"சிக்னல்" காட்டிய தலைவர்.. நாளும் குறிச்சாச்சு.. ஆனாலும் "மைனஸ்".. தள்ளாடும் கதர் கட்சி.. பாஜக குஷி
தலைவர் தேர்தலை நடத்த அகில இந்திய காங்கிரஸ் தயாராகி வருகிறது
சென்னை: அதிமுகவின் பரபரப்புகள் தமிழகத்தை கவ்வி கொண்டிருக்க, காங்கிரஸ் கட்சியிலும் விறுவிறுப்புகள் கூடி உள்ளன.. 2 முக்கிய தகவல்கள் வெளிவந்து, தொண்டர்களை நிமிர வைத்துள்ளது.
நூற்றாண்டு பழமை வாய்ந்த காங்கிரஸ் கட்சிக்கு கிட்டத்தட்ட 3 வருடமாக தலைவர் என்று யாருமே இல்லை.. ஒரு தேசிய கட்சி, தலைவரே இல்லாமல் இயங்கி கொண்டிருப்பது பெருத்த பலவீனமாகவே பார்க்கப்பட்டு வருகிறது.
சோனியா காந்திக்கு உடம்பு சரியில்லாத நிலையில், தற்காலிக தலைவராக தற்போது இருந்தாலும்கூட, ராகுல் காந்தியும் பொறுப்பேற்க முன்வராத நிலையில், காங்கிரஸ் தள்ளாடி கொண்டிருக்கிறது...
காங்கிரஸை நம்பினால் கடைசிவரை எதுவுமே கிடைக்காது என்று உறுதியாக நம்பியதால்தான், அன்று கபில் சிபல் அப்படி ஒரு நிலைப்பாட்டை எடுக்க காரணமாக இருந்துவிட்டது என்பதையும் நாம் மறுக்க முடியாது.
கபில்சிபல் என்றில்லை.. சுனில் ஜாக்கர், ஹர்திக் படேல், அஸ்வினி குமார், ஆர்.பி.என்.சிங் போன்ற முக்கிய தலைவர்களும் இப்படித்தான் விலகினார்கள்.. இவர்கள் எல்லாருமே சீனியர்கள்.. இவர்களே இன்று விலகி சென்றது காங்கிரசுக்கு பெரும் பின்னடைவாகவே உள்ளது.. விரைவில் எம்பி தேர்தல் வர போகிறது.. பாஜக இப்போதே ரெடியாகிவிட்டது.. ஆனால், காங்கிரஸ், தன் கட்சியில் பெருகி உள்ள ஓட்டைகளை அடைக்க முடியாமல், திணறி கொண்டிருக்கிறது.

மாஸ்டர் பிளான்கள்
காங்கிரஸ் தலைமை நியமிக்கப்படாமல் உள்ளதுதான் இதற்கெல்லாம் காரணமாகவும் அமைந்து வருவதாக தெரிகிறது. இதன் விளைவு, பீகார் மற்றும் உத்தரபிரதேசம் மாநிலங்களில்கூட கட்சிக்கு தலைவர்கள் இல்லாத பரிதாப நிலைமையும் ஏற்பட்டதை மறுக்க முடியாது.. அதுமட்டுமல்ல, காங்கிரஸ் கட்சியில் கடைசித் தொண்டன் இருக்கும் வரை, கோஷ்டிப்பூசல் இப்படியே இருந்துகொண்டுதான் இருக்கும் என்ற வரலாற்று விமர்சனமும் இன்று மேலும் வலுவாகி உள்ளது..

பூஸ்ட்
இப்படிப்பட்ட சூழலில்தான், நேஷனல் ஹெரால்டு வழக்கு விசாரணை சூடுபிடித்துள்ளது.. டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ராகுல் ஆஜரானபோது, ஒட்டுமொத்த காங்கிரசும் கொந்தளித்தது.. தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை ஒன்று திரண்டு டெல்லி வீதியில் போராடினார்கள்.. நாடே வியந்து பார்க்கும் அளவுக்கு, இது ஒரு நல்ல மாற்றமாகவும் அந்தகட்சியில் தென்பட்டது.. இதே வீரியத்துடன் காங்கிரஸ் களமாடினால், குறைந்தபட்சம் பாஜகவை எதிர்க்ககூடிய அளவுக்காவது உதவியாக இருக்கும், சோர்ந்து போயுள்ள தொண்டர்களுக்கும் ஒரு பூஸ்ட் கிடைத்தது போல இருக்கும் என்றும் நம்பப்பட்டது.

தூள் தூளாகும் கணக்கு
ஆனால், அதோடு சரி... இதற்கு பிறகு, இதே வழக்கு சோனியா பக்கம் திரும்பிவிட்டது.. இந்நிலையில், 2 விஷயங்கள் கசிந்து வருகின்றன. தற்காலிக தலைவராக இருக்கும் சோனியாகாந்தி ஒரு புதிய முடிவை அறிவித்துள்ளாராம்.. அதன்படி, "தலைமை பதவி தொடர்ந்து தற்காலிகமாக இருப்பதை விரும்பவில்லை, அதனால் தேர்தலை விரைவில் நடத்த வேண்டும்" என்று சீனியர் தலைவர்களிடம் தெரிவித்திருக்கிறாராம்...

சீனியர்களிடம் வலியுறுத்தல்
ஹெரால்ட் வழக்கில் சோனியாவுக்கு எதிராக மத்திய அரசின் அமலாக்கத்துறை கிடுக்கிப்பிடி போட்டு வரும் சூழலில், அதுபற்றி மூத்த தலைவர்களுடன் ஆலோசித்து வருவதோடு, கட்சிக்கு முழு நேர தலைவரை தேர்வு செய்வது குறித்தும் விவாதித்தாராம். அந்தவகையில், அநேகமாக செப்டம்பர் மாதம் இந்த தேர்தல் நடத்தப்படலாம் என்கிறார்கள் தமிழக காங்கிரஸ் எம்பிக்கள்... எனவே, இந்த தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று ராகுல்காந்தியிடம் எம்பிக்கள் பலரும் வலியுறுத்தி உள்ளனர்..

அசால்ட் பதில்
ஆனால் அதற்கு ராகுல் காந்தியோ, "தேர்தல் நடக்கட்டும், போட்டியிட விரும்புபவர்கள் எல்லோரும் போட்டியிடட்டும்.. யார் ஜெயிக்கிறார்களோ அவர்களுக்கு என் ஆதரவு உண்டு. இப்போது நான் இருக்கும் சூழலிலிருந்தே அவருக்கு நான் உதவுகிறேன். தேர்தலில் நான் போட்டியிட விரும்பவில்லை" என்று வழக்கமான பாடும் பல்லவியையே பாடியுள்ளாராம் ராகுல் காந்தி... ஆக, சோர்ந்து நொந்து போயுள்ளவர்களுக்கு எப்போது நல்ல செய்தி காதில் விழப்போகிறதோ தெரியவில்லை.. ஆனால், காங்கிரஸின் அடுத்தடுத்த பலவீனங்களில், பாஜக பளிச்சென மிளிர்கிறது என்பதை மட்டும் நமக்கு சொல்ல தோன்றுகிறது..!

சென்ட்டிமென்ட்
காரணம், இந்த முறை எம்பி தேர்தலில் போட்டியிடுவதற்காக தமிழகத்தைதான், ராகுல் போட்டியிட முயற்சித்து வருகிறார்.. அதிலும் சென்ட்டிமென்ட்டாக ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிட போவதாகவும் செய்திகள் வருகின்றன.. இந்த சூழலில், அகில இந்திய பொறுப்பை ஏற்று, தமிழகத்திலும் போட்டியிட்டு வெற்றி பெறும்போது, அதன் பலம் திமுகவுக்கும் சேர்த்து கூடும் என்பதை மறுக்க முடியாது.. ஆனால், ராகுல் இப்படி தலைமை பொறுப்பில் இருந்து பின்வாங்குவது, சரியல்ல என்கிறார்கள் சொந்த கட்சியினரே.. ஆக மொத்தம் இதுபோன்ற காங்கிரஸின் அடுத்தடுத்த பலவீனங்களில், பாஜக பளிச்சென மிளிர்கிறது என்பதை மட்டும் நமக்கு சொல்ல தோன்றுகிறது..!
-
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை? -
அவிநாசி அல்லது மேட்டுப்பாளையம்.. 2ல் ஒரு தொகுதியில் போட்டியிடும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன்? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
பாமக வரலாற்றிலேயே முதல் முறையாக.. 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவான தொகுதிகளில் போட்டி! -
TN Election: 1-ல்தான் பாஜக ஜெயிக்குமா? திமுக 180-ஆ? டெல்லியை அதிர வைத்த ANS அதிர்ச்சி சர்வே! -
“காருக்குள் வைத்து தவறாக நடக்க முயற்சி”.. பாஜக முக்கிய நிர்வாகி மீது மகளிரணி தலைவி பரபரப்பு புகார் -
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
பாமக போட்டியிடும் 18 தொகுதிகள் எவை? வெளியானது உத்தேச பட்டியல்.. எல்லாமே வட மாவட்டங்களில்? -
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்! -
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு! -
பாஜக உள்ளே புகுந்துருச்சு ப்ரோ.. ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் சீட் எண்ணிக்கை! 20ஐ 27ஆக்கிய அமித் ஷா! -
Election Commission: தேர்தல் ஆணைய கடிதத்தில் பாஜகவின் முத்திரை.. கேரள அரசியல் கட்சிகள் அதிர்ச்சி.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications