சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"சிக்னலை" வச்சு கண்டுபிடிங்க பார்ப்போம்.. சில்மிஷ சாமியார் நித்தியானந்தாவின் குறும்பு.. ஓவர்தான்!

கைலாசா எங்கே இருக்கிறது? என்று நித்தியானந்தா ஒரு கேள்வி கேட்டுள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: "கரன்சி வந்தாச்சு.. அறிவிப்பு வந்தாச்சு.. மதுரை ஹோட்டல்காரருக்கு அனுமதியும் தந்தாச்சு.. இப்போ "கைலாசா நாட்டைக் கண்டுபிடிக்க முடியுமா" என்று மறைமுக சவால் விடுத்துள்ளார் நித்தியானந்தா!

Recommended Video

    கைலாசாவை சிக்னலை வைத்து கண்டுபிடியுங்கள், பார்க்கலாம் - மறைமுக சவால் விடுத்த நித்தியானந்தா

    தென் அமெரிக்காவில் உள்ள ஈகுவடாரில் ஒரு தனித் தீவு வாங்கிய நித்தியானந்தா அதைத் தனது தனி நாடாக அறிவித்துள்ளார்

    ஆரம்பத்தில் இருந்தே கசமுசாவில் சிக்கி வருவது நித்தியானந்தாவுக்கு வழக்கமாக ஒன்று.. இப்போதைக்கு தென் அமெரிக்காவில் உள்ள ஈகுவடாரில் தனியாக ஒரு நாட்டை வாங்கி கைலாசா என்று ஒரு பெயரும் வைத்துள்ளார்.

    இவ்வளவு நாளா இதைக் காட்டவே இல்லை.. இவ்வளவு நாளா இதைக் காட்டவே இல்லை.. "குஷி"யில் தர்ஷா குப்தா ரசிகர்கள்!

    இந்துக்கள்

    இந்துக்கள்

    இந்த கைலாசா என்பது, "இந்துமதத்தை பின்பற்ற முடியாத நாடுகளில் வசிக்கும் அனைத்து இந்துக்களின் எல்லையற்ற நாடாகும்... இது அமெரிக்காவில் உள்ள இந்து ஆதி சைவ மக்களால் உருவாக்கப்பட்டது என்றாலும் இனம், பாலினம், சாதி, மதம் என எந்த வேறுபாட்டையும் பார்க்காத இந்துக்களுக்கான நாடாகும். இந்நாட்டில் ஆன்மீகம், கலாச்சாரம் அகிம்சை ஆகியவை பின்பற்றப்படும்" என்று ஒரு விளக்கமும் தரப்பட்டது.

     சனாதன இந்து தர்மம்

    சனாதன இந்து தர்மம்

    இந்த நாட்டுக்கு மொழி இங்கிலீஷ், சமஸ்கிருதம், தமிழ்.. மதம் சனாதன இந்து தர்மம் அதாவது இந்துயிசம்.. இந்த நாட்டில் உள்நாட்டு காவல், பாதுகாப்பு, நிதி, வர்த்தகம், வீட்டுவசதி, கல்வி, தொழில்நுட்பம், சுகாதாரம், மனித வள மேம்பாடு, மேம்பட்ட நாகரிகம் இப்படி எல்லா துறைகளும் உள்ளதாம். இந்த நாட்டுக்கு சின்னம், கொடியில் நந்தி மற்றும் நித்யானந்தா உருவங்களும் உள்ளன.

     தனி ரிசர்வ் வங்கி

    தனி ரிசர்வ் வங்கி

    தனி ரிசர்வ் வங்கி அமைக்கப்பட்டுள்ளது. இந்து மக்கள் இங்கு முதலீடு செய்யலாமாம். இந்த வங்கியில் கிரிப்டோ கரன்சிகள் ஏற்கப்படுமாம்.. இந்து பல்கலைக்கழகம், குருகுலம், உள்ளிட்ட கல்விகள் இருக்கிறதாம். இந்த நாட்டுக்கு நித்யானந்தா டிவி, இந்துயிஸம் நவ், நித்யானந்தா டைம்ஸ் போன்றவை இருக்கின்றன.. தனி பாஸ்போர்ட் வடிவங்கள் உள்ளன. இப்படி எல்லா அறிவிப்புகளும் வெளியிட்ட நிலையில், அந்த கைலாசாவை நம்ம கண்ணில் காட்டுவாரா என்று இப்போது வரை தெரியவில்லை.

     மறைமுக கேள்வி

    மறைமுக கேள்வி

    கொரோனாவால் ஏற்கனவே எல்லாரும் நொந்து நூடூல்ஸ் ஆன நிலையில், இந்த நாடு எங்கே இருக்கு தெரியுமா என்று ஒரு கேள்வியை மறைமுகமாக கேட்டுள்ளார் நித்தியானந்தா. அதாவது, தனது வெப் கேமரா சிக்னலை வைத்து கைலாசா எங்கிருக்கிறது என தேடுவார்கள் என்று சொல்லி தனக்கே உரிய பாணியில் ஒரு சிரிப்பு சிரித்துள்ளார் நித்தியானந்தா.

     பாஸ்போர்ட்

    பாஸ்போர்ட்

    இப்போது, பாஸ்போர்ட் விண்ணப்பிக்க போவதாக வெளிப்படையாக பலர் சோஷியல் மீடியாவில் பதிவிட ஆரம்பித்துவிட்டனர்.. எதுக்காக தமிழ்நாட்டில் முதன்முதலில் இவர் உலக ஃபேமஸ் ஆனார் என்றுகூட தெரியாமல், இப்படி கைலாசத்துக்கு ஆளாளுக்கு லெட்டர் போட்டு கொண்டிருப்பது வேதனையை தருகிறது. அதற்கேற்றாற்போல, இங்கிருக்கும் போதே அவரை கைது செய்ய முடியாத இந்திய போலீஸ், தலைமறைவாகி விட்டவரை எப்போது கைது செய்து அழைத்து வரும் என்று நமக்கு தெரியாது!

     தலைமறைவு

    தலைமறைவு

    புது நாடு அறிவித்துவிட்டு, அதற்கு தலைவராக இருப்பவர், லட்சோப லட்சம் மக்களை ஒன்று திரட்டி நடுவீதியில் நாட்டுக்காக போராடிய போராளி கிடையாது.. மக்களுக்காக சிறை சென்றவர் கிடையாது.. கேவலம் பாலியல் வழக்கில் சிக்கியவர்.. போலீஸை ஏமாற்றி தலைமறைவாக வாழ்ந்து கொண்டிருப்பவர்.. இவரிடம் மேலும் லட்சக்கணக்கானோர் நம்பி ஏமாந்துவிட ஒருபோதும் நாமும், அரசாங்கமும் எந்த விதத்திலும் காரணமாக இருந்துவிடக்கூடாது!

    English summary
    Where is Kailasha, Samiyar Nithiyananda challenged
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X