Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

3 "தலை"கள்.. 3 மேட்டர்.. சைலண்ட் ஆக்‌ஷனில் 2 பேர்.. கடுப்பு வேற.. அதுக்குன்னு வீட்டு பக்கத்திலேயேவா?

எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளர் பதவியை பிடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது

Subscribe to Oneindia Tamil

சென்னை: விரைவில் அதிமுகவின் பொதுக்குழு கூட்டப்படவுள்ள நிலையில், கட்சி கூடாரமே பரபரத்து போய் உள்ளது.. இந்த கூட்டம் அதிமுக நிர்வாகிகளுக்கு மிக முக்கியமான கூட்டம் என்பதால், அதற்கான எதிர்பார்ப்புகளும் கூடி வருகின்றன.
எம்ஜிஆருக்கு பிறகு அதிமுகவின் பொதுச்செயலாளராக இருந்தார் ஜெயலலிதா... ஆட்சியை பிடித்து முதல்வரான பிறகும்கூட கட்சி தலைமை என்ற அந்த பதவியை யாருக்குமே விட்டுக்கொடுக்கவில்லை.

முதல்வர் & பொதுச்செயலாளர் = என்ற இந்த இரண்டு பதவியையுமே ஜெயலலிதா விடாமல் வைத்திருந்தார்.. சிறைக்கு செல்ல நேர்ந்தபோதுகூட அந்த பதவியை ஓபிஎஸ்-யிடம் ஒப்படைத்துவிட்டு சென்றாரே தவிர, திரும்பவும் தன்னிடமே அதை இறுதிவரை வைத்திருந்தார்.

 காய் நகர்த்தல்

காய் நகர்த்தல்

இப்படிப்பட்ட ஆளுமை நிறைந்தவரிடம் இருந்த அந்த முக்கிய பதவியைதான், தற்போது ஆளாளுக்கு ஏலம் போட ஆரம்பித்துள்ளார்கள்... இதில் பிரதானமாக காய் நகர்த்தி வருவது சசிகலாவும் - எடப்பாடியும் மட்டுமே.. இந்த இருவரில் எடப்பாடி பழனிசாமியின் பிளான் பக்காவாக ஒர்க் அவுட் ஆகி வருவதாகவும் கூறப்படுகிறது. ஜெ.போலவே, தனக்கும் ஒற்றை தலைமை மூலம் இந்த பதவி கிடைக்க வேண்டும் என்பதே எடப்பாடியின் திட்டம்..

 ரவீந்திரநாத்

ரவீந்திரநாத்

பொதுச்செயலாளர் பதவி குறித்த பிரச்சனை ஒவ்வொரு வருடமும் பரபரப்பாக கிளம்பும் என்றாலும், சில நாட்களுக்கு பிறகு, அப்படியே கிணத்தில் போட்ட கல் போன்ற விஷயம் அமுங்கிவிடும். இப்போது பொதுக்குழு விரைவில் கூட உள்ள நிலையில், மீண்டும் சூடுபிடித்துள்ளது.. இதற்கு முதல் அறிகுறியே ஓபிஎஸ்ஸின் சொந்த ஊரான பெரியகுளத்தில் தென்பட்டது.. தென்கரை பகுதியில் ஓபிஎஸ் வீட்டு அருகேயும், அந்த வீடு உள்ள சாலையிலும், எம்பி ரவீந்திரநாத் அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளிலும், ஒரு போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது..

 வீட்டுக்கு அருகிலேயே

வீட்டுக்கு அருகிலேயே

"விரைவில் அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளராக பதவி ஏற்க இருக்கும் திரு எடப்பாடி பழனிசாமி அவர்களை வாழ்த்தி வரவேற்கிறோம்" என்ற வாசகங்கள் அந்த போஸ்டரில் ஒட்டப்பட்டிருந்தன. எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகவும், ஓபிஎஸ்ஸுக்கு எதிராகவும் ஒட்டப்பட்ட இந்த போஸ்டர் ஏற்படுத்திய பரபரப்பு 2வது நாளாக இன்றும் தொடர்கிறது... நடக்க போகும் கூட்டம் எந்த அளவுக்கு களேபரமாக இருக்க போகிறதோ என்ற கலக்கமும் இந்த போஸ்டர் மூலம் தெரியவருகிறது.. அத்துடன் ஓபிஎஸ் மீதான அதிருப்திகள் அளவுக்கு அதிகமாக பெருகிவிட்டதும் புரியவருகிறது..

ஓபிஎஸ

ஓபிஎஸ

அதனால்தான், அவர் வீட்டுக்கு அருகிலேயே போஸ்டரை ஒட்டும் அளவுக்கு ஆதரவாளர்கள் நொந்து போயுள்ளது தெரிகிறது.. அதற்காக இங்குள்ள அதிருப்தியாளர்கள் அனைவரும் எடப்பாடிக்கு ஆதரவானவர்கள் என்று எடுத்து கொள்ள முடியாது.. ஓபிஎஸ் மீதான வருத்தம்தான் அதிகம்.. தர்மயுத்தம் நடத்தியபோதே உறுதியாக ஓபிஎஸ் இல்லை என்பதுடன், சசிகலா, தினகரன் இணைப்புக்கு தீர்மானம் போட்டுவிட்டு, அதிலும்கூட உறுதியாக இல்லாமல் ஒதுங்கிவிட்டாரே என்ற ஆதங்கம்தான் அவர்களிடம் காணப்படுவதாக கூறப்படுகிறது..

 கோகுல இந்திரா

கோகுல இந்திரா

அதனால், பொதுச்செயலாளர் பதவிக்கு ஓபிஎஸ் குறி வைத்த, சொந்த தொகுதியில் உள்ள அதிருப்திகளை முதலில் களைந்தால் மட்டுமே "போட்டி' என்ற விஷயத்தில் எடப்பாடியுடன் மோத முடியும் என்கிறார்கள். மற்றொரு பக்கம், எடப்பாடிக்கும் சிக்கல்கள் நிறைய இருக்கவே செய்கின்றன.. அதிருப்தியாளர்கள் அடங்கிய ஒரு டீம் அவர் மீது "பாய" ரெடியாக இருக்கிறதாம்.. இதற்கு காரணம், ராஜ்யசபா சபா எம்பி சீட்தான்.. 2 சீட்டுக்கு, 2 மாதமாக யோசித்து வந்தார்கள்..

 அப்செட்கள்

அப்செட்கள்

ஓபிஎஸ், ஈபிஎஸ் என ஆளுக்கு ஒருவர் தங்கள் வேட்பாளர்களை நிறுத்த, அதன்படியே வேட்பாளர்களும் இறுதி செய்யப்பட்டு, அறிவிக்கப்பட்டனர்.. ஆனால், இந்த பதவியை குறி வைத்து எத்தனையோ சீனியர்கள் வலை விரித்திருந்தனர்.. அத்தனை பேரும் அப்செட்டுக்கு ஆளாகி உள்ளனர்.. அதனால், அதிருப்தியாளர்கள் பெருகிவிட்டதால், இவர்கள் ஒருவேளை சசிகலா பக்கம் தாவுவார்களோ என்ற டென்ஷன் எடப்பாடி தரப்பை சூழ்ந்துள்ளது. செம்மலை உச்சக்கட்ட அப்செட்டில் இருப்பதாக தெரிகிறது.. தமிழ்மகன் உசேன், கோகுல இந்திரா, வளர்மதி போன்றோரும் சீட் கேட்டவர்கள்தான்.. இதில் பொன்னையனும் அடக்கம்.

 இடியாப்ப சிக்கல்

இடியாப்ப சிக்கல்

எனினும், நடக்க போகும் பொதுக்குழுவில் இதுகுறித்து கேள்வி எழுப்ப அதிருப்தியாளர்கள் தயாராகி வருகிறார்களாம்.. ஆக மொத்தம், இடியாப்ப சிக்கலுக்குள் சிக்கி கொண்டுள்ளது இரட்டை தலைமை.. அதில் இருந்து அவர்கள் எப்படி விடுவித்து கொண்டு வெளியே வர போகிறார்கள்? யாருக்கு பொதுச்செயலாளர் பதவி போக போகிறது? "நான்தான் பொதுச்செயலாளர்" என்று சொல்லிக் கொண்டிருக்கும் சசிகலாவின் பிளான் என்ன? என்பதே மிகப்பெரிய எதிர்பார்ப்புதான்.. !

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+