எது பெஸ்ட்? Old tax regime? அல்லது New tax regime? இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடந்தகால பாஜக ஆட்சியில் வருமானவரி தாக்கல் செய்வதில் இரண்டு வகையான நடைமுறைகள் கொண்டுவரப்பட்டது. இவ்வாறு இரண்டு வழிமுறைகளைப் பயன்படுத்தி வரி செலுத்துவதில் இன்னும் மக்கள் மத்தியில் குழப்பம் நீடிக்கிறது. எந்த முறையை தேர்ந்தெடுப்பது நன்மை தரும்? என்பது பற்றித் தெரிந்து கொள்ள வேண்டி சில விளக்கங்கள் இங்கே அளிக்கப்பட்டுள்ளன.

கடந்த ஜூன் 9 ஆம் தேதி ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற மிகப் பெரிய விழாவில் மூன்றாவது முறையாகப் பிரதமராகப் பதவியேற்றார் மோடி. அவருடன் பலரும் மத்திய அமைச்சர்களாகப் பதவியேற்றனர். மத்திய நிதியமைச்சராக மீண்டும் நிர்மலா சீதாராமன் பதவியேற்றார். இன்று அவர் 2024 ஆம் ஆண்டுக்கான முழு பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இதன் மூலம் மொரார்ஜி தேசாய் சாதனையை நிர்மலா சீதாராமன் முறியடித்திருக்கிறார்.

Nirmala Sitharaman union budget 2024

அதாவது நிதியமைச்சர் சீதாராமன் தொடர்ச்சியாகத் தனது 7வது பட்ஜெட்டை தாக்கல் செய்வதன் மூலம், ஏறக்குறைய அறுபது ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவின் நிதியமைச்சராகத் தொடர்ந்து ஆறு பட்ஜெட்டுகளை தாக்கல் செய்த மொரார்ஜி தேசாயின் சாதனையை முறியடித்திருக்கிறார்.

கடந்தகால பாஜக ஆட்சியில்தான் வருமானவரி தாக்கல் செய்வதில் இரண்டு வகையான நடைமுறைகள் அமல்படுத்தப்பட்டது. அதாவது Old tax regime என்றும் New tax regime என்று இரண்டு வழிமுறைகளைப் பின்பற்றி வருமான வரியைத் தாக்கல் செய்யலாம் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார். ஆனால், வரி செலுத்துவோர் மத்தியில் இன்னும் இந்தப் புதிய வருமான வரி தாக்கல் செய்யும் முறைக்கும் பழைய வருமான வரி தாக்கல் செய்யும் முறைக்கு என்ன மாதிரியான வேறுபாடுகள் உள்ளன என்பதில் அறிந்து கொள்வதில் குழப்பம் உள்ளது. ஆகவே இவற்றிற்கு இடையே உள்ள வேறுபாடு என்ன? அதைப் பற்றிப் பார்க்கலாம்.

பழைய முறையை தேர்ந்தெடுப்பது சிறந்ததா? புதிய முறை நல்லதா என்பது பற்றிய சில விளக்கங்களை அளித்துள்ளோம். இதைக் கொண்டு இரண்டிலும் உள்ள நன்மை, தீமைகளை அறிந்துகொள்ளலாம்.

பழைய வரி விதிப்பு முறையில் அளிக்கப்பட்டுள்ள சலுகைகள் என்ன?:

₹ 2.5 லட்சம் வரை விலக்கு அளிக்கப்படுகிறது

₹ 2.5 லட்சத்துக்கு மேல் ₹ 3 லட்சம் வரை: 5% வரி

₹ 3 லட்சத்திற்கு மேல் ₹ 5 லட்சம் வரை: 5% வரி

₹ 5 லட்சம் முதல் ₹ 6 லட்சம் வரை: 20% வரி

₹ 6 லட்சம் முதல் ₹ 9 லட்சம் வரை: 20% வரி

₹ 9 லட்சம் முதல் ₹ 10 லட்சம் வரை: 20% வரி

₹ 10 லட்சம் முதல் ₹ 12 லட்சம் வரை: 30% வரி

₹ 12 லட்சத்துக்கு மேல் ₹ 15 லட்சம் வரை: 30% வரி

₹ 15 லட்சத்திற்கு மேல்: 30% வரி

புதிய வரி விதிப்பு:

₹ 2.5 லட்சம் வரை விலக்கு அளிக்கப்பட்டுள்ளது

₹ 2.5 லட்சத்துக்கு மேல் ₹ 3 லட்சம் வரை விலக்கு அளிக்கப்பட்டுள்ளது

₹ 3 லட்சத்துக்கு மேல் ₹ 5 லட்சத்துக்கும் உள்ளாக 5% வரி

₹ 5 லட்சம் முதல் ₹ 6 லட்சம் வரை 5% வரி

₹ 6 லட்சம் முதல் ₹ 9 லட்சம் வரை 10% வரி

₹ 9 லட்சம் முதல் ₹ 10 லட்சம் வரை 15% வரி

₹ 10 லட்சம் முதல் ₹ 12 லட்சம் வரை: 15% வரி

₹ 12 லட்சத்திற்கு மேல் தொடங்கி ₹ 15 லட்சம் வரை 20% வரி

₹ 15 லட்சத்திற்கு மேல் 30% வரி

பழைய வரி முறையா? அல்லது புதிய வரி முறையா?

இரண்டு வரி முறைகளை மதிப்பிடும் போது, ​​கிடைக்கக்கூடிய விலக்குகளைக் கருத்தில் கொள்ள வேண்டும். உங்கள் மொத்த வருமானத்திலிருந்து இவற்றைக் கழிப்பதன் மூலம் நிகர வரிக்குட்பட்ட வருமானத்தை நிர்ணயிக்க முடியும். பழைய வரி முறையின் கீழ் வரி விதிக்கக்கூடிய வருமானத்தை புதிய வரி முறையுடன் ஒப்பிட்டு பார்த்தன் மூலம் வருமானத்திற்கு ஏற்ப நல்ல முடிவை எடுப்பது சிறந்த பலனை அளிக்கும்.

உங்கள் சம்பளத்திலிருந்து பிடிக்கப்படும் டிடிஎஸ் தொகையை அளவிட்டுச் சரியான வரி கழிக்கப்படுகிறதா என்பது உறுதிசெய்ய வேண்டும். கூடவே நீங்கள் தேர்ந்தெடுத்த வரி முறையைப் பற்றி உங்கள் முதலாளிக்கோ அல்லது நிறுவனத்திற்கோ தெரிவிப்பது முக்கியம். கூடுதலாக, வீட்டுச் சொத்து, மூலதன செய்துள்ள பத்திரங்கள், வேறு வகையில் வணிகம் அல்லது தொழில் ஆகியவற்றில் ஏற்படும் இழப்புகள் உங்களது வரியில் முறையாகக் காட்டப்பட வேண்டும். அது வரித் தொகையில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்த உதவும்.

பழைய வரிமுறை அல்லது புதிய வரி விதி ஆகிய இரண்டிற்கும் இடையிலான முடிவை எடுப்பதற்கு முன் முறையாக உங்களது வருமான அளவைக் கொண்டு நம்மை மற்றும் குறைபாடு என இரண்டு காரணங்களை ஒப்பிட்டு எடைபோட்டுப் பார்ப்பது சிறந்தது. பழைய வரி முறையானது சேமிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கிறது. அதற்காக வரி பலன்களை அளிக்கிறது. பிரிவு 80TTB இன் கீழ் மூத்த குடிமக்கள் சில பலன்களைப் பெறமுடியும்.

இந்த முறையானது கணிசமான வட்டி வருமானம் உள்ளவர்களுக்குப் பயன் தருகிறது. இதற்கு நேர்மாறாக, புதிய வரிவிதிப்பு முறையானது வரி தாக்கல் செய்வதை முதலில் எளிதாக்குகிறது. குறைந்த வருமானம், குறைவான முதலீடுகள் என வரையறுக்கப்பட்ட விலக்குகளைக் கொண்ட தனிநபர்களுக்கு நன்மை அளிக்கிறது. இரண்டு ஆட்சிகளும் வெவ்வேறு வரி செலுத்துவோரின் சுயவிவரங்களைப் பூர்த்தி செய்கின்றன. தனிப்பட்ட நிதிச் சூழ்நிலைகளின் அடிப்படையில், தனிப்பயன்களை வழங்க வலியுறுத்துகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+