கத்தி படத்தில் மேப் போட்டு கைதிய பிடிச்ச விஜய்.. இப்போது மவுனமாக இருப்பது ஏன்? பரந்தாமன் கேள்வி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கத்தி படத்தில் மேப் போட்டு தப்பிய சிறைக் கைதியை பிடித்த முதல்வர் விஜய் மவுனம் காப்பது ஏன் என்று திமுக நிர்வாகி பரந்தாமன் கேள்வி எழுப்பியுள்ளார். முதல்வர் விஜய்யின் மேப் இப்போது எங்கே என்று கேள்வி எழுப்பியுள்ள பரந்தாமன், அமைச்சர் நிர்மல்குமார் எங்கு கொண்டு போய் இப்போது முகத்தை வைத்து கொள்வார் என்றும் விமர்சித்துள்ளார்.

தேனி மாவட்டம் தேக்கம்பட்டியில் உள்ள மாவட்ட சிறைச்சாலையில் இருந்து விழுப்புரத்தைச் சேர்ந்த லிங்கம், ராஜா, சிக்கந்தர், கருப்பசாமி, சிலம்பரசன், திருப்பதி, மீனாட்சி சுந்தரம் உள்ளிட்ட 17 கைதிகள் தப்பி இருக்கின்றனர். நேற்றிரவு 11 மணியளவில் நடந்த இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

DMK Vijay Kaththi Jail

1995க்கு பின் சிறைச்சாலையில் இருந்து மொத்தமாக 17 பேர் ஒரே நேரத்தில் தப்பி இருப்பது இதுவே முதல்முறையாகும். இதனால் சட்டம் ஒழுங்கு குறித்த கேள்விகள் எழுந்துள்ளது. இதுதொடர்பாக திமுக சட்டத்துறை இணைச் செயலாளர் பரந்தாமன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், இப்படியொரு சம்பவம் தமிழ்நாட்டில் நடந்ததே இல்லை. 1995ல் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் 55 குற்றவாளிகள் தப்பினர்.

அதுதான் பெரிய சம்பவம். அதன்பின் எந்த சிறையிலும் சிறைக் காவலர்களை தாக்கிவிட்டு தப்பியோடியதே கிடையாது. தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கை காப்பாற்றும் லட்சணம் இதுதானா? புழல் சிறையில் சென்று ஆய்வு நடத்தினீர்கள். அதற்கு சோசியல் மீடியாவில் என்ன சொல்லப்படுகிறது என்றால், ஜோதிடர் உங்களுக்கு பரிகாரமாக சிறை வாசலில் கால் வைத்துவிட்டு வர சொன்னதாக கூறுகின்றனர்.

உண்மையில் ஆய்வு செய்தீர்களா? ஆய்வு செய்தீர்கள் என்றால், புழல் சிறையில் இருந்து 2 பேர் எப்படி தப்பித்தார்கள்? 50 பேர் இதுவரை சிறையில் இருந்து தப்பி இருக்கிறார்கள். அமைச்சர் நிர்மல்குமாருக்கு பொழுது விடியக் கூடாது. விடிந்துவிட்டால் தெரு முனையில் நின்று திமுகவை திட்டத் தொடங்கிவிடுவார். அந்த நேரத்தில் 2 ஃபைல்களை பார்க்கலாம்.

கத்தி படத்தில் மேப் போட்டு தப்பிய கைதியை பிடித்தார். இப்போது விஜய்யின் மேப் எங்கே? கைதிகளை எங்கு சென்று பிடிக்கப் போகிறார்? சினிமா மோகத்தில் வாக்களித்த மக்களுக்கு மிகப்பெரிய பரிசு கொடுத்துள்ளார். சினிமாவில் ஹீரோ சார் நீங்க.. ஆனால் நடைமுறையில் முதல்வராக ஜீரோ.. ஏன் முதல்வர் விஜய் மவுனமாக இருக்கிறார்? ரீல்ஸ் போடுவது தான் நோக்கம் என்றால், ஏன் ஆட்சிக்கு வந்தீர்கள்.

ஒரு மாற்றத்தை மக்கள் விரும்பி கொடுத்துள்ளார்கள். அதற்கு ஏற்ப எந்த அமைச்சராவது செயல்படுகிறார்களா? அல்லது கற்றுக் கொள்ளவாவது செய்கிறார்களா? சிறைத்துறையில் இவ்வளவு பெரிய சம்பவம் நடந்துள்ளது. அமைச்சர் நிர்மல்குமார் எங்கு கொண்டு போய் முகத்தை வைத்து கொள்வார்? என்று சாடியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+