• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

யார் இந்த கார்த்திக்?.. ஊரெல்லாம் இவரை பற்றிதான் பேச்சு.. தோனிக்கே ஃபைன் போட்டவராமே.. சபாஷ் சல்யூட்!

Google Oneindia Tamil News

சென்னை: ஜார்க்கண்ட் மாநிலத்தின் போலீஸ் எஸ்பி கார்த்திக், விபத்தில் சிக்கிவிட்டார்.. இவர் விரைவில் குணமடைய வேண்டும் என்று பலரும் பதிவிட்டு வருகின்றனர்.. யார் இந்த கார்த்திக்?

ஜார்க்கண்ட் மாநிலம் ஹசாரிபாக் எஸ்.பியாக வேலை பார்த்து வருபவர் கார்த்திக்... ராம்கார்க் பகுதியில் ஒரு தேசிய நெடுஞ்சாலையில் ராஞ்சியை நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவருக்கு முன்னாடி ஒரு லாரி சென்று கொண்டிருந்தது.. அந்த லாரியை ஓவர்டேக் செய்ய முயன்றபோது, திடீரென ஒரு பெண் எதிரே ஸ்கூட்டரில் தன் குழந்தையுடன் வந்தார்..

தேர்தல் பணிகளில் புகார்... கரூர் கலெக்டர், எஸ்பி இடமாற்றம்... தேர்தல் ஆணையம் அதிரடிதேர்தல் பணிகளில் புகார்... கரூர் கலெக்டர், எஸ்பி இடமாற்றம்... தேர்தல் ஆணையம் அதிரடி

மோதல்

மோதல்

அவர் மீது மோதிவிடக்கூடாது என்பதற்காக காரை திருப்பும்போது, அந்த கார் கவிழ்ந்து லாரியின் அடியில் சென்று விட்டது.. இந்த விபத்தில், 6 பேரும் படுகாயமடைந்தனர். அந்த ஸ்கூட்டரில் வந்த ஒரு பெண்ணுக்கும், குழந்தைக்கும் எந்த ஆபத்தும் இல்லை.. லேசான காயத்துடன் தப்பிவிட்டனர்..

அனுமதி

அனுமதி

தகவலறிந்து சென்ற போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்துள்ளனர்.. கார்த்திக் விபத்தில் சிக்கிவிட்டார் என்ற தகவல் அறிந்ததுமே, ஜார்க்கண்ட் மாநில மக்கள் பதறிபோய்விட்டனர்.. விரைவில் கார்த்திக் குணமடைய வேண்டும் என்றும் தங்கள் பிரார்த்தனையை ஆரம்பித்துள்ளனர்..

 யார் இந்த கார்த்திக்?

யார் இந்த கார்த்திக்?

இவர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்.. சென்னையில் அயனாவரத்தில் பிறந்தவர்.. எம்ஐடியில் 2001ம் ஆண்டு பிடெக் முடித்தார்.. ஜார்க்கண்ட் மாநிலத்தில் லோஹர்தகா மாவட்டமானது நிறைய நக்சல்கள் அதிகமாக நடமாடும் பகுதி.. கடந்த 2000-ம் ஆண்டு, அஜய்குமார் என்ற எஸ்பி. நக்சல் தாக்குதலில் இறந்துவிட்டார்.. அப்படி ஒரு ஆபத்தான இடத்தில்தான் 2015ல் கார்த்திக் பொறுப்பேற்றார்.

நட்பு

நட்பு

முதல்வேலையாக, அந்த பகுதி இளைஞர்களை ஒன்று திரட்டினார்.. நட்பாய் பழக ஆரம்பித்தார்.. அவர்களுக்குள் வாலிபால் விளையாட்டு போட்டி வைத்தார்... இவரே துவக்கி வைத்து, பரிசுகளையும் தந்து ஊக்கப்படுத்தினார்.. இதனால் இளைஞர்கள் கார்த்திக்கிடம் நெருக்கமானார்கள். இதனால், ஏராளமான இளைஞர்கள் துப்பாக்கி ஏந்துவது தடுத்து நிறுத்தப்பட்டது.. 25 சிறுவர்களை நக்சல்களின் பிடியில் இருந்து மீட்டார்... 18 நக்சல்களும் சரணடைந்தனர்.

சுத்தம்

சுத்தம்

காடுகளும், முட்களும் நிறைந்த லோஹர்தகா என்ற அந்த நக்சல் பகுதியை சுத்தம் செய்தார்.. அழகான மரங்களை நடுவதற்கான முயற்சியில் ஈடுபடுபட்டார்.. பெஷ்ரர் என்ற பகுதியில் நீர்வீழ்ச்சிகளை ஏற்படுத்தினார்.. monsoon Peshrar என்ற சுற்றுலா வளர்ச்சித் திட்டத்தை ஊக்குவித்தார். மக்கள் செல்வதற்கு பயந்து நடுங்கிய அந்த நக்சல் பகுதி, பச்சை பசேல் என செழித்தோங்கியது.. அந்த இடத்தை நிறைய போட்டோக்களை எடுத்து, சோஷியல் மீடியாவில் பதிவிட்டு, லோஹர்தகா பகுதியை சுற்றுலா தளமாக்கிவிட்டார்..

வருமானம்

வருமானம்

அந்த மக்களின் வருமானத்துக்கும் வழி செய்து தந்தார்.. மாசத்துக்கு 6 முதல் 7 லட்சம் வரை வருமானம் கிடைத்து வருகிறது.. இதனால் வறுமையில் யார் பாதிக்கப்பட்டாலும் இந்த பகுதிக்கு குடியேறினால், பிழைத்து கொள்ளலாம் என்ற நம்பிக்கை பிறந்தது. இப்போது பொதுமக்கள் அங்கு குடும்பத்துடன் சென்று மகிழ்ச்சியாக நாட்களை கழிக்கிறார்கள். இப்படி ஒரு முயற்சிக்காக 2019-ல் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு "சாம்பியன் ஆஃப் சேஞ்" என்ற விருதை தந்து கௌரவித்தார்..

 ஹைலைட்

ஹைலைட்

ஹைலைட் இதைவிட இன்னொரு ஹைலைட் உள்ளது.. ராஞ்சியில் போக்குவரத்து துறை கண்காணிப்பாளராக பதவி வகித்த போது, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனிக்கு போக்குவரத்து விதிமீறலுக்காக அபராதம் விதித்தது இவர்தான்.. போக்குவரத்து அனைவருக்கும் ஒன்றுதான் என்பதை தோனிக்கு உணர்த்தியவர்.. சமுதாயத்தில் படுபயங்கரமாக கருதப்பட்ட நக்சல்களை திறன்மிக்க விளையாட்டு வீரர்களாக மாற்றிய பெருமைக்கு சொந்தக்காரர்தான் கார்த்திக்.. இவர் இப்போது பூரண குணமடைய வேண்டும் என்பதே அனைவரின் பிரார்த்தனையாக உள்ளது.

English summary
Who is Hazaribag SP Karthik in Jharkhand
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X