சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"சக்சஸ்" ஓபிஎஸ்.. தோட்டத்து பங்களா வாசலில் சசிகலா.. அப்ப சிக்கல் எடப்பாடிக்குத்தான் போல.. என்னாச்சு

அதிமுக பொன்விழாவை ராமாவரம் தோட்டத்து பங்களா அருகில் நடத்த உள்ளார் சசிகலா

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுக பொன்விழா கொண்டாட்டத்தில், நினைத்ததை சாதித்துள்ளார் சசிகலா.. அது தொடர்பான ஒரு செய்திதான் இணையத்தில் வட்டமடித்து கொண்டிருக்கிறது.

அதிமுக, கட்சியின் பொன்விழாவை கொண்டாட அதிமுக திட்டமிட்டு வருகிறது.. வருகிற 17ம் தேதி அதிமுக பொன்விழா நிறைவு விழாவை விமர்சியாக கொண்டாடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது..

எனவே, தங்களின் வலிமையை மற்றவர்களுக்கு நிரூபிக்கவும் எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ், சசிகலா மூவரும், மூன்று ரூட்டுகளில் திட்டமிட்டுள்ளனர்.

ஓபிஎஸ் பக்கம் சாய்ந்த 5 மாவட்ட நிர்வாகிகள்.. எடப்பாடிக்கு வந்ததே கோபம்.. ஒரே அறிவிப்பில் காலி! ஓபிஎஸ் பக்கம் சாய்ந்த 5 மாவட்ட நிர்வாகிகள்.. எடப்பாடிக்கு வந்ததே கோபம்.. ஒரே அறிவிப்பில் காலி!

 ஸ்வீட்டுகள்

ஸ்வீட்டுகள்

ஓபிஎஸ்ஸை பொறுத்தவரை, சென்னை தி.நகரில் இருக்கும் எம்ஜிஆர் நினைவிடத்தில் அதிமுக கொடியேற்றி கொண்டாட முடிவு செய்துள்ளார். பொன் விழா ஆண்டு நிறைவினையொட்டி, 17-10-2022 அன்று காலை 9 மணியளவில் சென்னை, தியாகராய நகர், ஆற்காடு சாலையில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர்.நினைவிடத்திற்குச் சென்று அங்குள்ள அவரது திருவுருவச் சிலைக்கு நான் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, இனிப்புகள் வழங்கி, நலத்திட்ட உதவிகளை அளிக்க உள்ளேன். என்று கூறி தொண்டர்களுக்கு அறிக்கை வெளியிட்டு அழைப்பும் விடுத்துள்ளார்..

 தோட்டம்

தோட்டம்

எடப்பாடி பழனிசாமியை பொறுத்தவரை. சென்னை அடையாறு பகுதியில் உள்ள எம்ஜிஆர்-ஜானகி அம்மாள் கல்லூரி வளாகத்தில் ஆயிரக்கணக்கான தொண்டர்களை திரட்டி கொண்டாட திட்டமிட்டிருக்கிறார். ஆனால், பள்ளி கல்லூரி வளாகத்தில் ஆடல் பாடல் நிகழ்ச்சி, அரசியல் நிகழ்ச்சி ஆகியவை நடத்த அனுமதிக்கக் கூடாது என்று அரசாணையே உள்ளது.. அதுமட்டுமல்ல, இந்த கல்லூரி நிர்வாகம் எம்ஜிஆரின் குடும்பத்தினரான லதாராஜேந்திரன், மகனான குமார் ராஜேந்திரனின் கையில் உள்ளது.. ஆனால், அவரோ சசிகலா அணியில் உள்ளார்.. எனவே, எடப்பாடி பழனிசாமியின் திட்டத்திற்கு இவர் அனுமதிப்பது சந்தேகம் என்ற பேச்சு சில நாட்களாகவே உலா வந்து கொண்டிருக்கிறது.

 ராமாவரம் + தோட்டம்

ராமாவரம் + தோட்டம்


அதேபோல, சசிகலாவும், ராமாவரத்தில் உள்ள எம்ஜிஆர் இல்ல வளாகத்தில் இருக்கும் பள்ளி ஆடிட்டோரியத்தில் பொன்விழாவை கொண்டாட முடிவு செய்தார்.. அதாவது பள்ளிக்கூடத்திற்குள் நடத்தாமல், எம்ஜிஆர் சிலை இருக்கும் வளாகத்தில் மேடை அமைத்து கொண்டாட முடியுமா? என்று ஆலோசனையிலும் ஈடுபட்டு வந்த நிலையில், தற்போது எடப்பாடி + ஓபிஎஸ் + சசிகலா குறித்த சில தகவல்கள் நமக்கு பிரத்யேகமாக கிடைத்துள்ளன.

 சக்ஸஸ் ஓபிஎஸ்

சக்ஸஸ் ஓபிஎஸ்

சென்னை தி.நகரில் உள்ள எம்ஜிஆர் நினைவிடத்தில் கொண்டாட ஓபிஎஸ் அனுமதி கேட்கவும், அவருக்கு மட்டும் முன்கூட்டியே அனுமதி கிடைத்துள்ளது. ஓபிஎஸ் விரும்பியபடியே இந்த பொன்விழாவை கொண்டாடவும் போகிறார். இந்த நிறைவு விழாவில் தி.நகரையே திணறடிக்க வேண்டும் என்று திட்டமிட்டு ஆட்களை திரட்டும் பணி ஓபிஎஸ் தரப்பில் வேகமெடுத்துள்ளது... அதேபோல, சசிகலாவை பொறுத்தவரை, சென்னை ராமாபுரம் எம்ஜிஆர் தோட்டத்தில் உள்ள காதுகேளாத பள்ளி வளாகத்தில் கொண்டாட சசிகலா அனுமதி கேட்ட நிலையில், பள்ளியின் நிர்வாகியான லதா ராஜேந்திரனும் அவரது வாரிசும் அனுமதி தர மறுத்து விட்டனர்..

 ராமாபுரம் தோட்டம்

ராமாபுரம் தோட்டம்

அதனால், அதே தோட்டத்தில் எம்ஜிஆர் பங்களாவில் வசிக்கும் லதாவின் சகோதரி சுதா விஜயனை அணுகி, பொன்விழாவை கொண்டாட உங்கள் ஏரியாவில் அனுமதி கொடுக்க வேண்டும் என்று சசிகலா தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆரம்பத்தில் முடியாது என சொன்னார்கள். பிறகு கொஞ்சி பார்த்துள்ளனர்.. இதில் மனமிறங்கிய சுதா விஜயன், விழாவை நடத்திக் கொள்ள அனுமதித் தந்தார். இதனையறிந்த லதா ராஜேந்திரனின் மகன் குமார் ராஜேந்திரன் உத்தரவின் பேரில் பள்ளிக்கூட நிர்வாக தரப்பில் இருந்து போலீசுக்கு ஒரு புகார் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.

 தோட்டத்து பங்களா

தோட்டத்து பங்களா

அதில், எம்ஜிஆர் காதுகேளாத வாய்ப்பேசாத பள்ளிக்கூடத்தில் அக்டோபர் 17, 18 ஆகிய தேதிகளில் விளையாட்டுப் போட்டிகள் நடக்கவிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் பங்களாதேஷ் நாட்டின் தூதரக அதிகாரிகள் கலந்து கொண்டு சிறப்பிக்கிறார்கள். அவர்களுக்கு உரிய பாதுகாப்பை அளிக்க வேண்டும் என்றும், அதே நாளில் இந்த வளாகத்தில் எந்த பொது நிகழ்ச்சிகளை நடத்தவும் அனுமதிக்கக் கூடாது என்றும் அந்த கடிதத்தில் கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறது. இதனையடுத்து, சசிகலாவுக்கு அனுமதி தந்துள்ள சுதாவிஜயன் தரப்புக்கு, இந்த கடிதத்தை சுட்டிக்காட்டி நிகழ்ச்சியை ரத்து செய்ய வேண்டும் என்று போலீஸ் தரப்பில் சொல்லப்பட்டுள்ளது.

 பங்களா வாசல்

பங்களா வாசல்

இதனை சசிகலாவுக்கு பாஸ் செய்திருக்கிறார் சுதா விஜயன். விஷயத்தைக் கேட்டு அதிர்ந்து போன சசிகலா, "விளையாட்டு போட்டிக்கு இடைஞ்சல் செய்யாமல் ஒரு ஓரத்தில் அதுவும் உங்கள் பங்களா வாசலில் வெறும் 200 பேரை மட்டுமே வைத்து நிகழ்ச்சியை நடத்திக்கிறோம். போலீசிடம் சொல்லுங்கள்" என கெஞ்சியிருக்கிறார். அதை காவல்துறையினருக்கு தெரியப்படுத்தியிருக்கிறார் சுதாவிஜயன்.. அது இப்போது ஓகே ஆகியுள்ளதாக தெரிகிறது.. ஆனால், எடப்பாடிக்குதான் இன்னும் இதுகுறித்து சாதகமான ரிசல்ட் வரவில்லை.. ஆக, ஓபிஎஸ்சுக்கும் ஒரு இடம் கிடைத்து விட்டது.. சசிகலாவுக்கும் கேட்ட இடம் கிடைத்துவிட்டது.. அதுவும் தோட்டத்து பங்களா வாசலில்..!

English summary
Where is VK Sasikala going to celebrate AIADMK Golden Jubilee and whats Edapadi palanisamys plan
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X