Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பூனைக்கு மணி.. "டபுள் ஷாக்".. டி.ஆர்.பாலுவா.. ஆட்டத்தை கலைத்தாடும் பாஜக.. மறுபடியும் முதல்ல இருந்தா?

அண்ணாமலை திமுகவுக்கு 2 வழிகளில் செக் வைத்துள்ளது பரபரப்பாக பேசப்படுகிறது

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக பாஜக தற்சமயம் 2 விதமான வியூகங்களை கையில் எடுத்துள்ளதாக தெரிகிறது.. ஆனால், அவை எந்த அளவுக்கு அக்கட்சிக்கு பயன்தரும் என்பதும் எதிர்பார்ப்பாக உள்ளது.

ஒரு கட்சியின் பலவீனங்களில்தான் இன்னொரு கட்சியின் வளர்ச்சி ஆரம்பமாகிறது என்பது பொதுவான அரசியல் லாஜிக்.. இதை மிக சரியாக கையாண்டு, அதற்கேற்ப காய் நகர்த்தல்களை செய்து வருவது பாஜகதான்.

இந்த யுக்திதான் பெருவாரியான மாநிலங்களில் பாஜகவுக்கு கை கொடுத்து வருகிறது.. வலுவான கட்சியே என்றாலும்கூட, அதன் அடிப்படை பலவீனங்களை நோண்டி வெளியே கொண்டு வந்து, அதன்மூலம் அவர்களை டேமேஜ் செய்து, அந்த டேமேஜின் மூலம் தங்கள் இமேஜை உயர்த்த பார்க்கும் தந்திரம்தான்.

டேமேஜ்ஜா

டேமேஜ்ஜா

பல மாநிலங்களில் பாஜக கூட்டணி ஆட்சியை எட்டிப்பிடிக்க உதவியதே இந்த பாணி அரசியல்தான்.. தற்சமயம் தமிழகத்தை குறி வைத்து மேலிட பாஜகவின் அரசியல் நகர்ந்து வருகிறது.. அதேசமயம், திராவிட கட்சிகளின் முதுகில் சவாரி செய்துதான் தேர்தலை சந்திக்க வேண்டிய நிலைமையில்தான் பாஜக இருக்கிறது என்பதையும் மறுப்பதற்கில்லை.. அதற்கேற்றவாறு அதிமுகவில் நிலவும் பூசல்கள் மற்றம் பலவீனங்களை, பாஜகவின் மூலதனமாக்கி கொண்டதுடன், அதே அதிமுகவைதான் தேர்தலிலும் நம்பி உள்ளது. சுருக்கமாக சொல்லப்போனால், அதிமுகவை மறைமுகமாகவும், திமுகவை நேரடியாகவும் எதிர்க்கும் அரசியலை பாஜக மேற்கொண்டு வருவதாகவே தெரிகிறது.

மூலதனம்

மூலதனம்

திமுக அரசை எப்படியாவது டேமேஜ் செய்துவிட வேண்டும் என்ற முனைப்புடன் களமிறங்கி உள்ளது. இதற்காக கடந்த 6 மாத காலமாகவே திமுக அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்களையும், குற்றச்சாட்டுகளையும் தமிழக பாஜக சுமத்தி வருகிறது. ஆனால், இந்த குற்றச்சாட்டுகளில் ஒன்றைகூட ஆதாரப்பூர்வமாக தமிழக பாஜக நிரூபிக்கவில்லை என்பது வேறு விஷயம். அப்போதும்கூட மீண்டும் திமுகவை டேமேஜ் செய்ய அடுத்தக்கட்ட நகர்வை எடுத்துள்ளார் அண்ணாமலை.. நேற்றைய தினம் அண்ணாமலை பேசியபோது, திமுகவின் 2 முக்கிய புள்ளிகளுக்கு குறி வைத்து பேசினார்.

 யாரந்த 13 புள்ளி

யாரந்த 13 புள்ளி

அண்ணாமலை பேசியபோது, "திமுகவில் ஒரு வட்டத் தலைவர் தன்னுடைய சொத்து விவரங்களை வெளியிட தயாராக உள்ளாரா? முதல்வர் ஸ்டாலின், அவரின் குடும்ப உறுப்பினர்கள், பினாமிகள், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் ஆகியோரின் சொத்துப் பட்டியலை ஏப்ரல் முதல் வாரத்தில் வெளியிட உள்ளேன்.. இதுவரை முதல்வர் உள்பட 13 அமைச்சர்களின் ரூ. 2 லட்சம் கோடி மதிப்பிலான சொத்து விவரங்களை சேகரித்துள்ளேன். ஸ்டாலின் தொடங்கி அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் வரை சொத்து விவரங்கள், இந்தோனேசியாவில் திமுக அமைச்சர் ஒருவருக்கு சொந்தமான துறைமுகம் ஆகிய விவரங்களை தனித்தனியாக வெளியிட உள்ளேன்.

 பூனைக்கு மணி

பூனைக்கு மணி

அமைச்சர் உதயநிதி லெக்சஸ் கார் வாங்கியபோது, அதற்கு வரி செலுத்தாமல் இந்தியாவுக்குள் ஏமாற்றி கொண்டு வந்ததை கண்டறிந்து சிபிஐ வழக்குத் தொடர்ந்தது. இதுதொடர்பாக ஸ்டாலின், உதயநிதிக்கு எதிராக கொடுக்கப்பட்ட சாட்சி விவரங்களையும் ஏப்ரல் முதல் வாரத்தில் வெளியிடுவேன். 70 ஆண்டுகளாக பொறுத்துக் கொண்டிருந்தோம். தற்போது பூனைக்கு மணி கட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது. தமிழகத்தில் ஊழலை ஒழிக்காமல் அடுத்த அடி எடுத்து வைத்து எந்தப் பயனும் இல்லை. எங்கள் மீது எந்த குற்றச்சாட்டும் இல்லாததால் திமுகவை எதிர்த்து துணிச்சலாக கேள்வி கேட்கிறோம்.

சபரீசன்

சபரீசன்

முதல்வரின் மருமகன் சபரீசன் கட்டியுள்ள கை கடிகாரத்தின் மதிப்பு ரூ.14 கோடியாகும். அது எங்கிருந்து வந்தது? ஸ்டாலினின் குடும்பத்தினர் பயன்படுத்தும் கார்கள், முதல்வர் முன்பு என்னென்ன கடிகாரம் கட்டினார்? என்ன பொருள்களைப் பயன்படுத்தினார் என்ற அனைத்து விவரங்களும் வெளியிடப்படும். திமுக எம்.பி. டி.ஆர்.பாலுக்கு எத்தனை சாராய ஆலைகள் உள்ளன. அதன் சொத்து மதிப்பு, அவரின் ஆலையில் இருந்து மாதமாதம் டாஸ்மாக் கடைகளுக்கு எவ்வளவு மது பாட்டில்கள் விற்பனைக்கு செல்கின்றன என்ற அனைத்து தகவல்களும் ஏப்ரல் மாத அறிக்கையில் இடம்பெறும்" என்று பேசியிருந்தார்.

 டிஆர் பாலு

டிஆர் பாலு

சொந்த தொகுதி என்பதாலும், கோர்ட்டில் கேஸ் நடந்துகொண்டிருப்பதாலும், வெறும் விமர்சனத்துடன் நிறுத்தி கொள்ளும் அண்ணாமலை, சபரீசன், டிஆர் பாலு இருவரையும் குறி வைத்து பேசியிருப்பது சலசலப்பை உண்டுபண்ணி வருகிறது.. இதற்கு காரணம், இருவருமே டெல்லியில் லாபி செய்பவர்கள்.. இருவருமே தேர்தல் சமயத்தில் வியூகங்களை அமைத்து காய் நகர்த்துபவர்கள்.. இதில் ஒருவர் நேரடியாகவும், மற்றொருவர் மறைமுகமாகவும் தங்கள் பங்களிப்புகளை தந்துவந்தாலும், தேர்தல் காலங்களில், பலமாக இருந்து வருவது இவர்கள் 2 பேர்தான் என்பதாலேயே, இப்போதே அவர்களை டார்கெட் செய்ய பார்க்கிறது தமிழக பாஜக என்கிறார்கள்.

 வெப்சைட் ப்ரூப்

வெப்சைட் ப்ரூப்

அதுமட்டுமல்ல, இதுவரை திமுக மீதான எந்தஒரு சொத்துக்குவிப்பு ஊழல் குற்றச்சாட்டுகளையும் நிரூபிக்காத நிலையில், அடுத்தக்கட்டத்துக்கு அண்ணாமலை செல்வது, பெருத்த பலனை அவருக்கு பெற்று தராது என்கிறார்கள்.. செய்தியாளர்களிடம் அண்ணாமலை பேசும்போது, "திமுகவின் ஊழல்களை மக்கள் மன்றத்துக்கு கொண்டுவர பாஜக சார்பில் ஒரு மாதத்தில் இலவச தொலைபேசி எண், இணையதளம்,செல்போன் ஆப் உருவாக்க உள்ளோம்" என்று கூறியுள்ளார்.. திமுக ஊழல்கள் குறித்த ஆதாரங்கள் கையில் இருந்தால். அதை வைத்து போலீசில் அல்லது கோர்ட்டுக்கு போகலாமே? அதைவிட்டுவிட்டு, வெப்சைட்டில் போடுவதால் என்ன பலன்? வெப்சைட்டில் பதிவிடும் தகவல்கள் உண்மையா? என்று எப்படி தெரியும்? என்றும் சிலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

 குஷியோ குஷி

குஷியோ குஷி

தனித்து போட்டி என்ற விஷயத்தை அடிக்கடி அண்ணாமலை பேசிவருகிறார்.. இதுஒருபக்கம் தொண்டர்களை குஷிப்படுத்தவே அப்படி சொன்னதாக எடுத்துக்கொண்டாலும், நடைமுறையில் அது சாத்தியமில்லை என்பதை பாஜக மேலிடமே நன்கு அறிந்து வைத்துள்ளது.. இங்கே தனித்து போட்டியிடும் அரசியல் கட்சிகளின் நிலைமை என்ன ஆனது என்பதை தெரிந்தும்கூட, தமிழக பாஜக அதீத நம்பிக்கையுடன் இருப்பது அக்கட்சிக்கு பலனை பெற்று தராது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.. ஆக, திமுக மீதான லிஸ்ட்டை வெப்சைட்டுகளில் பதிவேற்றம் செய்வதாகட்டும், அல்லது தனித்து போட்டி என்ற நிலைப்பாடாகட்டும், இரண்டுமே பலன்தராது என்பதே தற்சமய யதார்த்த சூழலாகும்.. பார்ப்போம்...

வதந்தி மனிதர்

வதந்தி மனிதர்

சில தினங்களுக்கு முன்பு, திமுக ஐ.டி-விங் ஆலோசகரும், கவிஞருமான மனுஷ்யபுத்திரன், ஒன் இந்தியா தமிழுக்கு ஸ்பெஷல் பேட்டி ஒன்றை தந்திருந்தார்.. அந்த பேட்டியில் திமுக அமைச்சர்கள் குறித்து அண்ணாமலை தொடர்ந்து முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் குறித்த கேள்வியை முன்வைத்தோம்.. அதற்கு மனுஷ்யபுத்திரன் நம்மிடம் சொன்னதாவது: "அண்ணாமலை என்ன 24 மணி நேரமும் போராளியாக வாழ்ந்து கொண்டு இருக்கிறாரா? இந்த நாட்டில் இவ்வளவு பிரச்சனைகள் இருக்கே.. சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதற்காக, இவர் பேசாமல் போய் அந்த போலீஸ் ஆபீசர் வேலையை பார்க்கலாம் இல்ல? எதுக்கு எப்ப பார்த்தாலும் திமுகவை திட்டி பேட்டி தந்துட்டே இருக்கார்?

குட்டு குட்டு

குட்டு குட்டு

காரணம் என்னவென்றால், திமுக அரசு மீது குறை சொல்ல ஒன்னுமே இல்லை.. அவர்கள் சொல்லக்கூடிய விமர்சனங்களிலும் உடனுக்குடன் குட்டு வெளிப்பட்டு விடுகிறது.. இதுதான் அவங்களுக்கு பிரச்சனையே... அண்ணாமலை சொல்லக்கூடிய குற்றச்சாட்டுக்கு இதுவரைக்கும் ஏதாவது ஆதாரம் இருக்கா? அவர் சொன்ன எத்தனையோ குற்றச்சாட்டுகளுக்கு திமுக தரப்பில் விளக்கம் சொல்லப்பட்டுள்ளது.. அப்படி விளக்கம் சொன்னபிறகும், திமுக தந்த விளக்கம் தவறு என்று என்னைக்காவது வந்து அவர் நிரூபித்திருக்கிறாரா? அண்ணாமலை என்பவர் வதந்தியை பரப்பும் ஒரு நபர்.. அவ்வளவுதான்" என்று கூறியிருந்தது இங்கு நினைவுகூரத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+