சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

1.5 கோடி வாக்காளர் பட்டியல் எங்கே?- அதிமுக உட்கட்சி தேர்தல் முரண்பாடு- பட்டியலிடும் கே.சி.பழனிசாமி

அவசர அவசரமாக நிறைவேற்றப்படும் அதிமுக உட்கட்சி தேர்தல் பல முரண்பாடுகளை கொண்டுள்ளது, வாக்காளர் பட்டியல் எங்கே, தேர்தல் நடைமுறை எங்கே என கே.சி.பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

Google Oneindia Tamil News

அதிமுக உட்கட்சித்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் அதில் ஏகப்பட்ட முரண்பாடுகள் உள்ளன, தேர்தலில் வாக்களிக்கும் தொண்டர்களின் பட்டியல் எங்கே? நோட்டீஸ் பீரியட் இல்லாமல் தேர்தல் எப்படி நடத்த முடியும் என அதிமுக முன்னாள் எம்.பி கே.சி.பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

நான் ஓய மாட்டேன்.. நிலைமை மாறப்போகிறது.. அதிமுக தொண்டர்களுக்கு சசிகலா அதிரடி அறிக்கைநான் ஓய மாட்டேன்.. நிலைமை மாறப்போகிறது.. அதிமுக தொண்டர்களுக்கு சசிகலா அதிரடி அறிக்கை

 ஜெயலலிதா மறைவு

ஜெயலலிதா மறைவு

அதிமுக ஜெயலலிதா மறைவுக்குப்பின் பல பிரச்சினைகளை சந்தித்தது. சசிகலா பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். பின்னர் அவர் சிறைக்குச் சென்றார். அதன் பின்னர் ஓபிஎஸ் கட்சிக்குள் கொண்டு வரப்பட்டார். சசிகலா, டிடிவி உள்ளிட்டோர் நீக்கப்பட்டனர். கட்சி விதிகள் திருத்தப்பட்டு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர், வழிகாட்டுக்குழு அமைக்கப்பட்டது. ஓபிஎஸ்-இபிஎஸ் தலைமைக்கு வந்தனர். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பொதுக்குழு மூலம் தேர்வு செய்யப்படலாம் என விதி திருத்தப்பட்டது.

 சட்டமன்ற தேர்தல் தோல்விக்கு பின் அதிகரித்த முரண்பாடு

சட்டமன்ற தேர்தல் தோல்விக்கு பின் அதிகரித்த முரண்பாடு

சட்டமன்ற தேர்தலில் அதிமுகவின் தோல்விக்கு பின் குழப்பமான நிலை ஏற்பட்டது. தலைமைக்குள் மோதலும், ஒற்றைத்தலைமை எனும் கோரிக்கையும், சசிகலாவின் பொதுச் செயலாளர் வழக்கும் பிரச்சினையாக எழுந்தது. கட்சியில் அதிகாரம் செலுத்துவதில் ஓபிஎஸ்-இபிஎஸ் இடையே போட்டி எழுந்தது. மா.செக்கள் கூட்டத்தில் மோதல் எழுந்த நிலையில் நேற்று செயற்குழு கூட்டம் கூடியது.

கட்சி விதிகளில் மாற்றம் வானளாவிய அதிகாரம் பெற்ற ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள்

நேற்று நடந்த செயற்குழு கூட்டத்தில் தற்காலிக அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்வு செய்யப்பட்டார். கட்சி விதிகள் 20, 43, 45, ஆகியவை திருத்தப்பட்டது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பொதுக்குழு மூலம் தேர்வு செய்யப்படுவது ரத்து செய்யப்பட்டது, கட்சியின் பொதுச் செயலாளர் போல் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்து நேரடியாக கட்சித்தொண்டர்களால் ஒற்றை வாக்கில் தேர்வு என விதி திருத்தப்பட்டது.

 உட்கட்சி தேர்தல் அறிவிப்பு

உட்கட்சி தேர்தல் அறிவிப்பு

இந்நிலையில் கட்சியின் உட்கட்சி தேர்தல் குறித்து கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் கூட்டாக அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். டிச.7ல் அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் தேர்தல் குறித்த அறிவிப்பை அதிமுக வெளியிட்ட விபரம் வருமாறு.

கட்சி விதி 30-ன் படி அதிமுக உட்கட்சித்தேர்தல் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படவேண்டும் என்கிற அடிப்படையில் டிசம்பர் 7 ஆம் தேதி அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல் நடக்கிறது. என அறிவிப்பு வெளியானது.

 தேர்தல் அறிவிப்பில் முரண்கள்- எதிர்வரும் மாற்றுக்கருத்துகள்

தேர்தல் அறிவிப்பில் முரண்கள்- எதிர்வரும் மாற்றுக்கருத்துகள்

இந்த அறிவிப்பில் ஏகப்பட்ட முரண்பாடுகள் உள்ளதாக அதிமுகவில் முணுமுணுப்பு எழுந்துள்ளது. கட்சியின் செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட முடிவு பொதுக்குழுவில் வைக்கப்பட்டால் தான் முழுமை பெறும் ஆனால் பொதுக்குழுவில் வைக்காமல் நேரடியாக முடிவை அமல் படுத்துவதன் நோக்கம் என்ன? பொதுக்குழு அங்கிகரிக்காத முடிவு எப்படி செல்லும். உட்கட்சி தேர்தல் அறிவிப்பிற்கு முன் உள்ள நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை, குறைந்தப்பட்சம் நோட்டீஸ் பீரியட் இருக்கவேண்டும், வாக்காளர்கள் பட்டியல் இல்லை என கருத்துகள் வலம் வருகின்றன.

இந்நிலையில் இதுகுறித்து முன்னாள் அதிமுக எம்.பியும், பொதுச் செயலாளர், ஒருங்கிணைப்பாளர்கள் தேர்வு பொதுக்குழு முடிவை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள கே.சி.பழனிசாமியிடம் இதுகுறித்து ஒன் இந்தியா சார்பில் கேள்வி எழுப்பிய போது அவர் கூறியதாவது:

அதிமுக செயற்குழுவில் விதிகளை திருத்திய அடிப்படையில் இன்று தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது, பொதுக்குழு அங்கீகாரம் இல்லாமல் இவ்வாறு செல்ல முடியுமா?

நீங்கள் பழசை விடுங்கள், இதற்கு முன் பொதுக்குழுவில் ஒரு திருத்தம் கொண்டு வந்து முடிவெடுத்தார்கள் அல்லவா? அதில் என்ன சொல்கிறார்கள்? சகல் உரிமைகளும் பொதுக்குழுவிற்கே உண்டு என்று முடிவெடுத்தார்கள். அப்படி இருக்கும்போது நேற்று செயற்குழுவில் இவர்கள் எப்படி முடிவெடுக்க முடியும். அதிலேயே இந்தப்பிரச்சினை அடிபட்டுவிடுகிறது அல்லவா?.

அடுத்த பிரச்சினைக்கு வருகிறேன். நேற்று அறிவிக்கப்பட்ட திருத்தங்களை வைத்து எல்லோருக்கும் ஒரு எதிர்ப்பார்ப்பு என்ன இருந்தது என்றால், செயற்குழுவில் எடுத்த இந்த முடிவை பொதுக்குழுவில் வைத்து இறுதிப்படுத்தி தேர்தல் அறிவிப்பார்கள் என்பதாக இருந்தது. இது மோசடி கலந்த நகைச்சுவையாக உள்ளது.

 இதுபோன்ற உட்கட்சித்தேர்தல்களில் நோட்டீஸ் பீரியட் இருக்கணும் என்கிறார்களே சரியா?

இதுபோன்ற உட்கட்சித்தேர்தல்களில் நோட்டீஸ் பீரியட் இருக்கணும் என்கிறார்களே சரியா?

ஆமாம் நோட்டீஸ் பீரியட் 21 நாள் இருக்கணும். வாக்காளர் பட்டியல் வெளியிடணும். வாக்காளர்கள் யார் என்பதை நீங்கள் அறிவிக்கணும் அல்லவா? பட்டியல் வெளியிடணும் அல்லவா? பல தேர்தல்கள் சட்டமன்றம், நாடாளுமன்றம் என்று நடக்கிறது அல்லவா? அதில் வாக்காளர் பட்டியல் வெளியிடுகிறார்கள் அல்லவா? அதேபோல் இதில் வாக்களிக்கப்போகிறவர்கள் யார் என்று டிக்ளேர் பண்ணனும் அல்லவா?

அதை வெளியிடாமல் என்று எப்படி தேர்தல் நடத்துவீர்கள். இவர்கள் சொல்வது என்னவென்றால் யாரும் போட்டி இல்லை, இருக்கக்கூடாது. இந்த தேதியை அறிவித்து விட்டோம். யாரும் போட்டியிடவில்லை இவர்கள் இருவர் மட்டுமே போட்டியிடுகிறார்கள் என்பதால் போட்டியின்றி தேர்வு செய்யப்படுகிறார்கள் என்று அறிவிக்கவே முயற்சிக்கிறார்கள்.

 அப்படியானால் எதிர்ப்பில்லாமல் தேர்தல் இல்லாமல் அன் -அப்போஸ்டாக தேர்வாக வாய்ப்பு என்கிறீர்களா?

அப்படியானால் எதிர்ப்பில்லாமல் தேர்தல் இல்லாமல் அன் -அப்போஸ்டாக தேர்வாக வாய்ப்பு என்கிறீர்களா?

அப்படி ஒரு எதிர்ப்பு வரக்கூடாது என்பதற்காகத்தான் இப்படிப்பட்ட ஷ்ட்யூலே கொடுத்துள்ளார்கள்.

வாக்காளர்கள் யார் என்பதற்கு 5 ஆண்டு கட்சியில் உள்ள அனைவரும் என ஜெயக்குமார் ஒரு விளக்கம் கொடுத்துள்ளாரே?
இந்தியாவில் தமிழ்நாட்டில் தேர்தலில் வாக்காளர்கள் வாக்களிக்கிறார்கள், அதில் 18 வயதுக்கு மேல் உள்ளவர்கள் வாக்களிக்கலாம் என்கிறார்களா? அல்லது வாக்காளர் பட்டியல் வெளியிடுகிறார்களா? அப்படியானால் இவர்கள் மட்டும் விதிவிலக்கா? வாக்காளர் பட்டியல் வெளியிடணும் அல்லவா? 1.5 கோடி தொண்டர்கள் உள்ளனர் என்கின்றனர், ஆனால் அவர்கள் யார் என்கிற பட்டியல் வரவேண்டும். பெயர் விடுப்பட்டிருந்தால் பெயர் இல்லாதவர்கள் தங்கள் பெயரை சேர்க்கும் உரிமையை கேட்க வாய்ப்பு தரணும் அல்லவா?

தேர்தலில் ஒன்றரைக்கோடி தொண்டர்கள் எங்கு வாக்களிக்க உள்ளனர். அவ்வளவுபேரும் சென்னையில் வாக்களிப்பார்களா? அல்லது மாவட்டங்களில் வாக்களிக்க என்ன ஏற்பாடு உள்ளது. ஏதாவது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதா? அப்படியானால் இவர்கள் இருவரும் மறைமுகமாக சொல்வது நேற்று நாங்கள் இருவரும் தேர்வு செய்யப்பட்டுள்ளோம், அதை போட்டியின்றி தேர்வு செய்யப்படவேண்டும் என்கிற நேற்றைய அறிவிப்பை இன்று உறுதிப்படுத்துகின்றனர்.

வாக்காளர் பட்டியல் இல்லை, போட்டியிடுபவர்களுக்கான தகுதி, நடைமுறைகள் எதுவுமே இல்லை என்று அவசரமாக அறிவிப்பது இதில் ஏதோ மோசடி உள்ளதாகத்தான் கருதவேண்டியுள்ளது.

 இந்த தேர்தலை எதிர்த்து யாராவது வழக்கு தொடர வாய்ப்புள்ளதா?

இந்த தேர்தலை எதிர்த்து யாராவது வழக்கு தொடர வாய்ப்புள்ளதா?

தெரியவில்லை, வழக்கு தொடர வாய்ப்பில்லை என்பதற்காக இன்று வியாழக்கிழமை அறிவித்துள்ளதாக கருதுகிறேன். 7 ஆம் தேதிக்குள் யாராவது எதிர்த்து நீதிமன்றத்திற்கு செல்வார்களா தெரியவில்லை.

 உங்கள் வழக்கு என்ன? அது எந்த நிலையில் உள்ளது?

உங்கள் வழக்கு என்ன? அது எந்த நிலையில் உள்ளது?

பொதுச் செயலாளர் அல்லது ஒருங்கிணைப்பாளர் என்று பெயர் வைத்துக்கொள்ளுங்கள், ஆனால் கட்சித்தலைமைப்பொறுப்பில் உள்ளவர்கள் தொண்டர்களால் நேரடியாக தேர்வுச் செய்யப்பட வேண்டும் என்ற உரிமையை பறித்தது தவறு என்பது என் வழக்கு.

அதுகுறித்து டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி சிஸ்தானியா தீர்ப்பளித்துள்ளார். அதை உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்தி உள்ளது. அதை செயல்படுத்தவேண்டும் என்கிற என் வழக்கு நிலுவையில் உள்ளது. அதை தற்போது நடைமுறைப்படுத்தியுள்ளதாக நேற்று அறிவித்துள்ளனர்.

 சசிகலா வழக்கும் இதே கோணத்தில் தானே உள்ளது?

சசிகலா வழக்கும் இதே கோணத்தில் தானே உள்ளது?

சசிகலா போட்ட வழக்கு வேறு பிரச்சினை, நான் பொதுச் செயலாளர் என்னை நீக்கியது தவறு செல்லாது என்பது அவர் வழக்கு" இவ்வாறு கே.சி.பழனிசாமி தெரிவித்தார்.

English summary
Where is the 1.5 crore voter list? - AIADMK party-election contradiction- KC Palanisamy listing
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X