India
  • search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"லீக் ஆன சஸ்பென்ஸ்".. படாரென போட்டுடைத்த ராகுல்.. குறுக்கே வந்த நடிகை ஸ்ருதிகா.. கிளம்பியது சர்ச்சை

Google Oneindia Tamil News

சென்னை: கோடிக்கணக்கான ரசிகர்கள் பெற்றுள்ள குக் வித் கோமாளி நிகழ்ச்சி குறித்த சர்ச்சை இன்னும் ஓயவில்லை.. என்ன நடந்தது?

இப்போதெல்லாம் காமெடியைவிட அந்த காமெடியின்போது நடக்கும் விஷயங்கள்தான் அதிக வரவேற்பை பெற்றுவிடுகிறது.. இப்படி ஒரு டிரெண்டை முதன்முதலில் உருவாக்கிவிட்டதே விஜய் டிவி என்றே சொல்லலாம்.

அந்தவகையில், ரசிகர்களின் இடம்பிடித்தது, 'குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி.. ஆரம்பத்திலேயே மிகப்பெரிய வரவேற்பைஇந்த நிகழ்ச்சி மிகப்பெரிய அளவில் பிரபலம் அடைந்தது..

இன்றுவரை அதிக பார்வையாளர்களை கடந்த நிகழ்ச்சியாக குக் வித் கோமாளி உள்ளது.. பரபரப்பான வாழ்க்கை சூழ்நிலையில் பலருக்கும் "ஸ்ட்ரெஸ் பஸ்ட்டர்" என்ற பெயரையும் இந்த நிகழ்ச்சி பெற்று தந்துள்ளது..

 கச்சநத்தம் 3 பேர் கொடூர படுகொலை- குற்றவாளிகள் 27 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பு கச்சநத்தம் 3 பேர் கொடூர படுகொலை- குற்றவாளிகள் 27 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பு

 பிளஸ் பாயிண்ட்

பிளஸ் பாயிண்ட்

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்திழுப்பதும் இந்த நிகழ்ச்சியின் இன்னொரு பிளஸ் பாயிண்ட்டாக இருந்து வருகிறது.. "இந்த ஷோவில் போட்டியாளராக கலந்துகொண்டதே தன்னை மன அழுத்தத்தில் இருந்து மீள செய்தது" என்று ஒருமுறை நடிகை பவித்ரா லக்ஷ்மி ஓபனாகவே சொல்லியிருந்தார்.. அதேசமயம், இந்த நிகழ்ச்சியிலும் சர்ச்சைகள் வெடித்துள்ளதுதான் ஆச்சரியமாக உள்ளது.

சக்ஸஸ்

சக்ஸஸ்

அதாவது, கோமாளிகள் செய்யும் காமெடியுடன், போட்டியாளர்கள் என்ன சமையல் சமைக்க போகிறார்கள் என்பதை சஸ்பென்ஸ்ஸாக நடுவர்கள் சொல்வதுதான் இந்த நிகழ்ச்சிக்கு ஆணிவேராக இருந்து வருகிறது.. நடுவர்கள் என்ன சமைக்க சொல்ல போகிறார்களோ என்பதுதான், பார்வையாளர்களுக்கும் சுவாரஸ்யத்தை கூட்டி வந்தது.. இந்த நிலையில் சமீபத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ராகுல் தாத்தா, இந்த நிகழ்ச்சி ஒரு பேட்டி தந்துள்ளார்.

மெசேஜ்

மெசேஜ்

அதில், "நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முதல் நாளே நாங்கள் என்ன சமைக்க வேண்டும் என்பதை எங்களுக்கு மெசேஜ் அனுப்பி விடுவார்கள்" என்று ஒரே போடாக போட்டார். முதலிலேயே சொல்லிவிடுவார்களா? இதையா இத்தனை காலம் நம்பி கொண்டிருந்தோம்? என்று பார்வையாளர்களுக்கு அதிர்ச்சியை தந்திருந்தது இந்த பேட்டி..

 டிஷ் என்ன?

டிஷ் என்ன?

காரணம், அதில் confusion ரூம் என்ற ஒன்று வைக்கப்பட்டு இருக்கும்.. அதற்குள் கோமாளிகள் ஒவ்வொருவராக சென்று என்ன சமையல் செய்ய வேண்டும் என்பதை பற்றி கேட்டு குறிப்பு எழுதி எடுத்து வந்து, அதை குக்கிடம் சொல்லி, அந்த டிஷ் செய்ய சொல்ல வேண்டும்... அப்படியானால் அந்த ரூமுக்குள் சென்று கேட்டு வருவதெல்லாம்கூட முன்கூட்டியே திட்டமிட்ட ஒன்றுதானா என்ற கேள்விகள் எழுந்து பரபரப்பை கூட்டியது.

 நடிகை ஸ்ருதிகா

நடிகை ஸ்ருதிகா

ஆனால், இப்படி ஒருசர்ச்சை கிளம்பிய உடனேயே டைட்டில் வின்னர் ஸ்ருதிகா, ராகுல் பேச்சை மறுத்து பேசினார்.. என்ன சமைக்க வேண்டும் என்பதை எங்களுக்கு முன்கூட்டியே சொல்ல மாட்டார்கள், செட்டிற்கு நாங்கள் சென்ற பின்புதான் அங்கு என்ன சமைக்க வேண்டும் என்று சொல்வார்கள்.. அதிலும், நாங்கள் எப்படி வித்தியாசமாக சமைக்க முடியும் என்று சிந்தித்து சமைப்போம்" என்று விளக்கம் தந்திருந்தார்...

 சக்ஸஸ்

சக்ஸஸ்

அப்படியானால் ராகுல் தாத்தா ஏன் அப்படி சொல்ல வேண்டும்? அவரை ஏன் யாரும்கண்டிக்கவில்லை? கேள்வி கேட்கவில்லை என்றும் தெரியவில்லை. அதுமட்டுமல்ல, எந்த குக்கிற்கு எந்த கோமாளி என்பதைகூட முன்கூட்டியே முடிவு செய்துவிடுவார்கள் என்று கடந்த சீசனின்போதும் இப்படித்தான் ஒரு செய்தி வெளியானது.. இதெல்லாம் உண்மையா? அல்லது யாராவது கிளப்பி விடுவதா? என்று தெரியவில்லை.. என்னதான் வதந்திகள், சர்ச்சைகள் வட்டமடித்தாலும், ரசிகர்கள் இந்த நிகழ்ச்சிக்கு குறையவில்லை என்பதே இதன் ஆகச்சிறந்த சக்ஸஸ்..!

English summary
Which information is true and Rahul thatha breaks the secret of Cook with Komali குக் வித் கோமாளியின் சீக்ரெட்டை உடைத்து பேட்டி தந்துள்ளார் ராகுல் தாத்தா
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X