சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எல்லாம் போச்சு.. எடப்பாடிக்கு எதிராக திரும்பிய "பை-லா".. அடுத்து என்ன செய்வார் இபிஎஸ்? 3 ஆப்ஷன்ஸ்!

Google Oneindia Tamil News

சென்னை: ஜூலை 11ம் தேதி அதிமுக பொதுக்குழு நடந்தது செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது.

Recommended Video

    OPS வசமான அதிமுக

    கடந்த ஜூலை 11ம் தேதி அதிமுக பொதுக்குழு சென்னை வானகரத்தில் நடைபெற்றது. ஓ பன்னீர்செல்வம் இந்த பொதுக்குழுவை ஏற்றுக்கொள்ளாத நிலையில் இதற்கு எதிராக வழக்கு தொடுத்தார்.

    உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று.. வழக்கு உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கு கடந்த வாரம் விசாரிக்கப்பட்டது.

    இந்த நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. நீதிமன்ற ஜெயசந்திரன் வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கினார்.

     மாநாடு.. “ரிப்பீட்டு” பழனிசாமிக்கு அடி! ஓபிஎஸ் நீக்கம், ஒற்றைத் தலைமை எதுவும் செல்லாது மாநாடு.. “ரிப்பீட்டு” பழனிசாமிக்கு அடி! ஓபிஎஸ் நீக்கம், ஒற்றைத் தலைமை எதுவும் செல்லாது

     தீர்ப்பு என்ன சொல்கிறது

    தீர்ப்பு என்ன சொல்கிறது

    இன்று வழங்கப்பட்ட தீர்ப்பில் ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பில் கூறியுள்ளது. ஜூன் 23ம் தேதிக்கு முன் இருந்த நிலை தொடர வேண்டும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதாவது ஜூலை 23ம் தேதி நடந்த பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகள் செல்லும். அந்த பொதுக்குழுவில் எந்த பதவியும் உருவாக்கப்படவில்லை, நீக்கப்படவில்லை. அது தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஏற்றுக்கொண்டது

    ஏற்றுக்கொண்டது

    இதில் ஓ பன்னீர்செல்வம் வைத்த வாதங்கள் அனைத்தையும் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. இதனால் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளர் ஆனது செல்லாது என்று தீர்ப்பு வந்துள்ளது. இந்த வழக்கில் எடப்பாடிக்கு எதிராக பை லா ஒன்று திரும்பி உள்ளது. அந்த பை லா படி.. அதிமுகவில் பொதுக்குழுவை ஒருங்கிணைப்பாளர்- இணை ஒருங்கிணைப்பாளர் இருவரும் சேர்ந்துதான் கூட்ட முடியும். இந்த பை லாதான் தற்போது ஓ பன்னீர்செல்வத்திற்கு சாதகமாகவும், எதிராகவும் திரும்பி உள்ளது.

    பை லா

    பை லா

    இந்த பை லாபடி எடப்பாடி இனியும் பொதுக்குழுவை தனியாக கூட்ட முடியாது. அந்த பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்றாலும் கூட அதற்கு இருவரும் கையெழுத்து போட வேண்டும். இதனால் எடப்பாடி வெளியிட்ட அறிவிப்புகள், நியமனங்கள், பதவிகள் எல்லாம் செல்லாது. எடப்பாடிக்கு சாதகமாக தற்போது 3 ஆப்ஷன்ஸ் உள்ளது. இதில் 1 ஆப்ஷன் ஓ பன்னீர்செல்வத்துடன் சாதகமாக செல்வது. அவரிடம் சமாதானம் செய்வது.

    ஆப்ஷன்

    ஆப்ஷன்

    இரண்டாவது ஆப்ஷன் வழக்கில் மேல்முறையீடு செய்வது. உச்ச நீதிமன்றத்திற்கு சென்று மேல்முறையீடு செய்வது. மூன்றாவது ஆப்ஷன்படி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளின் பதவிக்காலம் முடியும் வரை எடப்பாடி பழனிசாமி காத்திருக்க வேண்டும். பெரும்பாலும் இதில் எடப்பாடி பழனிசாமி மேல்முறையீடு செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    English summary
    Which law turned against Edappadi Palanisamy and what is his next options?ஜூலை 11ம் தேதி அதிமுக பொதுக்குழு நடந்தது செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X