தங்களை நினைத்தால்தான், கவலையாக உள்ளது என்கிறார்கள் பொதுவானவர்கள்.

Recommended Video

    இபிஎஸ் மீதான டெண்டர் முறைகேடு: விரைவில் விசாரிக்கும் உச்சநீதிமன்றம்
    அப்பாயிண்ட்மென்ட்

    அப்பாயிண்ட்மென்ட்

    இந்நிலையில் சென்னை வந்துள்ள பிரதமர் மோடி, எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் இருவரையுமே சந்திக்க போவதாக தகவல் வெளியாகி உள்ளது.. அதிலும் முதலில் எடப்பாடியை அதாவது இன்றைய நாளில் சந்தித்துவிட்டு, நாளை ஓபிஎஸ்ஸை சந்திக்க உள்ளதாகவும் இன்னொரு தகவல் கூறுகிறது.. இதற்கு காரணம், டெல்லி வந்து முதலில் அப்பாயிண்ட்மென்ட் எடப்பாடி என்பதால், அவரை முதலி அழைத்தது பேசி, அவர் சொல்ல முயல்வதை அறிய பிரதமர் தரப்பு முடிவு செய்துள்ளதாம்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+