வேட்பாளரின் வெற்றியை தீர்மானிக்கும் தபால் ஓட்டுகளில் எது செல்லும் எது செல்லாது - இதோ 10 காரணங்கள்
தபால் ஓட்டுகளில் எது செல்லும், எது செல்லாது என்பதை அந்த தொகுதி தேர்தல் அதிகாரி முடிவு செய்வார் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
சென்னை: தபால் ஓட்டுகளில் எது செல்லும், எது செல்லாது என்பதை அந்த தொகுதி தேர்தல் அதிகாரி முடிவு செய்வார் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வாக்குச் சீட்டு உண்மையானது என்பதை நிரூபிக்க இயலாத வகையில் அது சேதமடைந்திருந்தால் அல்லது சிதைக்கப்பட்டிருந்தால் அது நிராகரிக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
Recommended Video
தமிழக சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்பட உள்ளன. 234 தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் மொத்தம் உள்ள 75 மையங்களில் எண்ணப்படுகிறது. காலை 8 மணிக்கு முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்படும். அதன் பிறகு மின்னணு வாக்கு எந்திரத்தில் பதிவான ஓட்டுகளை எண்ண உள்ளனர்.
இதற்கு முன்பு 500 தபால் ஓட்டுகள்தான் இருக்கும். ஆனால் இந்த தேர்தலில் 80 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகளும் தபால் ஓட்டு போடலாம் என தேர்தல் கமிஷன் அனுமதித்து இருந்ததால் தபால் ஓட்டுகள் அதிகரித்து விட்டன. ஒவ்வொரு தொகுதிக்கும் 1,500 முதல் 5 ஆயிரம் ஓட்டுகள் வரை தபால் ஓட்டுகள் உள்ளதால் பல தொகுதிகளில் வேட்பாளர்களின் வெற்றி தோல்வியை தபால் ஓட்டுகள் தீர்மானிக்க உள்ளது.

வெற்றியை தீர்மானிக்கும்
தபால் ஓட்டுகளில் எந்த ஓட்டு செல்லும், எது செல்லாது என்பதை முடிவு செய்யும் அதிகாரம் அந்த தொகுதி தேர்தல் அதிகாரியின் முடிவை பொறுத்தது. ஒவ்வொரு ஓட்டும் முக்கியம் என்பது சில ஓட்டுக்களில் தோல்வியைத் தழுவிய வேட்பாளருக்குத்தான் தெரியும். கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் பொது தேர்தலில் தபால் ஓட்டுகளில் பிரச்சினை ஏற்பட்டதால் 10க்குகும் மேற்பட்ட தி.மு.க. கூட்டணி வேட்பாளர்கள் தோல்வி அடைந்தனர். இந்த முறை அந்த மாதிரி நடக்காமல் இருக்க விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தபால் ஓட்டு எண்ணுவதை கண்காணிக்க ஒவ்வொரு வேட்பாளரும் அனுபவம் வாய்ந்த முகவர்களை நியமித்துள்ளனர்.

உறுதிமொழி
தபால் ஓட்டுகளை என்னென்ன காரணங்களுக்காக நிராகரிக்கலாம், தள்ளுபடி செய்யலாம் என்பது பற்றி தேர்தல் கமிஷன் 10 காரணங்களை கூறி உள்ளது. 13-C படிவ உறைக்குள் 13-Aபடிவத்தில் உறுதிமொழி இல்லாமல் இருந்தால் தள்ளுபடி செய்ய வேண்டும். உறுதிமொழி, வாக்காளரால் முறைப்படி கையொப்பமிடப்படாமல் இருந்தல் அல்லது சான்றொப்பமிட அதிகாரமுடைய அலுவலரால் முறைப்படி சான்றொப்பமிடப்படாமல் இருத்தல் அல்லது பிற வகையில் பெரிதும் குறைபாடாக இருத்தல், கண்டறியப்பட்டால் நிராகரிக்கலாம்.

ஒன்றுக்கு மேற்பட்ட ஓட்டு
உறுதிமொழியின் மீது காணப்படும் வாக்குச்சீட்டின் தொடர் எண், படிவம், '13-B'இன் உள் உறையில் மேலொப்பமிடப்பட்ட தொடர் எண்ணிலிருந்து வேறுப்பட்டிருத்தல் தெரியவந்தால் நிராகரிக்கலாம். யாதொரு வாக்கும் அதில் பதிவு செய்யப்படாமல் இருந்தால் அது செல்லாது. ஒன்றுக்கு மேற்பட்ட வேட்பாளருக்கு வாக்களிக்கப்பட்டிருப்பின் அது செல்லாது.

ஒட்டு நிராகரிப்பு
போலியான வாக்குச் சீட்டாக இருக்குமாயின் அது செல்லாது. வாக்குச் சீட்டு உண்மையானது என்பதை நிரூபிக்க இயலாத வகையில் அது சேதமடைந்திருந்தால் அல்லது சிதைக்கப்பட்டிருந்தால் அது நிராகரிக்கப்படும். தேர்தல் நடத்தும் அலுவலரால் வாக்காளருக்கு அனுப்பப்பட்ட உறையுடன் அது திருப்பி அனுப்பப்படவில்லையாயின் நிராகரிக்கப்படும்.

வாக்குச்சீட்டுகள் நிராகரிப்பு
எந்த வேட்பாளருக்கு வாக்களிக்கப்பட்டுள்ளது என்பது குறித்து ஐயத்திற்கிடமாக இருக்கும் வகையில் வாக்குச்சீட்டில் உள்ள குறி இருக்குமாயின் அது செல்லாது. வாக்களிப்பவரை இன்னாரென்று அடையாளம் காட்டும் வகையில் அடையாளக்குறியீடு அல்லது சொற்றொடர் எவையும் எழுதப்பட்டிருப்பின் அத்தகைய வாக்குச்சீட்டுகள் நிராகரிக்கப்படும் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications