திமுக ஆலமரம்..அசைக்க முடியாது..எதிர்த்து போட்டியிட தயாரில்லாத நிலையை உருவாக்குவோம் - சேகர்பாபு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

திமுக என்பது ஓர் ஆலமரம்..தலைவர்கள் ஆலமரத்தின் வேரைப் போன்றவர்கள்; இந்த இயக்கத்தில் இருக்கின்ற நிர்வாகிகளான நாமெல்லாம் அதனுடைய விழுதுகள் போன்றவர்கள் என்று அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.
தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் இருக்கின்ற வரையில், வேறு யாருக்கும் இங்கே இடமில்லை என்கிற நிலையை உருவாக்க வேண்டும் என்றும் அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.

சென்னை மேற்கு மாவட்டக் கழக தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர்,ஒரு கட்டுரையில் ஒரு வாசகத்தைச் சொல்வார்கள், மாளிகை அவன்தான், முகப்பும் மண்டபமும் அவன்தான் மையகொடி ஏற்றுபவனும் அவன்தான் கொடி கட்டுபவனும் அவன்தான் அவன் ஆடினால், இந்த இயக்கம் ஆடும் அவன் அடங்கினால், இந்த இயக்கம் அடங்கிவிடும் என்பார்கள்.
அந்த இயக்கத்தின் ஆட்டத்திற்கு உரியவர்களாக இங்கே எதிரிலே அமர்த்துக் கொண்டிருக்கின்ற செயல்வீரர்களாகிய உங்களை நான் மீண்டும் வணங்குவதில் பெருமை அடைகின்றேன்.

திராவிட முன்னேற்றக் கழகத்தில்தான், ஜனநாயகத்தின் பால் நம்பிக்கை கொண்டு, ஜனநாயக ரீதியாக உட்கட்சித் தேர்தல் ஒன்று நடைபெறுகிறது என்றால், அது திராவிட முன்னேற்றக் கழகத்தில் மட்டும் நடந்தேறுகிறது. அந்த வகையில் 15 ஆவது உட்கட்சித் தேர்தல், கனக் கச்சிதமாக தமிழக முதல்வர் ஆளுங் கட்சியாக இருக்கின்ற சமயத்தில் நடைபெறுகின்ற தேர்தலின்போது, பல இடங்களில் போட்டா போட்டிகள் ஏற்படும்; தேவையற்ற பிரச்சினைகள் வரும் என்று கருத்துகள் பரிமாறப்பட்ட நிலையில், எங்கும் துளி அசம்பாவிதம் இல்லாமல், தன்னுடைய நிர்வாகத் திறமையால், 15 ஆவது உட்கட்சி திராவிட முன்னேற்றக் கழகத் தேர்தலை கனக்கச்சிதமாக செய்து முடித்த பெருமை கழகத் தலைவர் தளபதி அவர்களுக்கு உண்டு.

திமுக பொதுக்குழு

திமுக பொதுக்குழு

தேர்தல் முடித்த கையோடு கழகத் தலைவர் தளபதி அவர்கள் பொதுக்குழுவைக் கூட்டினார். அப்பொதுக்குழுவிலே ஓர் அறிவுரையை எடுத்துச் சொன்னார். அந்த அறிவுரை என்பது இன்னொரு நூறாண்டுகளுக்குக் கல்வெட்டாய் நிற்கின்ற வாசகங்கள். கழகத் தலைவரின் அந்த அறிவுரை என்பது, நம்மை ஒருமுகப்படுத்துகின்ற அறிவுரை. ஒருவரை ஒருவர் பார்த்து, பேசுகின்ற பழக் கத்தை உருவாக்கிக் கொள்ளவேண்டும் என்றார். ஒருவரை ஒருவர் பார்த்து, பேசுகின்ற பழக்கத்தோடு நின்றுவிடாமல், இன்று புதிதாகப் பதவிக்கு வந்தவர்களை, ஏற்கெனவே பதவியில் இருப்பவர்கள் அரவணைத்துச் செல்ல வேண்டும் என்று உத்தரவிட்டு இருக்கின்றார்.

மு.க. ஸ்டாலின்

மு.க. ஸ்டாலின்

கழகத் தொண்டனுடைய தேவைகளை நிறைவேற்றவேண்டும் என்றும், கழக உறுப்பினர் யாராவது தேவை என்று வந்தாலும், அதை நிறைவு செய்யவேண்டும் என்று அந்தப் பொதுக் குழுவிலே பறைசாற்றினார். இந்த முத்தான மூன்றை எடுத்துப் பார்க்கின்றபொமுது, பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள், திராவிட முன்னேற்றக்கழகத் தலைவராக இருந்தபொமுது, இரண்டாம் முறையாக நாவலரை, இந்த இயக்கத்திற்குப் பொதுச்செயலாளராக அறிவித்து, தம்பி வா! தலைமையேற்க வா! உன் ஆணைக்கு நான் கட்டுப்படுகிறேன் என்றார்.

தலை நிமிர்ந்து நிற்கும் தமிழகம்

தலை நிமிர்ந்து நிற்கும் தமிழகம்

பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள் இதை மேடையில் சொல்லிவிட்டு, இறங்குகின்றபொழுது. நாவலர் எதிரில் வருகின்றார். நாவலரை, பேரறிஞர் அண்ணா அன்னாந்து பார்க்கின்றார்; நாவலர் மேடைக்குப் போகின்றார். உடனடியாக ஓடிவந்து, அண்ணா அவர்கள் மைக்கைப் பிடித்து, கட்சி இன்றைக்கு நிமிர்ந்து நிற்கின்றது என்றார்.
தளபதியின் ஆட்சியில் தலை நிமிர்ந்து நிற்கும் தமிழகம்! அன்றைக்கு அண்ணா அவர்கள் வார்த்தை, இன்றைக்குத் சொன்ன திராவிட மாடல் ஆட்சி செய்துகொண்டிருக்கின்ற தளபதி அவர்களுடைய தலைமையில், தமிழகம் இன்றைக்கு தலை நிமிர்ந்து நிற்கின்றது பொருள்பட விளக்கமாகக் கூறியிருக்கின்றார்.

களப்பணியாற்றும் தலைவர்

களப்பணியாற்றும் தலைவர்

நம்முடைய இயக்கத்தினுடைய தலைவர் யார்? நம்முடைய இயக்கத்தை வழிநடத்திச் செல்லுகின்றவர் யார்? இன்றைய தமிழக முதல் அமைச்சர் யார்? பல தலைவர்கள் அறிக்கையின் வாயிலாக ஆணைகளைப் பிறப்பித்துக் கொண்டிருப்பார்கள். ஆனால், திராவிட முன்னேற்றக் கழகத்தில் மட்டும் தான், அறிக்கை விடுவதும், ஆணைகள் பிறப்பிப்பதும், அதோடு நின்றுவிடாமல், களத்திற்கு வந்து நம்மோடு நின்று போராடக் கூடிய ஒரு தலைவர்தான் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் என்பதை இந்த நேரத்தில் நான் பதிவு செய்யக் கடமைப்பட்டு இருக்கின்றேன். தலைவர் அவர்கள் ஒருமுறை கூட்டத்திலே சொன்னார்.

திமுகவின் பெருமை

திமுகவின் பெருமை

உங்களை முன்னால் செல்லவிட்டு, நான் பின்னால் வருகின்ற தலைவன் அல்ல நான். உங்களோடு ஒன்றாக இணைந்து கைகளைக் கோர்த்துக்கொண்டு, உங்களோடு நடந்துவந்து, உங்களில் ஒருவனாக இருக்கின்ற தலைவர் என்று கூறிய ஒரே தலைவர், இந்தியத் துணைக் கண்டத்தில் இருக்கின்றார் என்றால், தமிழக முதலமைச்சரை தவிர வேறு யாரும் இருக்க முடியாது. திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு என்று ஒரு பெருமை உண்டு. பல இயக்கங்களில் போனவுடன், ஒரு மாதம், இரண்டு மாதக் காலங்களில் பொறுப்புகளை வழங்கிவிடுவார்கள். ஆனால், திராவிட முன்னேற்றக் கழகத்தில் மட்டும் தான், உறுப்பினராக இருப் பதே ஒரு பெருமைக்குரிய விஷயம்.

ஆலமரம்

ஆலமரம்

ஏனென்றால், இந்த இயக்கம் என்பது ஓர் ஆலமரத்தின் வேரைப் போன்றவர்கள்; இந்த இயக்கத்தில் இருக்கின்ற நிர்வாகிகளான நாமெல்லாம் அதனுடைய விழுதுகள் போன்றவர்கள். இந்த இயக்கத்திற்கு என்று ஒரு பெருமை உண்டு. இந்த இயக்கத்திற்கு என்று ஒரு தனி சரித்திரம் உண்டு.

அசைக்க முடியாது

அசைக்க முடியாது

இந்த இயக்கத்திற்கென்று இருக்கின்ற சரித்திரங்களையும், பெருமைகளையும் தூக்கி நிறுத்துகின்ற தலைவராக, இந்த இயக்கத்தினுடைய இரு வண்ணக் கொடியை, இந்த இயக்கத்தினுடைய சின்னமான உதயசூரியனை தகத்தகாயமாக ஒளிர வைக்கின்ற தலைவராக, நம்முடைய தலைவர் தளபதி அவர்கள் இருக்கின்ற வரையில், தமிழகத்தில் எத்தனை சங்கிகள் ஒன்று சேர்ந்து வந்தாலும், எத்தனைக் கூட்டங்கள் ஒன்று சேர்ந்து வந்தாலும், இந்த இயக்கத்தை ஆட்டிப் பார்க்கவோ, அசைத்துப் பார்க்கவோ முடியாது.

 லோக்சபா தேர்தல் வெற்றி

லோக்சபா தேர்தல் வெற்றி

நம்முடைய நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் இங்கே எட்டுத் நிறைவேற்றப் தீர்மானங்கள் பட்டு இருக்கின்றது என்று சொன்னார்கள். அந்த எட்டுத் தீர்மானங்களில், நாடாளுமன்ற உறுப்பினருக்குத் தேவையான தீர்மானம், ஏழாவது தீர்மானமாகும். ஏனென்றால், அந்த ஏழாவது தீர்மானத்தில்தான் குறிப்பிட்டு இருக்கின்றார்கள், வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில், நாம் அதிகப்படியான வாக்குகளைப் பெற்று. நிறுத்தப்படுகின்ற வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று ஏழாவது தீர்மானதில் குறிப்பிட்டு இருக்கின்றார்கள். ஆம்! வெற்றி பெறச் செய்யவேண்டும்.

களப்பணியாற்றுவோம்

களப்பணியாற்றுவோம்

எதிர்க் கட்சியாக இருந்தபொழுதே, ஆளுங்கட்சியினுடைய படை பலத்தை, அதிகார துஷ்பிரயோகங்களை, பணத் திமிரினை, ஜனநாயகத்தை பணநாயகத்தால் வென்றுவிடலாம் என்று எத்தனித்தவர்களை. புறமுதுகிட்டு ஓடச் செய்து, 3 லட்சத்து 337 வாக்குகள் வித்தியாசத்தில் நம்முடைய நாடாளுமன்ற உறுப் பினரை வெற்றி பெறச் செய்தோம். இந்த முறை நாம் காட்டுகின்ற பரிவு இயக்கத்திற்கு நாம் செலுத்துகின்ற நன்றிகள் என்னவாக - இருக்க வேண்டும் என்றால், இயக்கத்திற்கு நாம் அளிக்கின்ற கொடை என்னவாக இருக்கவேண்டும் என்றால், சென்ற முறை நாம் பெற்ற வாக்குகளைவிட, கூடுதலாக 6 லட்சம் வாக்குகள் வித்தியாசத்திலாவது, நாடாளுமன்றத் தேர்தலில் யார் நிறுத்தப்பட்டாலும், அவரை வெற்றி பெறச் செய்யவேண்டும் என்ற இலக்கோடு நாம் களத்திலே பணியாற்றவேண்டும்.

யாருமே தயாராக இல்லை

யாருமே தயாராக இல்லை

திராவிட மண்ணிலே திராவிடம்தான் ஆளவேண்டும் என்றால், இயக்கத்தினுடைய இரு வண்ணக் கொடி பட்டொளி வீசிப் பறக்கவேண்டும் என்றால், அதிலும் துடிப்புமிக்க இளைஞர்கள் இயக்கத்திற்குத் தேவை. எந்த சக்தியாலும், தமிழ கத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் இருக்கின்ற வரையில், வேறு யாருக்கும் இங்கே இடமில்லை என்கிற நிலையை உருவாக்க வேண்டும் என்றால், நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு வருகின்ற சட்டமன்றத் தேர்தலில், நாடாளுமன்றத் தேர்தலில் நாம் பெறுகின்ற வெற்றியைப் பார்த்து, அடுத்து சட்டமன்றத் தேர்தலில், போட்டியிடுவதற்கே யாரும் தயாரில்லை என்ற ஒரு நிலையை உருவாக்கிக் காட்டவேண்டும் என சேகர்பாபு கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+