சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அழகிரி வீட்டுக்கு பறந்த போன்.. திமுக வயிற்றில் "புளியை கரைக்கும்" மேட்டர்.. ஆட்டத்தை துவங்குகிறாரா?

அழகிரி முதல்வர் ஸ்டாலினை சந்தித்து எப்போது பேசுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது

Google Oneindia Tamil News

சென்னை: மதுரையில் இருந்து அழகிரி, முதல்வர் ஸ்டாலினை சந்திக்க போவதாக செய்திகள் வெளியான நிலையில், அப்படி ஒரு சந்திப்பே நேற்றைய தினம் நடக்கவில்லை.. இதற்கு என்ன காரணம்? என்ற தகவல்கள் கசிந்து வருகின்றன.

அஞ்சாநெஞ்சன் அழகிரிக்கென்று ஆதரவாளர்கள் கூட்டம் இன்றுவரை இருக்கவே செய்கிறது.. அதேசமயம், கட்சிக்குள் அழகிரியை சேர்க்க திமுக மேலிடம் தயக்கம் காட்டுவதாகவும் கூறப்படுகிறது.

ஆட்சி அமைந்த இந்த 8 மாத காலத்தில், அழகிரி எத்தனையோ முறை சென்னைக்கு வந்து போயுள்ளார்.. அதேபோல, ஸ்டாலினும் அரசு பணி காரணமாக மதுரைக்கு சென்று திரும்பி உள்ளார்..

துக்ளக் ரமேஷ் மணிவிழாவில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின்.. மரக்கன்று பசுமைக்கூடை வழங்கி வாழ்த்து துக்ளக் ரமேஷ் மணிவிழாவில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின்.. மரக்கன்று பசுமைக்கூடை வழங்கி வாழ்த்து

 நிகழ்ச்சி

நிகழ்ச்சி

ஆனால், இதுவரை இரு தரப்பிலும் பேச்சுவார்த்தை நடக்கவில்லை. குடும்ப நிகழ்ச்சிகளில் இருவருமே பங்கேற்றாலும், ஒருவரையொருவர் நேருக்கு நேர் சந்தித்து கொள்வதே இல்லை.. எத்தனையோ முறை அழகிரி திமுகவில் இருந்து நீக்கப்பட்டாலும், கருணாநிதியில் கண்கள் பணிக்க, இதயம் இனிக்க மறுபடியும் திமுகவில் வந்து சேர்ந்து விடுவார். ஆனால், கடைசிமுறை அது முடியாமல் போய்விட்டது.. கருணாநிதி இறந்தபிறகு, குடும்பத்தினர் முயன்றும் ஸ்டாலினிடம் எதுவுமே எடுபடவில்லை..

 மாற்றுக்கட்சி

மாற்றுக்கட்சி

மாற்றுக்கட்சியில் இருந்து வருவோரையெல்லாம் சீட் தந்து அழகுபார்க்கும் ஸ்டாலின், சொந்த அண்ணனை சேர்த்து கொள்ளக்கூடாதா? அவரும் கருணாநியின் வாரிசுதானே? உரிமை இருக்கிறதுதானே? என்ற குரல்கள் காதுபட விழுந்தாலும் அதை கருத்தில் கொள்ளவில்லை என்றே கூறப்படுகின்றன. இந்நிலையில்தான் நேற்று முழுவதும் அழகிரி, முதல்வர் பிறந்தநாளையொட்டி நேரில் சந்தித்து வாழ்த்து சொல்ல போகிறார் என்று யாரோ கொளுத்தி போட்டனர்..

 என்ன காரணம்?

என்ன காரணம்?

இந்த செய்தி மீடியா உலகில் பற்றி கொண்டு எரிந்தது.. ஆனால், இதுவும் வழக்கம்போல் ஒன்றுமில்லாத செய்தியாக அமுங்கிவிட்டது.. உண்மையிலேயே அழகிரியை ஸ்டாலின் ஏற்று கொள்ள தயங்குகிறார் என்று தெரியவில்லை.. ஆனால், ஒருசில காரணங்கள் வட்டமடித்து கொண்டிருக்கின்றன. அழகிரி வீட்டுக்கு, ஸ்டாலின் கிச்சன் கேபினட் தரப்பு போன் செய்ததாம்.. அப்போது கட்சியிலும் இடம் தராமல், எனது ஆதரவாளர்களையும் கட்சியில் இணைத்துக் கொண்டு என்னிடம் இருந்தவர்களை எல்லாம் அழைத்துக் கொண்டு முதுகில் குத்தி விட்டீர்களே என்று அழகிரி கொந்தளித்துள்ளார்..

 சமாதானம்

சமாதானம்

முதுகில் குத்துபவர்கள் என்று தெரிந்தும் அருகில் ஏன் வைத்திருந்தீர்கள் என்று பதிலுக்கு கேட்டதாம் சென்னையில் இருந்து சென்ற போன்.. இப்படித்தான் பேசி பேசி இரு தரப்பும் சமாதானமாகிஉள்ளது.. இதை வைத்துதான் அழகிரி, நேற்றைய தினம் ஸ்டாலினை சந்திக்க போவதாக செய்திகள் வந்தன. ஆனால் வேறு விஷயம் இங்கு நடந்துள்ளது.

 திமுக ஷாக்

திமுக ஷாக்

மதுரை 47வது வார்டில் திமுக கூட்டணியான காங்கிரஸ் வேட்பாளர் மேகலா நிறுத்தப்பட்டுள்ளார்.. இவரை எதிர்த்து அழகிரியின் ஆதரவாளர் முபாரக் அமைச்சரின் மனைவி பானு சுயேச்சையாக போட்டியிட்டார்... ஆனால், பாஜக வேட்பாளரை விட 2,270 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார் பானு.. இது பாஜகவையும் தாண்டி திமுகவுக்கே கொஞ்சம் ஷாக்தான்.. திமுக ஆதரவாளருக்கு எதிராக, வேறு ஆதரவாளரை நிறுத்தி வெற்றி பெற செய்ததில் அழகிரியின் பங்கு இருக்குமோ? அழகிரியை தன்னுடைய ஆட்டத்தை ஆட ஆரம்பித்துவிட்டாரா? என்ற சந்தேகம் திமுக தரப்பில் கிலியாய் எழுந்துள்ளதாம்..!

English summary
When will mk stalin meet mk azhagiri and what is azhagiris plan
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X