”தமிழ்நாடு” பெயர் தந்த “தங்கம்”.. திராவிட மாடலை செதுக்கிய “சிங்கம்” - யார் இந்த அறிஞர் அண்ணா?
சென்னை: பள்ளி ஆசிரியராக பணியை தொடங்கி பத்திரிகையாளராக, எழுத்தாளராக, அரசியல்வாதியாக, நாடாளுமன்ற உறுப்பினராக, முதலமைச்சராக பதவி வகித்து நவீன தமிழ்நாட்டை செதுக்கிய பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் இன்று.
இன்றிலிருந்து சரியாக 114 ஆண்டுகளுக்கு முன்பு.. 1908 ஆம் ஆண்டு.. பட்டுக்கு பெயர் போன காஞ்சிபுரத்தில் ஒரு நடுத்தர நெசவாளர் குடும்பத்தில் பிறந்தது ஒரு ஆன் குழந்தை. அப்போது அந்த குழந்தையின் பெற்றோருக்கு தெரிந்திருக்காது. தமிழக அரசியலில் மிகப்பெரும் புரட்சியை தங்கள் குழந்தை ஏற்படுத்தும் என்று....
யார் அந்த மனிதர்...? அப்படி என்ன புரட்சியை அவர் நிகழ்த்தி காட்டினார்....? இன்றைய காலத்தை விட பன்மடங்கு சாதி ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த அந்த காலகட்டத்திலேயே சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்ட நடராஜன், பங்காரு அம்மாள் தம்பதியினருக்கு மகனாக பிறந்தவர் அண்ணாதுரை.

ஆசிரியர் டூ பத்திரிகையாளர்
சென்னை பச்சையப்பன் கல்லூரியில் முதுகலை பட்டப்படிப்பை நிறைவு செய்த அவர், அதன் பின்னர் பள்ளி ஆசிரியரானார். அதன் தொடர்ச்சியாக தான் படித்த பச்சையப்பன் கல்லூரியிலேயே பேராசிரியர் ஆனார் அண்ணா. அப்போதே சமூக நீதிக்கொள்கையை தனது மாணவர்களிடம் தீவிரமாக பரப்பிய அண்ணா, பள்ளி ஆசிரியரில் இருந்து பத்திரிக்கையாளராக அவதாரம் எடுத்தார்.

பெரியாருடன் பிரிவு
தந்தை பெரியாரின் கொள்கைகளால் கவரப்பட்டு அவருடன் இணைந்து தமிழுக்காகவும், சாதி ஏற்றத்தாழ்வுகளை களையவும் போராடினார். பின்னர் பெரியாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரைவிட்டு பிரிந்த அண்ணா, திராவிட முன்னேற்றக் கழகம் என்ற முதல் திராவிட அரசியல் கட்சியை 1949-ல் தோற்றுவித்தார். ஆனாலும் தன் வாழ்நாள் முடிவதும் பெரியார் காட்டிய வழியிலேயே வாழவும் ஆளவும் செய்தார் அண்ணா.

இந்தி எதிர்ப்பு
தமிழுக்காக அரும்பணியாற்றிய அண்ணா, 1938 ஆம் ஆண்டு பாரதிதாசன் உள்ளிட்ட தமிழ் பற்றாளர்களுடன் இணைந்து இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு தமிழை அழிக்க நினைத்தவர்களை அதிரவைத்தார். அதன் பின்னர் 1960 ஆம் ஆண்டு இந்திக்கு தனி அந்தஸ்த்து வழங்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாபெரும் இந்தி எதிர்ப்பு மாநாட்டை நடத்தி வெற்றி கண்டார் அண்ணா.

திமுகவின் முதல் வெற்றி
கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு முன்பாக தமிழர்கள் நடத்திய மிகப்பெரிய எழுச்சிப்போராட்டம் அது.
இந்த போராட்டங்களுக்கு பிறகு அண்ணாவுக்கு இருந்த மக்கள் செல்வாக்கு பன்மடங்கு பெருகியது. அதன் மூலம் 1967 ஆம் ஆண்டு திராவிட முன்னேற்ற கழகம் தமிழகத்தில் மிகப்பெரும் வெற்றியை பெற்று தமிழகத்தின் முதலமைச்சர் ஆனார் அண்ணா.

தமிழ்நாடு பெயர்
இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு முதலமைச்சரான முதல் மாநிலக் கட்சியின் தலைவர் என்ற பெருமையை பெற்றார் அண்ணா. தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்திடக்கோரி சங்கரலிங்கனார் உண்ணாவிரதம் இருந்த உயிர் துறந்த நிலையில், தான் முதலமைச்சர் பதவிக்கு வந்த பின்னர் மெட்ராஸ் மாகாணம் என்ற பெயரை தமிழ்நாடு என மாற்றம் செய்த அண்ணா, மும்மொழிக்கொள்கைக்கு எதிராக போராடி இருமொழிக்கொள்கையை பெற்றுத்தந்தார்.

திராவிட விதை
பட்டுக்கு பெயர் போன காஞ்சிபுரத்தில் பிறந்து பட்டிதொட்டி முதல் பட்டினக்கரை வரை புகழ்பெற்ற அறிஞர் அண்ணாவின் இறுதிச்சடங்கில் பல லட்சக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு தங்கள் அன்பை வெளிப்படுத்தினர். அன்று அண்ணா அரசியலில் விதைத்த திராவிட விதை தான், இன்றளவும் தேசிய கட்சிகளால் திராவிடக்கட்சிகளை வீழ்த்த முடியாததற்கு மூலகாரணம் எனலாம். அண்ணாவின் பிறந்த நாளான இன்று அவர் வழிகாட்டிய சமூக நீதியையும் சமத்துவத்தையும் காக்க உறுதியேற்ப்போம்.
-
2026ல் மீண்டும் திமுக! ஸ்டாலின்தான் முதல்வர்! பாலிமார்க்கெட் கணிப்பு சந்தையில் எகிறும் திமுக கிராஃப் -
பெரம்பூரில் தனி வீடு வாங்கும் விஜய்.. 'அந்நியன்' இமேஜை உடைக்க மாஸ்டர் பிளான்.. களமிறங்கிய ப்ரோக்கர் -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வேல்முருகனின் மெகா பிளான் இதுவா? வன்னியர் சமூக வாக்குகளை வளைக்க பார்க்கிறாரா? -
எங்க வந்து யாருக்கிட்ட.. கொங்கு மண்டலத்துக்கு உதயநிதி மாஸ் பிளான்.. களமிறங்கும் இளைஞரணி -
2026ல் மீண்டும் ஸ்டாலின் முதல்வர்.. 180+ இடங்களை வெல்லும் திமுக கூட்டணி.. ANS சர்வே முடிவுகள்! -
ஆமா.. தமிழக சட்டசபை தொகுதிகள் 234 தான் என நிர்ணயிக்கப்பட்டது எப்படி? ஏன் 300 இல்லை? சுவாரசியம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
2021ல் வென்ற தொகுதிகள் கூட அதிமுகவுக்கு கிடைக்காது.. சென்னையில் இன்னும் மோசம்.. சர்வேயில் அதிர்ச்சி -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
நம்பி நம்பி.. வெம்பி வெம்பி.. அல்வா போல அள்ளிட்டுப் போன அண்ணியார்! வேதனையில் திருமா எடுத்த முடிவு! -
தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி.. கடும் போட்டி கொடுக்கும் அதிமுக! விஜய் நிலைமை.. வெளியான புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications