White Paper: தமிழக போக்குவரத்து கழகங்களில் இழப்பு 381%.. 1 ரூபாய்க்கு வரவும் செலவும்!
சென்னை: தமிழக போக்குவரத்து கழகங்களின் இழப்பு என்பது 2011-12-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 381% ஆக அதிகரித்துள்ளதாக நிதி நிலைமை தொடர்பான வெள்ளை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று வெளியிட்ட நிதி நிலை அறிக்கையில் போக்குவரத்து கழகங்கள் தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

மாநில போக்குவரத்து கழகங்கள், தமிழ்நாடு போக்குவரத்து வளர்ச்சி நிறுவனங்களிடம் இருந்தும் அண்மையில் வங்கிகளிடம் இருந்தும் பெருமளவில் கடன்களைப் பெற்றுள்ளன. அதிக எண்ணிக்கையிலான பணியாளர்கள், ஓய்வூதியம், டீசல், வட்டிச் செலவினங்கள் போன்ற காரணங்களால் கடந்த 10 ஆண்டுகளில் தொடர்ந்து இழப்புகள் ஏற்பட்டுள்ளன.
பணியாளர் செலவு 119.16%
ஓய்வூதிய செலவு 365.99%
வட்டிச் செலவு 281.43%
என அதிகரித்துள்ளது.
அதாவது 2011-12-ல் ரூ7,249.48 கோடியாக இருந்த செலவு தற்போது ரூ13,353.77 கோடியாக அதிகரித்துள்ளது. 10 ஆண்டுகளில் ரூ6,104.29 கோடி (84.20%) அதிகரித்திருக்கிறது.
போக்குவரத்து கழகங்களின் இயக்க வருவாய் 2011-12-ல் ரூ6168.80 கோடி; 2019-20-ல் ரூ9027.கோடி; 2020-21-ல் ரூ3,580.15 கோடி.
அனைத்துப் போக்குவரத்து நிறுவனங்களின் இயக்க வருவாய் அவற்றின் பணியாளர் செலவுகள், ஓய்வூதிய செலவுகளைக் கூட மேற்கொள்ள போதுமானதாக இல்லை.
மாநில போக்குவரத்து நிறுவனங்கள் இயக்கும் வாகனங்கள் ஒரு கிலோ மீட்டருக்கு ரூபாய் 59.15 இழப்பை ஏற்படுத்துகின்றன.
2011-12-ம் ஆண்டில் போக்குவரத்து கழகங்களின் இழப்பு ரூ8761.89 கோடி.
2020-21-ம் ஆண்டில் போக்குவரத்து கழகங்களின் இழப்பு ரூ42,143.69 கோடி.
அதாவது போக்குவரத்து நிறுவனங்களின் இழப்பு 381% ஆக அதிகரித்துள்ளது.
இதற்கு காரணங்கள்:
கட்டண உயர்வு இல்லாமல் டீசல் விலையில் அடிக்கடி திருத்தம்
பொருள் மேலாண்மை, செலவு, நிர்வாக குறைபாடுகள் ஆகியவை அதிக கொள்முதல் செலவுகளுக்கு காரணம்.
10 ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் அதிக ஊழியர், ஓய்வூதிய செலவு முக்கிய காரணிகள்.
1 கிலோ மீட்டர் தொலைவுக்கு வாகனங்களை இயக்க செலவு ரூ96.75.
1 கிலோ மீட்டர் தொலைவுக்கு கட்டணம் வசூல் ரூ37.60
1 கிலோ மீட்டர் தொலைவு இயக்கப்படுவதால் நட்டம் ரூ59.15
அனைத்து போக்குவரத்துக் கழகங்களின் ஒவ்வொரு ரூபாய்க்குமான வருவாய், செலவு விவரங்கள்:


-
AMMK: அமமுக போட்டியிடும் 11 தொகுதியின் உத்தேச பட்டியலை கொடுத்த தினகரன்! கோவில்பட்டி எங்கே? -
தமிழக சட்டசபையில் உங்கள் குரல் ஒலிக்குமா? நிருபர் கேட்ட கேள்வி! வைகோ சொன்ன ஸ்டன்னிங் பதில்! -
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
வேல்முருகனின் மெகா பிளான் இதுவா? வன்னியர் சமூக வாக்குகளை வளைக்க பார்க்கிறாரா? -
கங்கணம் கட்டிக்கொண்டு வேலை.. மொத்த தமிழக பாஜகவும் ஸ்டன் ஆகி நிற்குதே.. யாருங்க இந்த த பா ஜி? -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு?












Click it and Unblock the Notifications