Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நீதிமன்ற தீர்ப்பை மட்டுமே வைத்து.. எடப்பாடி ஆதிக்கத்தில் உள்ள அதிமுகவில் காலம் தள்ள முடியுமா ஓபிஎஸ்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக பொதுக்குழு இன்று கூடியுள்ளது. ஒற்றைத்தலைமை பிரச்சினை பெரிதாக வெடித்த நிலையில் இந்த கூட்டம் நடக்கிறது.

Recommended Video

    அதிமுகவின் அடுத்த பொதுக்குழு கூட்டம் 11.7.2022 அன்று நடைபெறும்

    அதிமுகவில் ஓபிஎஸ், இபிஎஸ் அணி இரண்டாக பிளந்து எடப்பாடிக்கு கட்சியின் 90 சதவீத ஆதரவு உள்ள நிலையில் பொதுக்குழு இன்று கூடுவதால் மிகுந்த எதிர்பார்ப்பும் உள்ளது.

    அதிகாலையில் சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பால் எடப்பாடி தரப்புக்கு ஒற்றை தலைமை தீர்மானம் நிறைவேற்ற முடியாத, நிலைமை சிக்கலாகி உள்ள நிலையில் எடப்பாடி தரப்பின் அடுத்த மூவ் என்னவாக இருக்கும் என பார்ப்போம்.

    எம்ஜிஆர் உருவாக்கிய பை-லா

    எம்ஜிஆர் உருவாக்கிய பை-லா

    1972 ஆம் ஆண்டு எம்ஜிஆர் அதிமுகவை உருவாக்கியபோது தனக்குப்பின் கட்சியின் தலைமை குறித்து அப்போதைய பிரபல வழக்கறிஞர் பி.எஸ்.ராமனிடம் கட்சியின் பை-லாவை உருவாக்கும் பணியை ஒப்படைத்தார். அப்போது அவர் கேட்டுக்கொண்டது தனக்குப்பின் யாரும் எளிதாக கட்சியை கைப்பற்றி தலைமைக்கு வரக்கூடாது. கட்சியை எப்போதும் ஜனநாயக இயக்கமாக கொண்டுச் செல்ல வேண்டும்.

     1988 இரண்டாக பிளவுபட்ட அதிமுக

    1988 இரண்டாக பிளவுபட்ட அதிமுக

    கட்சியின் தலைமை தகுதியற்றவர்கள் கைக்கு சென்று விடாமல் இருக்க பொதுச் செயலாளர் கட்சியின் தொண்டர்களால் தேர்வு செய்யப்பட வேண்டும் எனக்கேட்டுக்கொண்டார். இதன் அடிப்படையில் கட்சி இயங்குகிறது. இதில் சிக்கல் அதிகம் வந்ததில்லை. எம்ஜிஆருக்கு பின்னர் 1988-ல் கட்சி பிளவுபட்ட பின் ஜெயலலிதா பின் கட்சி உள்ளதை உணர்ந்து ஜானகி விலகினார். அதன் பின்னர் வந்த ஜெயலலிதா தான் மறையும்வரை பொதுச் செயலாளராக இருந்தார்.

     ஜெயலலிதா இருக்கும் வரை வராத பிரச்சினை

    ஜெயலலிதா இருக்கும் வரை வராத பிரச்சினை

    ஜெயலலிதா மறைவுக்குப்பின் பிரச்சினை ஆரம்பமானது. சசிகலா பின் அவர் சிறைக்கு சென்றப்பின் கட்சி எடப்பாடி தரப்பு வசமானது. ஓபிஎஸ் இபிஎஸ் இணைப்பு மூலம் ஓபிஎஸ் -ஈபிஎஸ் இரட்டைத்தலைமை உருவானது. இதனால் அதிமுகவில் குழப்பம் ஏற்பட்டது. செயல்பாட்டிலும் தொய்வு ஏற்பட்டது. கட்சியை சிறிது சிறிதாக வசப்படுத்திய எடப்பாடி பழனிசாமி ஒற்றைத்தலைமை கோஷத்தை கையில் எடுத்தார்.

     ஓபிஎஸ் தரப்பை வலுப்படுத்திய நீதிமன்ற உத்தரவு

    ஓபிஎஸ் தரப்பை வலுப்படுத்திய நீதிமன்ற உத்தரவு

    கட்சியில் சிறிதளவே ஆதரவு உள்ள ஓபிஎஸ் இதை எதிர்த்தார். ஆனால் இந்த கோரிக்கை வெகு சாமர்த்தியமாக பொதுக்குழு நோக்கி நகர்ந்தது. நேரடியாக மோதல் வெளியில் வந்தது. எடப்பாடி தரப்புக்கு ஆதரவு 90% வரை கூடியது. ஓபிஎஸ்சின் முக்கிய ஆதரவாளர்களே அணி மாறினர். இனியும் விட்டால் தான் முற்றிலும் ஓரங்கட்டப்படுவோம் என ஓபிஎஸ் நீதிமன்றம் சென்றார். தனி நீதிபதி தீர்ப்பு எடப்பாடிக்கு ஆதரவான நிலையில் நள்ளிரவு இரு நீதிபதிகள் அமர்வு தீர்ப்பு ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவாக மாறியது.

     நீதிமன்ற உத்தரவால் ஏற்பட்ட குழப்பம்

    நீதிமன்ற உத்தரவால் ஏற்பட்ட குழப்பம்

    நீதிமன்ற அமர்வு தீர்ப்பு பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தியது. கட்சியில் அதிகாரம் பெற்ற அமைப்பு பொதுக்குழுதான், அதில் இன்ன தீர்மானம் தான் கொண்டுவரவேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பளிக்க முடியுமா என ஒரு தரப்பும், ஏன் அளித்தால் என்ன என மறு தரப்பும் கேள்வி எழுப்பியது. தற்போது எடப்பாடி தரப்பின் முன் உள்ள பிரச்சினை என்ன பார்ப்போம்.
    எடப்பாடி தரப்பினரிடம் 90 சதவீத கட்சி அணியினர் உள்ளனர். எளிதாக வெல்ல வாய்ப்பிருந்த நிலையில் நீதிமன்ற தீர்ப்பு பாதகமாக அமைந்துள்ளது. 23 தீர்மானம் தவிர ஒரு தீர்மானம் கூட போடக்கூடாது என கண்டிப்புடன் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நீதிமன்ற உத்தரவை மீறி பொதுக்குழுவுக்கு உச்சபட்ச அதிகாரம் உள்ளது என தீர்மானம் நிறைவேற்றி தலைமையை கைப்பற்றலாம், பின்னர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை எதிர்கொள்ளலாம் என்கிற வாதம் வைக்கப்படுகிறது. ஆனால் அதற்கான சாத்தியம் குறைவு, இது மேலும் சிக்கலை அதிகமாக்கிவிடும் என்கின்றனர்.

     வாக்கெடுப்பை நோக்கி நகருமா?

    வாக்கெடுப்பை நோக்கி நகருமா?

    90% மேல் பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவு உள்ளதால் இன்றைய பொதுக்குழுவில் தனது திட்டத்தை நிறைவேற்ற எடப்பாடி தரப்பு முயலும் அப்படி நிறைவேற்ற முயன்றால் எடப்பாடி தரப்பிடம் உள்ள ஒரே வாய்ப்பு வாக்கெடுப்பு என்கிறனர் அரசியல் விமர்சகர்கள். தீர்மானம் தானே நிறைவேற்ற முடியாது, 100 அல்லது 1000 பொதுக்குழு உறுப்பினர்கள் ஒற்றைத்தலைமை கோரிக்கை வைத்து முழக்கமிட்டு அது அனைவராலும் அங்கீகரிக்கப்பட்டு வாக்கெடுப்பை நோக்கி நகர்ந்தால் யார் என்ன செய்ய முடியும் என்கிற கேள்வி வைக்கப்படுகிறது.

     எதுவும் நடக்கலாம், விட்டுத்தர எடப்பாடி தரப்பு தயாராக இல்லை

    எதுவும் நடக்கலாம், விட்டுத்தர எடப்பாடி தரப்பு தயாராக இல்லை

    அப்படி ஒற்றைத்தலைமை கோஷம் பெரிதாக மாறி பொதுக்குழுவில் ஒற்றைத்தலைமைக்கு ஆதரவாக வாக்கெடுப்பு நடத்தினால் அதை ஆவணப்படுத்தி பின்னர் நீதிமன்றம் செல்ல வாய்ப்புள்ளது. இதை நீதிமன்றமும் மறுக்க வாய்ப்பில்லை. அப்படி நடந்து அதை முடிவாக்கி தனது முடிவை எடப்பாடி தரப்பு அமல்படுத்தும் ஒரு வாய்ப்பு உள்ளது, ஏனென்றால் தீர்மானம் தான் நிறைவேற்ற முடியாது வாக்கெடுப்பு நடத்துவது குறித்து நீதிமன்றம் எதுவும் சொல்லவில்லை ஆகவே அப்படி நடக்கவும் வாய்ப்புள்ளது என்கின்றனர் அரசியல் ஆர்வலர்கள்.

     இனி ஓபிஎஸ்சின் நிலை என்ன?

    இனி ஓபிஎஸ்சின் நிலை என்ன?

    கட்சி முழுவதும் எடப்பாடி கையில் உள்ள நிலையில் நீதிமன்ற தீர்ப்பு ஒன்றை மட்டுமே வைத்து வெகுகாலம் ஓபிஎஸ் காலந்தள்ள முடியாது. இதன் பின்னர் வரும் நிகழ்வுகளில் அவர் முற்றிலும் ஓரங்கட்டப்படுவார், ஏனென்றால் முழுதுமாக மோதல் வெளியில் வந்துவிட்டது ஆகவே இனி ஒற்றுமை என்றால் அது ஓபிஎஸ் விட்டுத்தருவதாக மட்டுமே இருக்கும் என்கின்றனர் அரசியல் ஆர்வலர்கள்.

     பரபரப்பான இறுதிக்கட்டத்தை நோக்கி பொதுக்குழு

    பரபரப்பான இறுதிக்கட்டத்தை நோக்கி பொதுக்குழு

    எது நடந்தாலும் சட்டத்துக்கு உட்பட்டே நடக்கவேண்டும், ஆகவே நடப்பது எப்படி என யாரும் கணிக்க முடியாது. ஆனாலும் தனது நிலைப்பாட்டிலிருந்து எடப்பாடி தரப்பு இறங்கிவர வாய்ப்பில்லை என்பதால் பொதுக்குழு பரபரப்பாக நகரவே வாய்ப்புள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+